திருவரங்க திருமன்றாட்டம்....1 மனதின் கனத்த பொழுதுகள் செலுத்தும் திசைகளை கால்களால் தடுக்க முடிவதில்லை...தன்னிச்சையாய் அலைந்து திரிந்து முடிவில் பெரும்பாலான மனித கால்கள் தங்கள் நடையை முடிவுக்குக் கொண்டு வருமிடம் கோவில் என்பதை மறுப்பது ஆகக் கடினம்...குபேரனின் பூஜைக்கான மலர் தருவித்தலின் தாமதம் யஷனின் காதல் மனத்தின் கனம் என்பதறிந்து சபிக்கப்பட்ட யஷன் மேகத்தை தூதுவிடும் கவிதை வரிகள் மிகுந்த பாரம் சுமப்பவைகள்...காளிதாசனின் கால்கள் யஷனின் கால்களுக்குள் புகுந்து வடக்கு நோக்கி மேகப் பார்வையுடன் நடப்பதின் மேலதிக கனம் இந்த அரங்கனடிமையின் கால்களை உரக்கடையில் கொணர்ந்து சேர்த்ததை எங்ஙணமுரைப்பது? தொடர் மழையும் அதன் நம்பமுடியா தாக்கங்களும் விவசாயிகளின் வாழ்வை மூழ்கடிக்கும் முயற்சியில் பாதி வெற்றி பெற்றுவிட்டதைக் காண முடியும்...இக் கொடிய கணங்களில் எங்கள் வயலில் களையெடுக்கப்பட்ட பின்னான அவசியத் தேவையான யூரியா உரம் சென்னையில் தொடர்வண்டி காத்திருப்புக் கிடங்கில் கிடப்பதாகக் கேட்ட செய்தியும் நிற்காத மழையின் சப்தமும் அரங்கனின் உடல் நிறம் தாங்கித் தவழ்ந்து கொண்டிருக்கும் மேகங்களின் மேல் காளிதாசனின் கவி...
Posts
தனி மனித மனம் தனக்கிழைக்கப்பட்ட அல்லது தான் அனுபவித்த துன்ப நிகழ்வுகளை மறப்பதற்கே முயல்கிறது...சமுதாய பொதுமன எண்ண ஓட்டங்களிலும் அதை ஒற்றியே துன்ப நிகழ்வுகளோ அல்லது வெறுக்கத்தக்க நிகழ்வுகளோ வரலாற்றில் பதியப்பட்டிருந்தால்... அதை மறக்கவோ அல்லது சிந்தனையிலிருந்து வலிந்து அகற்றவோ நிகழ் சமுதாய அதிகார அரசியலமைப்புகளால் நுட்பமாகக் கற்றுத்தரப்படுகின்றன... மதம் சார்ந்த தாக்குதல்கள் இந்திய துணைக் கண்டமெங்கும் அழிக்க முடியாத வரலாற்று துன்ப எச்சங்களை விட்டுச் சென்றிருக்கின்றன...எனினும் துன்பம் தந்த நிகழ்வைக் கொண்டாட்டமாய் அல்லது வணங்கத்தக்க நிகழ்வாய் மாற்றியமைத்துவிட்டால் ஒரு சில நூற்றாண்டுகள் கடந்த சமுதாய மாந்தர்கள் ...தங்கள் வாழ்வின் நெடும் பயண எண்ணங்களில் அந்நிகழ்வைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்களாகவோ அல்லது நசுக்கப்பட்டவர்களாகவோ வாழ்ந்து முடிந்துவிடுவார்கள்... இது அரசியலின் அதிகாரத்திற்கான அவசிய கருவியாக பயன்பட்டதை மறுப்பதற்கு இடமில்லை...வரலாற்றின் கணக்குப் புத்தகத்தில் இஸ்லாமிய அரசர்களால் சிதைக்கப்பட்ட கோவில்கள் கணக்கில் அடங்காதவை...ஏன் கோவில்கள் அழிக்கப்படவேண்டுமென்ற சிந்தனையை இன்ற...
வேகமெனும் பூச்சி உன்னுள் எப்படி திடீரென உருக்கொள்கிறது? விரிக்க முடியாத வாழ்வின் சாலையில் ஏன் அதிவேகம் கூட்டி அப்படிச் செல்கிறது? சாலையை அகலப்படுத்துதல் சரளைகளை கொட்டி சமனித்தல் தார் உருக்கி ஊற்றி சக்கர நகர்விற்காக தயார் செய்தல் உன் ஆன்மா பார்த்திராதா குருட்டுச் செயல்களா...? உன் சக்கரங்களை சுழலச் செய்வதில் குழப்பமற்றிருக்கிறாயா... உன் ஆணவமோ அறிவோ கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருக்கிறதா...? உன் அனுபவமும் தியாகமும் வேகமாணியில் படிப்படியாய் மேலெழும்பி உச்சம் தொட்டிருக்கிறதா? இதெதுவும் இல்லாத ஒரு பூச்சியை நீயாக உருவாக்கி சாலையில் பறக்க விட்டிருக்கிறாய்? பார் இப்போது சாலையில் பயனிப்போரின் பார்வையில் ஆகச் சிறிய பூச்சியாய்....நீ ராகவபிரியன்
காலத்தின் ஆற்றங்கரையில் நிற்கிறேன்- குதித்தோடும் நினைவு வெள்ளெமென பெருகி நுரைத்து நகர்ந்தபடியிருக்கிறது- துணி துவைக்கும் சப்தங்களை சதா எழுப்பும் சங்கீதா... மெளனமான மீனொன்றாக காலைக் கவ்வுகிறாள்... கொரோணாவின் அலைகளில் அவள் மரணம் என் சப்தங்களை துவைத்தெடுக்கிறது.... சப்தமின்றி அந்த மீன் நகர்ந்து செல்ல... நதி விரைந்து கொண்டேயிருக்கிறது... சந்தியா வந்தனம் செய்யும் சடகோபனின் அர்க்கியங்கள் மேலேறி மிதக்கின்றன... விண்ணை நோக்கி துளித்துளியாய் புறப்பட்டு என் கண்ணின் வழியே பெருமழையாய் நதியில் இறங்குகிறது... மழை ஆற்றில் விழும் சப்தம் கோவிந்தம் தர்பயாமி.... என ஒரு துவக்காய் என்னைத் தள்ளிக் கொண்டே செல்கிறது... காலைக் கவ்விய அந்த சடகோபமீனின் உடலெங்கும் நாமங்கள் வழுக்கு கின்றன... கொரோணாவின் இரண்டாம் அலையின் நுரை ஆற்றுப் படிகளில் அப்பிக்கிடக்கிறது.... கால நதியின் சுழித்தோடும் மரணங்கள் மிதந்து கொண்டிருக்கும் மேற்பரப்பிலிருந்து திடீரென ஒரு மீன் துள்ளி வெளிவந்து கரைந்து நீந்தத்தொடங்க.... படியில் கிடத்திய துண்டை மீண்டும் தோளில் போர்த்தி குளிக்காமல் திரும்புகிறேன்... அணிச்சையாய் த...
இன்றைய தொடர் மரணச் சூழலின் அழுத்தம் விதவிதமான வடிவங்களில் பயத்தின் வாசலில் கோலங்கள் இட்டபடி இருக்கிறது...புள்ளிகளாகவும் புள்ளியியல் வடிவமாகவும் வாகனங்கள் ஏறி மிதித்த கோடுகளுடன் கூடியதாகவும் அழிந்தும் அழியாமலும் வளந்து கொண்டே இருக்கின்றன...கூடவே ஏனிந்த துயரத்திணிப்பை அரங்கன் உலக மாந்தர்களின் வாழ்வில் அறிவிப்பின்றி அரங்கேற்றுகிறான் எனப்புரியாமல் உறக்கமும் வராமல் கடந்த சில நாட்களாக இரவு முழுவதும் விழித்தும் உறங்கியுமாகிக் கிடக்கிறேன்..அரங்கன் தனது இருப்பின் அவசியத்தை அவ்வப்போது நிரூபித்தபடியிருப்பது நிரூபணமான ஒன்று...மிருஷ்ட்டான பூஜைகள் செய்யப்படவில்லை என்பதை அரங்கன் இந்த அடியவன் மூலம் உலகிற்கு எடுத்துச் சொல்லியும் கேட்பார் இல்லை...இனி ஆன்மீக எழுத்துக்களை உருவாக்குவதில்லை என்ற எனது முடிவை மறு பரிசீலனை செய்ய அரங்கன் உத்தரவிடுகிறான்...அரங்கன் இருப்பு அசைக்க முடியாதது...ஆனால் எனது ஆன்மீக எழுத்தின் தாக்கம் அசைக்க வேண்டியவர்களை ஆணவத்திற்கு ஆட்படுத்தி எனது இருப்பை அசைத்துப் பார்ப்பதை அரங்கனிடம் கூறுகிறேன்...வெளியே குடுகுடுப்பைக் காரனின் உளறல் புரிபடவில்லை...மணி விடிவதற்கு முன்னான பின்னிரவி...
பனவனும் அரங்கனும் மார்கழியும் அரையர்சேவையும்...6 அரங்கனைக் காண்பது எனும் தத்துவம் பக்தியின் ஆழ் நிலை மனதின் பார்வைகளைப் பொறுத்தது...அது உலக மனிதர்கள் காணும் சராசரி பார்வைகளின் புரிதல் எனும் உளவியல் கூறுகளையும் கடந்த புரிதலுக்கு அப்பாற்பட்ட நிலை...ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் மனித மனங்களுக்கு எட்டாத அரங்கனின் உருவ நிஜத்தை அவனின் இருப்பை எங்கும் எல்லாமுமாய் பாவித்திருப்பவனை பக்தி வரலாற்றில் பதித்தே சென்றிருக்கிறார்கள்...ஆச்சாரியர் நிகம்மாந்த மஹாதேசிகர் இந்த அரங்கனை தரிசிக்கும் ஆகச் சாதாரண பக்தன் திருக்கோவிலூர் மண்ணை மிதிக்கும் போதெல்லாம் புரிதலுக்கும் பார்வைக்கும் அப்பாற்பட்ட அரங்கனைத் தான் கண்டதை இந்த நாயினும் கடையேனுக்குக் காட்டிக் கொடுக்கிறார்...அரங்கனை நுகர்தலும் அவனை வியத்தலும் சுலபமல்ல என்பது புரியும் போது ஆழ்ந்த அரங்க பக்தியின் வானமும் அதன் பரிணாமங்களும் வியப்பின் எல்லைகளை நீட்டித்துக் கொண்டிருப்பதையும் அங்கே அரங்கனையும் காணமுடியுமென்பதையும் மொழியின் சில சொற்களுக்குள் அடக்கிவிட முடிவதில்லை... திருவயிந்தரபுரத்தில் செங்கமல வல்லித்தாயார் ரங்க நாயகியாய் திருவரங்கனைக் காணவேண்ட...
பனவனும் அரங்கனும் மார்கழியும் அரையர்சேவையும் 5 பக்தியின் இரு நிலைகள் கடினத்தன்மை கொண்டவை...உயிரைப் பணயம் வைத்து அரங்கன் மேல் ஆழ்ந்த பக்தி கொள்வது...இதில் சுயலாபத்திற்கோ தன்னலத்திற்கோ இடமிருப்பதில்லை...இன்னொரு நிலை... பக்தி செய்து பார்பதால் கிடைக்கும் பலனை நினைத்துச் செயலாற்றும் நிலை...இரண்டாவது நிலையில் வேடங்கள் தேவைப்படும்...முதல் நிலையில் வாழ்வின் அடுத்த நொடிகூட நிச்சயமற்றிருக்கும்...இருப்பினும் மனமெங்கும் அரங்கன் நிறைந்து நிற்பான்...கிடப்பான்...இருப்பான்....அப்படியான ஆழ் நிலை பக்திக்கு ஆட்பட்ட பராசரபட்டர்...தன் அன்னையிடத்தில் வருகிறார்...அம்மா...அரங்கனின் அத்யயனோத்சவம் நடந்து கொண்டிருக்கிறது...ஏகாதசி வேறு...முதலாம் குலோத்துங்க சோழனின் ஆணைப்படி நிறைய பெரிய அவசரம் பெருமாளுக்குத் தயாராகி வருகிறது.... கல்வெட்டின் வாசகங்களை காப்பி பேஸ்ட் செய்திருக்கிறேன்... [ஸ்வஸ்தி ஸ்ரீ புகழ் சூழந்த புணரி அகழ் சூழந்த புவியில் என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியுடன் கூடிய கல்வெட்டில் திருவெ...திருவாய்மொழி கெட்டருளும் பொது திருநாள் தொறும் அமுது செய்தருளும் அட்டமுது நூறுக்கு வெண்டும் அரிசிக்கும் பருப்ப...