Posts

Image
புனிதத்தின் வாசம் அடைக்கப்பட்ட பொடியொன்றை ஆன்ம மனதின் கூம்புவடிவ சிறு கூண்டில் அடைக்கிறேன்.. தூபக் காலில் கவிழ்க்கப்பட்ட கூம்பின் முனையில் பிரபந்தச் சப்தமெழுப்ப முனை பற்றி வாசப் புகை நடனமிடத் தொடங்கியது.. புகையின் கோட்டோவியங்களில் உச்சிரவஸை சுட்டு வீழ்த்தினான் ஒரு கடவுள் மறுப்பாளன்.. அவன் கவிஞனாம் வேறு.. கடவுள் படங்களென மாட்டப்பட்டிருந்த குதிரை லாயமொன்றின் வாசலில் தூபப் புகை சூழும் இடமற்ற செயற்கை அடர்வில் மனமகிழுந்துவை நிறுத்த முடியாமல் இங்கும் அங்குமாய் திருப்புகிறேன்.. பாதையில் நிறுத்தப்பட்ட மகிழுந்துவின் ஓட்டுனராய் பொடி அடைக்கப்படும் கூண்டுக்குள் சுருங்கிக் கொண்டுஒரு [ச்]சு வாசமற்ற வாசனாய்த் தவிக்கிறேன்.. படங்களில் மாட்டப்பட்ட குதிரைகளை அவிழ்த்துவிடுங்கள்.. மகிழுந்துவைக் கொஞ்சம் அவ்விடத்தில் நிறுத்திக் கொள்கிறேன்... ராகவபிரியன்
Image
ஒரு பனவனின் பால்ய நினைவுகள்... குடும்பம் சமூகம் வெளிவட்டாரம் வாழ்வின் அயராத உழைப்பால் பெற்ற வெற்றியின் மீதான பொறாமை..அதனால் அருகிலிருப்போர் மறைமுகமாக நற்பெயருக்கு விளைவிக்கும் களங்கம்.. இவையெல்லாம் உள்மனதில் தோற்றுவிக்கும் நெருக்கடி நிலையின் தாக்குதல்களால் சில பால்ய நினைவுகளைப் பதிவுசெய்ய வேண்டியதாகிறது.. திருப்பறாய்த்துறையில் ஒரு மார்கழி மாதத்தில் மொட்டை மாடியில் அமர்ந்து திருப்பாவையை மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறேன்...விடிந்தால் அதை ஒப்புவிக்கும் போட்டியில் வென்றால் ஒரு வெள்ளிக்காசும் ஒரு டம்ளர் ராகிமால்ட்டும் கிடைக்கும்..ஆழ்ந்து புத்தகத்தில் மூழ்கி பின் கண்மூடி வரிகளை மீளுருக்கொணரும் வேளை உஸ் எனும் சத்தம் கேட்க.. கண் திறந்தால் ஒரு நல்ல பாம்பு படமெடுத்து இங்கும் அங்கும் தலையைத் திருப்பியபடியிருக்கிறது..நொடியில் ஓட்டமாய்க்கீழிறங்கி சப்தமிட யாராரோ மாடியேறித் தேடுகிறார்கள்..பாம்பு கண்ணில் படவேயில்லை.. நிசப்தங்களுடனான ஒரு நள்ளிரவின் ஆழ்ந்த உறக்கம்...திருவாரூரின் தொடர்வண்டித் தொழிலாளர் குடியிருப்பில் ஆடிமாதக் காற்று கொணர்ந்து வீசிய குப்பைகள் குவிந்து கிடந்து...வினோத சப்தமெழுப்பிய...
Image
ஒரு கோவிலின் கோபுர பொம்மைகளில் வாக்கு வானம் கவிந்திருக்கிறது.. அவ்வப்போது காணாமல் போய் மீண்டும் குதித்துக் கொத்தும் கருப்பு இறகு ஊர்க் குருவிகள் இரண்டு தொடமுடியாத வானத்தில் பறந்து பார்க்கிறது... பொம்மைப் பழங்களை மூக்கால் உடைக்க முடியாமல் அருகில் பிய்ந்து பறக்கும் கருப்பும் சிவப்புமான கொடிக்கம்பத்தில் அமர்ந்து இங்கும் அங்கும் பார்த்து செம்மாந்து போகும்.. இதோ கோவிலின் கீழே காய்ந்த வாழைப்பழத்தின் எச்சங்கள் மேலே சுற்றிக்கிடக்கும் பூணூலின் மிச்சங்கள்.. வாக்குப் பசி வெட்கமறியாதது... வசிப்பது கோபுரவானமெனினும் பூணூலைக் கொத்துவதெனின் புல்லரிக்கும் குருவிகளுக்கு.. கொத்தும் நொடிகளில் இலக்கியம் பற்றி கத்தவும் செய்யும்.. பூணூலைக் கொத்தி விசிறும் மூக்கின் வீச்சுக்களில் கோபுர வானம் சுருங்கிப் போனதாய்.. உடைந்து விட்டதாய்.. இறுமாப்புடன் இறகு கோதும்.. பூணூல் அணிந்த அதிகாரத்திடம் பொட்டுக் கடலைகளுக்காக சிறுகு சுருக்கி சின்னதாய் தத்தி வேடிக்கை காட்டி விட்டத்தில் எதையோ தேடியலைந்ததை மறந்து.. அதிகார வாக்கு வானத்திற்காக இப்போது கோவில்களில் கடவுள் இருக்கிறாரென கூச்சல் போடுகின்றன.. கோபுர பொம...
Image
ஒரு குமுட்டி அடுப்பின் குழிக்குள் நிரப்பப்படும் கரித்துண்டுகளென வார்த்தைகள் கருத்து உள்ளங்கைகளில் ஒட்டிக்கொள்கின்றன.. பற்ற வைத்த நெருப்பை விசிறிரும் போதை விசிறிகளின் தடுமாற்ற நடனம் வார்த்தைத் துண்டுகளில் ஒட்டாமல் புகையாகி சன்னதாய் புறப்படுகின்றன... விசிறியை விட்டெறிந்துவிட்டு ஊத முயல்கையில் முயலோடும் வரப்புகளில் கரித்துண்டுகள் நீண்டு முளைத்து விடுகின்றன.. பற்றிவிடாத நெருப்பொன்றை குமுட்டிக்குள்ளிருந்து கிளப்பமுடியாத நிஜம் உணர்ந்து மண்ணெண்ணைப் போத்தலை பிரபஞ்சமெங்கும் தேடித்தேயும் பார்வைக் கால்கள்.. செந்தணல் முளைத்த இதயப் பரப்பெங்கும் நான் ரொட்டி சுட்டு மீந்த வார்த்தைகளில் தான் அப்பளம் ஒன்றை பின் நவீனமென கத்திக்கொண்டிருக்கும் கழுதையொன்று சுட்டுப்பார்க்கிறது.. ராகவபிரியன்
Image
இறைமை என்பது உணரப்படவேண்டும்..அவ்வாறான இறையுணர்வு ஒவ்வொருவரிலும் இருக்கிறதென அறிவோம்..இறைமையை இறையுணர்வை சோதிப்பதும் சோதனைக்குள்ளாக்குவதும் அதன் நிஜத்தன்மையை சந்தேகிக்கும் செயல்பாடுகளும் தவிர்க்கவொன்னா இழப்புகளை ஏற்படுத்திவிடுமென திருமூலர் சொல்கிறார்.. தூய்மை .(1). அருளூண் சுருக்கம் பொறை செவ்வை வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை காமங் களவு கொலையெனக் காண்பவை நேமியீ ரைந்து நியமத்தனாமே . அதுபோன்ற இறையுணர்வை அரங்கன் அருளியிருப்பது நம்பமுடியாத ஒன்றாகவே எப்போழ்தும் இருக்கிறது..அதுபோழ்து இந்தச் சிறுவன் ஆறாம் வகுப்புப் படிக்கிறான்..திருப்பறாய்த்துறை விவேகானந்த உயர் நிலைப்பள்ளியில்..அவனின் வகுப்பில் காலாண்டுத் தேர்வு முடிவுகளை ஆசிரியர் வெளியிட இந்தச் சிறுவன் எல்லாப்பாடங்களிலும் முதலாக வருகிறான்..அது மட்டுமல்ல..அதுவரையிலான அப்பள்ளியின் ஆறாம் வகுப்பு வரலாற்றில் கணிதத்தில் அவன் நூறுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கியதை அறிவித்த ஆசான் அச்சிறுவனை அவனின் இருப்பிட உட்காரும் பலகையின் மீதேறி நிற்கவும்..சக மாணவர்களைக்கொண்டு கைத்தட்டவும் பணிக்கிறார்.. மாலையில் அவன் வகுப்புத் தோழன் ஒருவன் அவனுடன் சண்டையிடு...
Image
பின் நவீனம் என்பது நவீனத்தை மறுப்பதோ மறப்பதோ இல்லை..ஆயிரமாயிரமாண்டுகளாய் புரையோடிப்போன இலக்கியம் பற்றிய பார்வைக்குறைபாடுகளை நீக்கி..சரியான பார்வையை சமுதாயத்தின் தற்போதைய நிஜத்தை வண்ணங்கள் கலக்காத பார்வையில் புது வகைமையில் தருவதே என்பது எனது தனிப்பட்ட பார்வை...இதற்காக எனது கட்சியை வலுப்படுத்த நான் எந்த இலக்கிய நீதி மன்றத்திலும் சட்ட நிபுணர்களைக் கொண்டு வாதிடப்போவதில்லை..எனது தரப்பு சாட்சியாக அட்லாண்டிக் ஆர்டிக் இந்து மஹா சமுத்திரம் மற்றும் ஏனைய கடலலை கல் வீசிக்கொண்டிருக்கும் ந ாடுகளின் புகழ்பெற்ற இலக்கியப் பெயர்களை நிறுத்தப்போவதில்லை... சங்க இலக்கியப் பாடல்கள் நிறைய பின் நவீனச் சிந்தனைகளைக் கொண்டிருந்தது..பாலை பாடிய பெருங்கடுங்கோ ஒரு பாடலில்.." பிரிதல் வல்லியர் இது நத் துறந்தோர்.."என்று...ஒரு வரியை அனாயாசமாக வீசிச் செல்கிறார்..தோழி தலைவியிடம் உன் கூந்தலில் உறங்கிய தலைவன் ஒரு நாளும் உன்னை மறந்தாலும் அந்த உறக்கத்தை மறப்பதில்லை என்று சொல்கிறார்... பக்தி இலக்கியத்தில் திருமழிசையாழ்வார்...விடம்பயின்ற பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே...என அரங்கனைப் பாடுகிறார்...பாம்பிடம் விடமி...
Image
பின் நவீனச் சிந்தனைகளும் கவிதைகளும் அட்லாண்டிக் பெருங்கடலின் இரு கரைகளில் ஒட்டிக் கிடக்கும் நாடுகளில் அறுபதுகளில் தொடங்கியதாக ஒரு கூற்று இலக்கிய உலகில் இன்னமும் நம்பப்பட்டு வருகிறது..பெரும்பாலும் காதல் உள்ளடக்கிய இலக்கிய வகைமைகளை மரபும் புதியதும் நவீனம் கொண்டிருந்த அதே இலக்கிய வெளிகளில் சமுதாயச் சிந்தனைகளும் மாற்றுக் கருத்துக்களும் குழு சாராத..அங்கீகாரங்களுக்கான எழுத்தாக இல்லாமல் புத்தம் புதிய வகைமைகளுடன் நிஜமான மாற்றத்திற்கான சிந்தனைகளைத் தந்த இலக்கியம் உருவானது தமிழ் மொழியி ல் எனில் நம் தமிழறிஞர்களே ஒப்ப மறுப்பது காலக்கொடுமை...சங்க காலம் ..சங்கம் மறுவிய காலம்..பக்தி இலக்கிய காலம்..தற்காலம்...கி.பி 1800 க்குப் பிறகு இதுவரை..என்றெல்லாம் யார் காலத்திற்கு கட்டம் வரைந்தார்கள் எனத் தெரியவில்லை...1960ல் அட்லாண்டிக் அலைகளால் கரைகளில் பின் நவீனம் வீசப்பட்ட தென்றால்...அது வங்களாக் கடலலைகளால் தென்னிந்திய தமிழ்க் கரைகளில் உறிஞ்சப்பட்டதெனும் உண்மையை எடுத்துச் சொல்ல தமிழைத் தாங்கி நிற்பதாக மார் தட்டும் குழுத் தலைவர்களால் ஏன் முடியவில்லை எனத் தெரியவில்லை... பண்டித நடையிலிருந்து தமிழை வட்டார வழ...