Monday, August 26, 2019

பின் நவீனச் சிந்தனைகளும் கவிதைகளும் அட்லாண்டிக் பெருங்கடலின் இரு கரைகளில் ஒட்டிக் கிடக்கும் நாடுகளில் அறுபதுகளில் தொடங்கியதாக ஒரு கூற்று இலக்கிய உலகில் இன்னமும் நம்பப்பட்டு வருகிறது..பெரும்பாலும் காதல் உள்ளடக்கிய இலக்கிய வகைமைகளை மரபும் புதியதும் நவீனம் கொண்டிருந்த அதே இலக்கிய வெளிகளில் சமுதாயச் சிந்தனைகளும் மாற்றுக் கருத்துக்களும் குழு சாராத..அங்கீகாரங்களுக்கான எழுத்தாக இல்லாமல் புத்தம் புதிய வகைமைகளுடன் நிஜமான மாற்றத்திற்கான சிந்தனைகளைத் தந்த இலக்கியம் உருவானது தமிழ் மொழியில் எனில் நம் தமிழறிஞர்களே ஒப்ப மறுப்பது காலக்கொடுமை...சங்க காலம் ..சங்கம் மறுவிய காலம்..பக்தி இலக்கிய காலம்..தற்காலம்...கி.பி 1800 க்குப் பிறகு இதுவரை..என்றெல்லாம் யார் காலத்திற்கு கட்டம் வரைந்தார்கள் எனத் தெரியவில்லை...1960ல் அட்லாண்டிக் அலைகளால் கரைகளில் பின் நவீனம் வீசப்பட்ட தென்றால்...அது வங்களாக் கடலலைகளால் தென்னிந்திய தமிழ்க் கரைகளில் உறிஞ்சப்பட்டதெனும் உண்மையை எடுத்துச் சொல்ல தமிழைத் தாங்கி நிற்பதாக மார் தட்டும் குழுத் தலைவர்களால் ஏன் முடியவில்லை எனத் தெரியவில்லை...
பண்டித நடையிலிருந்து தமிழை வட்டார வழக்கு நடைவரை மாற்றி.பின்... நவீனம்..பின் நவீனம்...வரை புரட்சி எழுத்துக்களை உலகிற்குக்கு காட்டிய மாயூரம் வேதனாயகம் ..புதுமைப் பித்தன்..பாரதி..திஜா...சுஜாதா..லாசாரா..கிரா..சுந்தர ராமசாமி..அனுத்தமா..அம்பை.. போன்றவர்கள் மிலன் குந்தேராவிற்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல..என்று ஏன் சொல்ல திராணியற்றிருக்கிறார்கள் எனப் புரியவில்லை...
இது போன்ற ஒரு இமாயலய இலக்கிய சோகத்துடன் பின் நவீனத்திற்கான மேலைக் கூறுகளை..அதன் தற்போதைய இலக்கிய வகைமைகளை ஆய்ந்து நோக்க..அவை...ஐகோனோகுலொஸம்..அதாவது..பழையவற்றை சிறிதும் ஒத்துக்கொள்ளாமை..க்ரெவுண்ட்லெஸ்...எந்த அடிப்படை இலக்கணங்களும் இல்லாமை..பாப்புலிஸம்..அதிகம் புகழ்பெற்றவர்களால் தரப்படும் ஆகச் சாதாரண எழுத்துக்கள்..முதலிய காரணிகளைக் கொண்டிருக்க வேண்டுமெனத் தெரியவருகையில் அதிர்வின் விளிம்பில் கவிதையும் இலக்கியமும் தளும்பிக்கொண்டிருப்பதைக் காணலாம்..ஆஸிபைட்..அதாவது கருத்து பழக்கம் முதலியவற்றில் உறுதியாக இருக்கும் சில ஆகப்பெரிய பெயர்களின் பின்னால் அணிவகுத்து அவர்களைப்போல எழுதுவது..அல்லது அவர்களால் பெறப்பட்ட முன்னுரையெனும் புகழுரையை பெற்று எழுதுவது போன்றவைகளே பின் நவீனமெனில் மனம் கனத்துப் போய் முதுகெலும்பு வளைந்து ஒரு கவிஞனின்..இலக்கிய கர்த்தாவின் உடலை சற்றே குனியச் செய்துவிடுகிறது...
அவ்வாறு குனிந்து எழுதிய ஒரு பின் நவீன கவிதையை உங்களுக்காகத் தருகிறேன்..
காப்பிப்பொடி வாங்கிய
ரசீதுகளைச் சேர்த்துக் கொடுத்தால்
பில்டர் தருகிறார்கள்..
இரண்டு கிலோ எனில்
சாவிக் கொத்து...
மூன்று கிலோ எனில்
டிபன் பாக்ஸ்..
நாங்கள் இதுவரை
நாற்பது கிலோவரை
காப்பிப்பொடி வாங்கிவிட்டோம்..
அந்த ரசீதுகளின்
பின் பக்கத்தில்
மனைவியின் பெயரை
எழுதிக் கொடுத்தால்..
அப்பளக் குழவியொன்றை
ஜிகினாக் காகிதம் சுற்றித்
தருகிறான்..
நாளையிலிருந்து
நான் தேனீருக்குத்
தாவிவிட்டேன்...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  முதலில் சம்ஸ்கிருத ஸ்லோகம் உங்கள் கண்ணில் பட்டால் நீங்கள் இப்பதிவைத் தவிர்த்துவிட்டு நகர்ந்துவிடுவீர்கள்.. அதனால் அதன் உள்ளார்ந்த பொருளை இ...