Posts

Image
சதா சண்டையிட்டுக் கொண்டிருப்பவன் ஒருபோதும் தனது முதல் கவிதையை எழுதிவிடமுடியாது என்றெழுதிய உம்பர்ட் ஈகோ இரண்டே இரண்டு கவிதைகள் தான் எழுதியிருக்கிறார்..வாழ் நாள் முழுதும் இரண்டு இடங்களில் மாறி மாறி வசித்த ஈகோ ஏறக்குறைய எழுபதாயிரம் புத்தகங்களைச் சேமித்திருக்கிறார்...கத்தோலிக்க வழிபாட்டு முறையையும் கடவுளின் இருப்பையும் கடுமையாகச் சாடிய ஈகோ புனைவுலகின் மீதும் தீராத கோபம் கொண்டிருந்தது வரலாறு..எலியட்டிலிருந்து இன்றைய நவீன கவிஞர்களின் கவிதைகளை சதா குறை கூறிக்கொண்டிருந்த ஈகோ எந்தக்  கவிதையையும் கவிதையென ஏற்றுக்கொள்ளவில்லை..நீங்கள் ஏன் கவிதையையும் கடவுளையும் நம்ப மறுக்கிறீர்கள் என்று தொடர்ந்து கேள்வியெழுப்பியவர்களை ..எல்லாக் கவிஞர்களுமே மோசமான கவிதையைத்தான் எழுதுகிறார்கள்..அதைவிட மோசமானவர்கள் அதை வெளியிடுகிறார்கள் என்று கூறி சர்ச்சையில் சிக்கியவரைக் காப்பாற்ற எந்தச் சர்ச்சும் முன்வரவில்லை...குழந்தை இலக்கியத்தில் ஓரளவு வெற்றிபெற்ற ஈகோ தனது ஈகோவை விட்டுக் கொடுக்கமுடியாத்தால்..ஆகச் சிறந்த நாவலான...ரோஜா என்பது பெயர்...என்பதை இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த படைப்பாக கொடையளித்திருந்தும்..எந்த உலக...
Image
இன்றைய தமிழ் இலக்கியத்தின் செலுத்துவாரற்ற பயணம் செல்லும் திசையெல்லாம் கிடைக்கும் உபயோகித்து தூக்கியெறியும் உடையொன்றை வாங்கி அணிந்து கொள்கிறது...புதுப்பொலிவுடன் ஈர்க்கும் அது அடுத்த உடைகிடைக்கும் வரை அழுக்காகி கசங்கி இலக்கிய பிம்பத்தின் மரியாதையைக் குறைத்து மதிப்பிடச் செய்துவிடுகிறது...ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த தமிழிலக்கியம் இதுவரை பெற்றது ஒரே ஒரு ஞானபீடம்தான்..[சரி..இரண்டு என்றே வைத்துக்கொள்வோம்]இந்திய மொழியிலக்கியங்களில் பதினைந்தாம் நூற்றாண்டில் தான் முதல் இலக்கியப் பிரதி கிட ைத்தாகச் சொல்லிக்கொள்ளும் ஒடிய [odia]..இலக்கியம் இதுவரை நான்கு ஞானபீடங்களைப் பெற்றுவிட்டது.. பாண்டா எனும் ஆதிகுடிமக்களைப் பார்ப்பதற்கே பயந்து நடுங்கும் ஒரியாவில்..அவர்களைப்பற்றி எழுதி உலகின் கவனத்தைக் கவர்ந்தவர் . 2011 ல் ஞானபீடப் பரிசு பெற்ற ஒடிய எழுத்தாளுமை...வைணவ குலத்தைச் சேர்ந்த பிரதீபா ரே...அவர்கள்...நிறைய நாவல்கள் ...சிறுகதைகள் ..கட்டுரைகள் எழுதியிருந்தாலும் அவரின் கவிதைகள் அவ்வளவாகப் பேசப்படவில்லை.. ஆதிகவி சரளாதாஸு[ஆண் கவிஞர்...ராமாயணம் மஹா பாரதம் இரண்டையும் ஒடிய மொழியில் பாடியிருப்பவர்]க்குப் பிறகு அ...
Image
O vinayaka Thou head was snatched just for guarding the Nirvana of your mother by your own father.. Spiritual powers were restored to thee o vinayaka by reincarnation with an Elephant's head.. O vinayaka mere illusions of you may dispel the fear.. and Thy mere name may remove the obstacles of life.. Thy ivory gored writings of Mahabharath had given the name and fame to Thee... as the first ghost writer ever.. The mud made Thou idols simply remove the worldly attachments and when immersed in rivers canals or tanks Life's rehearsals too immersed in Thee.. forthwith o vinayak.. Thou tiny travel animal [Mousihka] before entering inside an unknown hole simply deserted Thee O vinayak and Thou postures under the peepal tree is an art of waiting... or enlightenment.. Thy devotees are simply going for immersion.. Because of extreme devotion.. But Thy path is obstructed.. Let the devotees immerse themselves into thee O vinayak.. Let the obstacles in the path of immersion...
Image
The day usually dawn with hatred.. Ten of my brothers and sisters had their own wishes.. when an iota of indifference or frustration fallen on them they usually tumble on me like mounting of wagons during an accident of a goods train.. That was the chisel that shaped me. That was the teacher who taught me.. That was the tailor who dressed me That was the I still coming out of me.. I was hanging on a thread for a bread I was walking on a rope for a lesson I was living on a bush full of thorns and that was that.. Now people are praising me focusing the moon light on me.. My brothers and sisters arefighting between them in praise of me.. When i enter into the house all are standing like the audience including the judge who had risen up when accused Mahathma entered the court room during freedom struggle.. But i require only love and affection I require a place on a remote corner of my house where i could sleep.. I require a dawn without any dust.. and let me brush my teeth...
Image
ஒரு பெளர்ணமியைத் திருடத் திட்டமிட்டேன்.. என் கைகளைக் கொஞ்சம் நீட்டி வானம் தொட்டேன்.. கிரணங்கள் வழிந்து மறைவிடம் தெரிய பயம் நடுக்கம் தந்தது... இரண்டு கைகளாலும் சேர்த்துப்பிடித்து சட்டைக்குள் வைத்துக்கொண்டேன் ஓர் நாள் போதும்.. அன்று யாராலும் நிலாச்சோறு சாப்பிட முடியாது... கிணறுகளை எட்டிப்பார்த்து வாளியில் நிலாவை அள்ள முடியாது.. அல்லி மலர்கள் மலரும் வேலையை ஒரு நாள் ஒத்திப்போடுவதைக் காணலாம்.. கருக்கலில் காவிரிக்கரையில் மலம் கழிக்க வருபவர்கள் புதர்கள் தேடியலைய வேண்டிய தில்லை. நிமித்தக் காரன் தலைச்சன் பிள்ளைமண்டையோட்டை பயமின்றி தோண்டியெடுக்கலாம்.. சுவர் தாண்டி சின்ன வீட்டின் சுவரேறிக் குதிக்கையில் முண்டாசுக்காண துண்டு தேவையில்லை.. ஒரே ஒரு நாள் மட்டும் அந்தப் பெளர்ணமி என்னோடு இருந்துவிட்டுப் போகட்டுமே.. அட என்ன இது... என் சட்டைப் பைக்குள் யாரோ கையை விடுகிறார்கள்.... நீட்டிய கையை எப்படிச் சுருக்குவது...? ராகவபிரியன்
Image
தொம்பங்கூத்தாடியின் சின்ன மகள் கம்பியிலாடும் குழந்தை வித்தகி... எதிர் ரொட்டிக்கடையின் அன்ன தாதா அவளின் பசிக்கு கைத்தட்டல் மட்டுமே காசில்லாமல் தருவார்... அவளின் சம நிலைக் கம்பில் கவனம் கம்பியில் கால்களை இறுக்க.. பசி வயிறை இறுக்கிப் பிடிக்கும்.. அப்பாவின் சில்லரைத் தட்டும் அம்மாவின் மேளத் தட்டும் அவளின் வயிற்றுக் கம்பியில் பசியின் நடனத்தை தாள நயத்துடன் ஆடச் செய்யும்.. நடன முத்திரையின் மின்னல் வேகம் கூடிக் கூட.. ரொட்டிக் கடையின் வாட்டிய ரொட்டியை ஈட்டி முனையில் நர்த்தனக் கொள்ளையாய் எடுத்துக்கொள்வாள்.. ஓடியேறிக் கம்பியில் நடக்கும் வித்தகிப் பசிக்கு வித்தையே உணவு.. திருடி திருடியென அன்ன தாதா அறை கூவல்விடுக்க... குழந்தை உதட்டோர ரொட்டித்துகள்கள் திருட்டின் சாட்சியா..? பசியின் சாட்சியா...? தரையில் நின்றே யாரும் சொல்லலாம்.. ராகவபிரியன்

Mokkumbu Melanai

Image
கடந்த இரண்டு நாட்களாக மனம் அமைதிகொள்ள மறுக்கிறது..பிக்காசோ வரைந்த செவ்வியல் அமைதி ஓவியமொன்றை யாரோ சேதப்படுத்திவிட்டால் வரும் அமைதியின்மையைப் போன்றதது.....வார்த்தைகளில்லை என்னிடம் ...எனினும் சர்.ஆர்தர் காட்டன் அவர்களால் கட்டப்பட்ட முக்கொம்புவின் மேலணை இடிந்து கிடக்கையில் அவரின் அணைகட்ட பயன் படுத்திய நூற்றுக்கும் மேற்பட்ட கருவிகள் [இன்னமும் தவ்லேஸ்வரத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது]...வேலையாட்கள்..பிரிடிஷ் அரசாங்கத்தின் பாராமுகம்..ஒத்துழைப்பின்மை போன்று ஒரு நெடிய வரலாறு கா விரியின் அலைகளில் ஒரு பிளாஸ்டிக் குடுவையைப்போல் என் மனமெங்கும் அலைகழிக்கப்படுகிறது..எலமனூரிலிருந்து ஒரு கிலோமீட்டரில் தான் திருப்பறாய்த்துறை...அங்கிருக்கும் விவேகானந்தா ஆரம்பப்பள்ளியில் 1969 ல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது...பரிசிலில் காவிரியைக் கடந்து முக்கொம்பு செல்வோம்...அங்கிருந்துதான் கொள்ளிடத்தின் மேல் அப்போது அணைப்பாலம்[ காட்டன் அவர்களால் கட்டப்பட்டது..] இருந்தது...அதன் மேல் எத்தனையோ முறை நடந்திருக்கிறோம்...பழியாய்க்கிடந்திருக்கிறோம்...பாலத்தின் அடியில் மெல்ல கதவுமீறி சில்லென்று விழும் காவிரியில் வெகு நே...