ஜெய் ஹிந்த...ராகவபிரியன்
போர்க்களங்களையே பார்த்திராத நிகழ்கால நினைவு வெளிகளை விளையாட்டுத் திடலின் உக்கிரங்களும் வக்கிரங்களும் பெரிதும் ஆக்கிரமிக்கின்றன..குறிப்பாக பள்ளிக்கூடங்களையும் அதன் அதீத அழுத்தத்தையும் மெல்ல வெளியேற்றி இலகுவாகலம் என்று கல்லூரிகளில் நுழையக் காத்திருக்கும் இளைஞர் சமுதாயம் கடந்து வந்திருக்கும் காத்திரமான வருடங்களை இன்னும் கடினமாக்கி அதிக அழுத்த வன்முறைக்கு உட்படுத்தும் களம் புகுத்தும் கல்வியெனும் மாய நிகழ்ச்சூழலில்.. விளையாட்டுத் திடலின் வன்முறைகளும் வக்கிரங்களும்..செயற்கையாய்க் காட்டப்படும் சாகசங்களும்.. சின்னத் திரையில் தன் அழுத்தங்களை துடைத்து விட்டு எடையிறக்கிய மனப்பான்மையை வலிந்து பெறுகிற வடிகாலாய் மாற்றப்பட்டிருக்கிறது...அதைத் தேடிய தொலைதூர ஒட்டம் தானாகவே கொடியசைத்துத் தொடங்கிக்கொள்கிறது...தொழில் நுட்ப வளர்ச்சியென்ற பெயரில் ஒரு வயது குழந்தையிடம் எங்கிருந்தோ அதன் தாய் இதோ வந்துவிடுகிறேன் என்று பதிவு செய்த குரல்தகவல் தர...அது பொய்யென்றறியாப் பேதை மகவு தன் தளிர் நடையில் காண்போரிடமெல்லாம் தன் அம்மாவின் சுயமிப் புகைப்படம் காட்டும் கைபேசியை இப்படியும் அப்படியும் காட்டித் த...