Posts

காகபுஜண்டன்

Image
சுமக்க முடியாத கற்களால் கட்டிய சுவரில் அமர்ந்திருக்கும் காகம் கனத்திருக்கிறது.. அதன் அலகுகளில் வாசல் கூட்டும் துடைப்பத்தின் ஈர்க்குச்சிகள் சொல்லடுக்குகளாய்.. வேலைக்காரிகளின் போட்டியால் திண்ணையின் ஓரமாய் ஓளித்து வைக்கப்பட்டிருந்த கவிதைத்துடைப்பத்தை இழுத்தெறிந்தது சுகம் காணும் காகம்.. அதிலிருந்து தெறித்து விழுந்த ஈர்க்குச்சிச் சொல்லைத்தான் கூடுடென உருவாக்கும் எதிர்காலக் காகபுஜண்ட சந்ததியினருக்கு.. எட்டிப் பிடிக்கும் உயரத்தில் கட்டிய கூட்டில்தான் இப்போதும் உயிரணுக்கள் உருண்டபடியிருக்கும்... கூடு கலைக்கப்பட்டாலும் இன்னொரு புத்தம் புதிய காகம் கனமான சிறகுவிரிக்கும்.. அதன் மூக்கும் ஈர்க்குச்சிகள் சுமக்கும்... காகத்தின் சொல்லடுக்குச் சிறகுகள் நூறாண்டுகள் எட்டிப் பிடிக்க முடியாமல் பறந்துகொண்டே இருக்கும்.... ராகவபிரியன்

பார்வையில் பயணச் சீட்டு

உலகின் ஆகச் சிறந்த கவிதைகளில் ஒன்றை படைத்தளித்த மில்டன் சொல்கிறார்.. "யார் காத்திருக்கவும் ..நீண்ட நேரம் நிற்கவும் செய்கிறாரோ அவரே கடவுளின் பார்வையை பெறத் தகுதியானவர்". அப்படிப்பட்ட தகுதியானவர்கள் நம்மில் நிறைய இருக்கிறோம்..நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருக்கும் பயிற்சியை சில ஆலயங்களிலும் பொதுவிநியோகப் பங்கீட்டு நிறுவனங்களிலும் ஏன் சில நேரம் திருமணத்திற்காகக் கூட பெற்றிருக்கிறோம்.அப்படியான தருணங்களில் ஒரு சில வார்த்தைகள் உடைத்துக்கொண்டும் உடைந்தும் வெளிவரக்கூடும்...அவைகள ை அப்படியே கொட்டுபவன் கோபக்காரன்...உள்ளேயே இழுத்து பின் தொலைத்துவிடுபவன் கோழை..அந்த வார்த்தைகளை சீராக அடுக்கி உயிர் தந்து எல்லா உதடுகளிலும் உச்சரிக்கக் கூடிய வடிவம் தரும் ஆற்றல் பெற்றவன் கவிஞன்...அப்படிப்பட்ட ஒரு கவிதை... ஒரு பயண ஊர்தி அமைதியாய் நிற்க அதன் இருக்கைகளுக்கான குறைந்த நேர ஆளும் உரிமைக்கான நீண்ட வரிசை அமைதியற்றிருக்கிறது... தன்னைத் தானே பூமி ஒருமுறை சுற்றிவருவதற்குள் தனக்கானவளை அல்லது தனக்கான வளைக்கு சுற்றித் திரும்பும் கால அவசியத்திற்கான போட்டி சூழ் வரிசை.. தீர்ந்து போகாத பயணச் சீட்ட...

Water with hate and taste

Image
Amid frequent and thoughtful endeavors Amid earnest struggles to regather a bucketful of water from cauvery Nothingness looms large on the sands... Sometimes in the past I have swam through the current conjured up with mesmerizing success when cauvery was full of water at Allur.. For the past several decades suddenly inside cauvery and outside of it Tumultuous slogans of protest studded in heat swallowing every bit of water with horror.. The dawn had not opened my eyes I could not swam or bath through The sharpness or dampness of the holy river Piercing through my heart's inquisitorial chamber I could clearly see a doom prepared artificialy inside cauvery where i couldn't even take a quick bath by the politics Where i had for every moment felt trembled.. MY dear Masters My dear society My dear souls Kindly arrange half a bucket of water atleast From this holy river just to finish my morning Santhya vanthanam..without any hitch or hate... Ragavapriyan

பந்து உருட்டும் பந்த்

அந்த தென்னையின் எட்டும் உயரத்தில் வெள்ளை வண்ணம் தீட்டி மர நாய்கள் ஏறிவிடாதபடி அடைக்கிறீர்கள்... ஒரு குடையின் சுற்றுக் கயிறை இறுக்கி அது விரிந்து விடாதபடி அடைக்கிறீர்கள்.. நட்சத்திரங்களை அள்ளியெடுத்து வானம் முழுதும் அடைக்கிறீர்கள்... அகடு முட்ட அடை அவியலால் நெடுஞ்சாலையோர உயர் தர உணவகங்களில் பசியடைக்கிறீர்கள்... உங்கள் வாகன எண்ணெய்ப் பெட்டியை எரி எண்ணெய் யால் நிரப்பிஅடைக்கிறீர்கள்.. காவிரியை இரும்பு மூடிகளைக் கொண்டு அடைத்துவிட்டு.. தைக்கப்பட்ட நெகிழிச் சாக்குக் கதவிருக்கும் எங்களின் தேனீர்க் கடைகளை அடைக்கச் சொல்கிறீர்கள்... ஏற்கனவே எங்கள் வயிற்றின் வாசற்கதவை ஈரத் துணியால் தான் அடைத்திருக்கிறோம்... காவிரியில் கலக்கும் சாயக் கழிவுகளையும் சாக்கடைகளையும் அடைத்துவிட்டு பிறகு கடையடையுங்கள்.. உங்கள் அரசியல் கடையையும்தான்... ராகவபிரியன்

poem for the world poets

Image
DEDICATED TO WORLD POETS ON THIS WORLD POET'S DAY your poems are the inspiration for poets of this young 5g generation. your writings are the torches in the hands of literary blinds in search of true poetry.. your chosen words are the coated gold letters inscribed on the walls of hearts.. your alphabets are the tablets in colours which will cure ..if swallowed when the reader is bereft of thoughts and juice while walking in the desert of knowledge.. In thee my fellow poets the future world of humanity is to enjoy poetry in peace... Ragavapriyan Thejeswi

சுந்தர ராமசாமியும் ராகவபிரியனும்

பெரும்பாலும் இலக்கிய சர்ச்சைகளை நான் தவிர்த்து வருகிறேன்...?ஆனால் எழுத்தாளர்கள் ஒரு பக்கமும் காலச்சுவடு கண்ணன் மறுபக்கமும் இருந்து வாள் வீசிக்கொண்டிருக்கும் இந்தக் கொலைக்களத்தில் நிராயுதபாணியாய் இப்போது நானும் நுழைகிறேன்...இது வரை ஒரே ஒரு ஆன்மிக விருத்தப்பாடல் புத்தகமொன்றை மட்டுமே வெளியிட்டு...ஏறகுறைய நாற்பது ஆண்டுகளாக ஒரு இலக்கிய புத்தகம் கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறேன்...ஒரு முறை ஆசான் சுந்தர ராமசாமி அவர்களை பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் சந்தித்து எனது கவிதைப் புத்தகத ்தை காலச்சுவட்டின் மூலம் வெளியிட வேண்டும் என்ற ஆவலைச் சொன்னபோது...உங்களின் முதல் புத்தகம் எங்களால்தான் வெளிவரும் என்று உறுதியளித்தார்...ஆனால் அரங்கன் திருவருள்...பிறகு அவரைச் சந்திக்கவே முடியவில்லை.....கடந்த ஆண்டு எனது சில தேர்ந்தெடுத்த கவிதைகளை காலச்சுவட்டிற்கு அனுப்பினேன்...நண்பர் கண்ணன் அவர்களிடமும் தொலைப்பேசியில் உரையாடினேன்...அவரின் அணுகு முறை நிதர்சனமாகவும் உண்மையாகவும் இருந்தது. கொஞ்சம் பொறுங்கள்...உங்கள் படைப்புகளையும் காலச்சுவடு வெளியிடும் என்றார்...இப்போதைய சர்ச்சையில் கண்ணனைக் குறை சொல்வதை ஏற்க முடிய வ...

கூடும் சுமை

Image
ஒர் கூட்டுக்கான சுள்ளிபொறுக்கும் தேன் சிட்டின் அலகு சுமையாகிவிடுகிறது.. அதன் தெருக்களில் பிரயாசைகள் விரையும் வாகனங்களினடியில் சிக்கிக் கிடக்கின்றன.. கூடென்பது கூடாத பொழுதுகளின் பெருஞ்சுமை.. இறகும் அலகும் உரசும் தெய்வீக கணங்களில் கந்தர்வர்களின் நிழற்சாபம் விட்டத்தின் இடுக்குகளில் சுள்ளிகளாய்ச் சேர்கின்றன.. வீட்டுரிமையாளரின் விரட்டல்களில் எங்கள் வாரிசின் புறப்பாட்டிற்கான தூக்கம் கலைகிறது.. சிறகடித்து அமரும் கிளைகளை காளவாயிலடுக்க வெட்டிக் கொண்டிருக்கையில்.. உதிரும் சுள்ளிகளை நாங்கள் உதாசீனப் படுத்துகிறோம்.. விட்டங்களற்ற இன்றைய வீடுகளில் எங்கள் சிறகின் புனிதசப்தத்தை வீணடிப்பதில்லை.. எங்களின் ரகசிய பொழுதுகளில் கூட்டிற்கான திட்டங்களை ஒத்திவைத்து விடுகிறோம்.. எங்களை தடுக்கும் கதவுகளை மூடிவிடுங்கள்.. கூடென்பது எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் பெருஞ்சுமை... ராகவபிரியன்