வாழ்வு துரத்துகையில் உங்கள் ஓட்டம் முடுக்கு ஒன்றில் நின்றுவிடும்.. உங்களால் எத்திசையிலும் நகரவியலாது..உங்களைத் துரத்திய விடங்கள் உங்களின் வாழ்விடங்களை ஆக்கிரமித்துக் கொள்ளும்..அதையும் தாண்டி நீங்கள் மூச்சு வாங்கி நிற்கையில் உங்களால் நகரவியலாத முடுக்கத்தின் மண் பிளந்து ஒரு நாகம் உங்கள் காலடியில் சுருட்டிப் படுத்திருக்கும்.. நாகங்கள் பிரபஞ்ச சக்தி.. பிரபஞ்சம் பயம் நிறைந்தது.. பயம் உங்களைத் துரத்தும் சக்தியுடையுடையது.. அப்படியான வாழ்வு விரட்டியடித்த 1975 களில் ஒரு பாழடைந்த வீட்டிற்கு குடிபுக நேரிட்டது.. குஞ்சும் குளுவானுமாய் உடன்பிறப்புகள் ஒன்பது நபர்கள்.. அங்கே ஒவ்வொரு முடுக்கிலிருந்தும் ஒரு நாகம் புறப்பட்டு வந்து கொண்டே இருந்தது ஏறக்குறைய ஓராண்டு வரை.. ஒரு சில நாகக் குட்டிகளை கொலை செய்யவும் நேரிட்டது.. எதிர்பாராத ஒரு நாள் ஆகப்பெரிய நாகம் ஒன்று அந்த வீட்டின் கைவிடப்பட்ட பகுதியிலிருந்து ஊர்ந்து ஊர்ந்து வெளியேறியதைக் காண உடல் சில்லிட்டுவிட்டது..பயம்.. பயம் துரத்தத் தொடங்கியது.. பயமெனும் ஆயிரம் தலைகொண்ட ஆதிசேடனை படுக்கையாக்கிப் படுத்துறங்கும் அரங்கனிடம் தஞ்சமடைய பயம் துளித் துளியாய் வ...
Posts
முக நூலில் காணப்படும் தேவதாசிகளைப் பற்றிய பதிவுகள் அதிர்வைத் தருகின்றன.. தற்கால பின் நவீன வாழ்வியலின் நாகரீக மாற்றங்கள் குடும்ப அமைப்பியல் முறைமையை சிதைக்க முயல்வதைக் காணமுடிகிறது.. திருமணம் தாண்டிய உறவிற்கு வரலாற்றில் மட்டுமல்ல நிகழ் நடப்பியலிலும் மரியாதை கிடைக்கப்போவதில்லை.. வரலாறு என்பது கடந்த காலத்தின் புகைப்படம் அல்ல.. நிகழ்காலம் கடந்த காலத்திற்கு அளிக்கும் ஒரு மறுவாசிப்பு. அந்த வகையில் தேவரடியார் மரபை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை வெறும் பண்பாட்டுப் பாதுகாப்பு என்ற பெயரில் பூடகமாக முன் வைக்கும் வெண்ணிலா மற்றும் ஜெமோவை கண்டித்தாக வேண்டும்.. தேவரடியார் மரபில் கலை இருந்தது.. இசை இருந்தது.. நடனம் இருந்தது... கோயில் சடங்கு இருந்தது என்பதெல்லாம் சிந்தனை அவலத்தை சந்தனம் பூசி மறைக்கப்பார்க்கும் கயமை என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.. சில காலகட்டங்களில் தேவரடியார்களுக்கு பொருளாதார வளமும் சமூகச் செல்வாக்கும் இருந்திருக்கின்றன. தவனேஷ் எனும் வரலாற்று ஆய்வர்..அவர்களை வெறும் கோயில் நடனக் கலைஞர்கள் என்ற ஒற்றை அடையாளத்தில் அடக்க முடியாது என்று பேசுகிறார்.. அவர்கள் கலைஞர்கள் அரண்...
சில நாட்கள் பூர்வீக கிராம வாசம்..சில நாட்கள் காஞ்சியின் பரபரப்பான வசிப்பு.. வாழ்வுந்துவின் காலச் சக்கர திசைமாற்றியை வேறு திசைகளில் திருப்புதல் இயலாமல் போனது..பயணத்திற்கானவற்றை சுமக்கும் பெட்டியின் சக்கரங்கள் எத்திசையிலும் திரும்வதைக் காண பொறாமையும் வந்தது.. கால்களில் சக்கர ரேகை இருக்கும் கால்களை அன்பின் கடின சங்கிலிகளாலோ இல்லை குடும்பக் கயிறுகளாலோ பிணைப்பது சுலபமும் அல்ல. பிறகொரு நாள் சட்டை உரித்துக் கொள்ளலாம் என உடலை வளைத்து வீசிப் புறப்படும் நாகமென காஞ்சி நோக்கிப் புறப்பட்டேன்.. பாம்புகள் பயணங்களின் போதுகளில் முட்டையோ பாலோ அருந்துமா என்பது ஆய்விற்கான ஒன்று.. ஆனால் காலின் சக்கர ரேகையின் வேகத்தை தடுப்பது தேனீர் மட்டும் தான்.. சாலையில் தேங்கிய மழை நீரை இங்குமங்கும் பார்த்தபடி கொத்தும் மழைக்காகமென தேனீருக்காக திண்டிவனத்தில் பயணம் அதன் சிறகுகளை மடித்துக் கொண்டு தேனீரை உறிஞ்சியது.. உடன் வரும் தோழமை மனையாளெனின் சக்கர ரேகைகள் அதன் நீளத்தை எப்படித் தான் சுருக்கிக் கொள்கிறதோ தெரியவில்லை.. தேனீர் மட்டும் தான் அருந்த வேண்டுமாம்..கட்டளை.. உடலெல்லாம் முள் இருப்பதால் ஊமத்தைப் பலாவாகாது.. உடல...
திருச்சி காவேரில தண்ணி இந்தக் கரைக்கும் அந்தக் கரைக்குமா போவுது.. ரெண்டு நாளா ஒரு கவிதையை தமிழ்ல எழுத யோசிச்சு யோசிச்சு கரையில கிடந்த குப்பை செத்தை எல்லாத்தையும் தண்ணியில போட்டதுதான் மிச்சம்.. காவிரியும் இன்னும் என்னவெல்லாமும் கடந்து போவுது.. சரி தமிழ்ல தான் கவிதை வரல.. நாம இங்க்லீஸ்ல கவித எழுதி ரொம்ப நாள் ஆயுடிச்சுங்களா...அதான் இங்கிலிபீஸ்ல எழுதிப் பார்க்கலாம்னு எழுதுன கவிதை தாங்க கீழ இருக்குது.. நீங்க நெனைச்சா இத மேல கொண்டுவரலாங்க... ராகவபிரியன் It is your page. Assigned by Facebook My friend, I know how many likes you want from celebrities, Gen Z, Gen Alpha etc.. In the deep browsing of your page some days back.. It is your autobiography with all your joys and sorrows I know, my friend, you are not going to give up writing And kindly understand, I am telling unto my heart that I too am writing on FB, expecting your like.. Writing literature is our horizon where we cannot have money or honey and you know my friend Nobel is our task.. But my friend you are not reading my page as...
நடுப்பகல் நகரப்பேரூர்ந்துகள் இப்போது அருகிவிட்டன.. முப்பது நிமிடங்கள் வரையாவது காத்திருக்க வேண்டியதாகிறது.. கிராம பேரூர்ந்து நிலையத்தில் அல்லது நிறுத்தத்தில் காத்திருத்தல் என்பது முன்னொரு காலத்தில் மளிகை கடையில் ரோக்கா கொடுத்துவிட்டு பொருட்களுக்காக காத்திருக்கும் அவதையை விடக் கொடியது.. காவிரிக் கரையோர பஸ் நிறுத்தத்தில் சில நேரங்களில் ஆடைகளைத் தொற்றிக்கொண்டு மரவட்டைகள் மெல்ல மேலேறி வரும்.. ஒரு மானுட உடலின் உச்சிவரை ஒரு முறையாவது ஊர்ந்தேறி விடவேண்டுமெனும் ஊக்கம் கொண்ட ஒரு ரயில் பூச்சியை தட்டி விட தலை குனியும் நொடிப்போதில் மகளிர் மட்டும் பேரூர்ந்து வந்து நிற்கும்.. உங்களுக்கான பேரூர்ந்து விதிக்கப்பட்டிருக்க வேண்டும்.. அப்படியான உட்கார இடம் இருக்கும் நெரிசலற்ற பேரூர்ந்து வரும் வரை காத்திருப்பேன் என்பது பயண மடமை. எப்படியாவது அடித்துப் பிடித்து உள் நுழைந்து மேல் கம்பியையோ இல்லை சீட்டின் கைபிடி எவர்சில்வர் குழாயையோ பிடித்துக் கொண்டு பயணிக்கையில் நகரப் பேரூர்ந்தும் பயண நகர்வும் அருவ நெம்பு கோலால் உந்தப்பட வேண்டும்.. அடுத்த நிறுத்தத்தில் உட்கார இடம் கிடைத்தால் நீங்கள் முன் ஜென்மத்தில் பு...
பிள்ளையார் சதுர்த்தி பால்ய நினைவுகள்.. அப்போது நாங்கள் மாஞ்சா தயாரிப்போம்..பட்டம் விடுவதற்காகத்தான். பட்டம் விடுவதென்பது ஒரு கலை. ஸ்ரீரங்கம் சாத்தார வீதியின் மாடி வீட்டிலிருந்து பட்டத்தை சுண்டி சுண்டி மேலெழுப்ப வேண்டும்.. இப்போதோ ராக்கெட்டுக்கள் ஏவு தளத்திலிருந்து செங்குத்தாக மேலெழும்புகிறது.. யதார்த்தத்தில் பட்டம் இப்படியும் அப்படியும் ஆடியபடி தான் வானில் ஏறும்..செங்குத்தாக மேலெழுந்த எதுவும் திரும்ப வருதல் அரிது..ஆனால் எந்த ஒரு பட்டமும் அதன் பறக்கும் காலம் முடிந்தால் கீழிறங்கத் தயங்கியதே இல்லை.. பட்டம் மெல்ல வானின் உச்சியை நூலின் தூரம் வரைத் தொடுகையில் ஆள்காட்டி விரலை அறுத்து விடுவது போல் விசை தந்து இழுக்கும்..அந்த விசையின் தாக்கத்தில் பட்டம் விரல் தப்பி உருவிச் செல்லவும் நேரலாம்.. அப்படி பட்டம் விரல் உருவி கழன்று செல்கையில் வாழ்வே கைவிட்டு உருவிச் சென்றது போல் இருக்கும்.. அன்று பிள்ளையார் சதுர்த்தி.. விடுமுறை நாள் வானில் நிறைய பட்டங்கள் பறந்து கொண்டிருந்தன.. சாதாரண நூலில் அப்பாவியாய் பட்டம் விடுகையில் வேண்டுமென்றே சில பட்டங்கள் வம்பிற்கு வந்தது விளாயாட்டிற்காக அல்ல.. வம்பிற்காகத்த...
கடந்த ஓராண்டாய் பண்டிகைகள் கொண்டாடும் இவனதும் இவனது குடும்பத்தினமானதுமான தொடர் சங்கிலி அறுபட்டுக் கிடந்தது..மீண்டும் அதைக் கோர்க்கும் புதிய தொடக்கத்திற்கான... புதிய வாழ்வின் அறுபடலற்ற மகிழ்வின் வளமையின் மீள் வருகைக்கான... அதீத காலத்தின் முடிவற்ற தேடல் வாழ்வு... இந்த காஞ்சியின் எல்லையற்ற பிரபஞ்சப் பெருவெளியில் இன்றைய காலையில் புத்தம் புதிதாய் மீள் தொடக்கத்தை பிள்ளையார் சுழி போட்டு இயக்க வைத்தது.. விநாயகர் வழிபாடு என்பது வெறும் பூஜை விதிகளின் நேர் கோடுகளுக்குள் பயணிக்கும் மரபு சார்ந்த அவசியம் மட்டுமல்ல; அது மனித இருப்பின், இந்தப் பிரபஞ்சத்தின் மற்றும் சம்ஸ்கிருதம் தந்த ஆதி தமிழ் மொழியின் எல்லைகளைக் கடந்து செல்லும் ஒரு குறியீட்டியல் களம் என திரித்து பரப்புரைக்கப்படுவதை மாற்றத்திற்குள்ளாக்க வேண்டிய கட்டாயம் எனும் எண்ணம் இவனை எழுப்பியது.. பின்நவீன தமிழக வினாயக வழிபாடு மரபார்ந்த ஆன்மீகத்தை அதன் மையத் தன்மையிலிருந்து விடுவித்து பிரியாணி விற்கவும் அன்னிய மத ஊடுறுவல் உத்தியைப் புகுத்தவுமான கயமையை வேரறுக்கும் கடமை முன்கால் வைத்தால் இவனால் முன் வைத்த காலை பின் வைக்கவியலவில்லை... பண்டைய வி...
மனம் என்பதொரு விசித்திர சிருஷ்ட்டியை அரங்கன் மனிதனுக்கு மட்டும் கொடுத்திருக்கிறானா எனத் தெரியவில்லை. மனதில் எதிர்பார்க்கும் நிகழ்வுகள் முற்றிலும் மாறுபட்டே நிகழ்வது இந்த எளியவனுக்கு மட்டும் தானா எனப் புரியவுமில்லை. பயம் என்ற வார்த்தையின் உண்மைப் பொருளைக்கூட உணராதவன் இவன்.. எதிரில் சிங்கம் ஒன்று சட் டென பாய்ந்து வருகையில் பயம் கொள்ள மாட்டாயா எனக் கேட்கலாம்.. அது எல்லா மானுட இதயங்களுக்குள்ளும் உருவாகும் யதார்த்த சஞ்சலமென ப்ராய்ட் கூறுகிறார்.. நமது சுய ஆளுமைக்குள் அடக்கிவிட இயலாத சில ஆசைகள் பொதுவெளியில் தானாகவே வெளியேறி காட்டிக்கொடுத்துவிடுமோ எனும் பயம் நரம்புத் தளர்ச்சி சஞ்சலமெனவும் ப்ராய்டிய கூற்று ஒன்று பதிவு செய்கிறது..சமூக அல்லது குடும்ப ஒழுக்க விதிகளை மீறி நாம் ஏதோ செய்கிறோமெனும் குற்ற உணர்வான நெறிமுறை சஞ்சலமும் இல்லாத ஏதோ ஒரு அழுத்தம் கடந்த சில நாட்களாக இவனை ஆட்கொண்டிருக்கிறது.. மேலே சொல்லப்பட்ட ப்ராய்டிய சஞ்சலங்களையெல்லாம் கடந்து வந்துவிட்டதும் புரிந்தது. பிறகும் ஏன் மனம் அல்லாடிக் கொண்டிருக்கிறதென புரியவில்லை.. காஞ்சிக்கு வந்ததிலிருந்து கடந்த ஓராண்டாக காமாட்சியின் திருக்கோவ...
மேஜிக்கல் ரியலிஸ்டிக் ரியலிச கதை...4 ஆந்தையின் கூடு தேடும் அவதையும் தாஸ்தாவஸ்கியின் குற்றமும் தண்டனையும்.. --------------------------------------------------------------------------------------------------------------- நகரத்தின் நடுவே இருந்த அந்த மழைக்கால நூலகத்தின் புத்தக அலமாரிகளில் ஆந்தைகள் அமர்ந்திருந்தன. கதையின் நாயகன் ஒரு நடுத்தர வர்க்க பின்நவீனத்துவ எழுத்தாளன். அவனது வலது தோளில் எப்போதும் பறவைகள் கைவிட்ட ஒரு கூடு இருக்கும். புத்தக அலமாரியின் புத்தகங்களுக்கு நடுவில் ஆந்தைகளும் அமர்ந்திருந்தது அவனுக்கு வியப்பளிக்கவில்லை. பின் நவீனத்துவ எழுத்தாளன் என்பதால் அவன் பாரதியைப் பற்றி எழுதியது ஒரு ஆந்தையாக மாறி இந்த நூலகத்திற்குள் மழைக்காக ஒதுங்கியிருக்கிறது. மெல்ல ஒவ்வொரு ஆந்தையையும் அதன் அருகில் இருந்த புத்தகத்தையும் பார்த்துக் கொண்டே வந்தான். நூலகத்தின் மூன்றாவது வரிசையில் எப்போதோ அவன் எழுதிய இருத்தலியல் துயரமும்... இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களும்... என்ற புத்தகத்திற்கு அருகில் இருந்த ஆந்தை இவன் தோளில் இருந்த கூண்டிற்கு தாவ இயலுமா என தலையை இப்படியும் அப்படியும் ஆட்டிப் பார்த்து. அப்போத...
என் கிராம வாழ்வு எவராலும் பிரித்துப் பார்க்கவியலாத புத்தகமாக இருந்தது. சட் டென ஒரு நாள் சென்னைக்குச் சென்றாக வேண்டிய கட்டளை. அந்தச் சென்னை நகரம் ஒரு உரையாகும் போது, அதை நடந்து கடப்பது ஒரு வாசிப்புச் செயலாகிறது. திருவல்லிக்கேணி என்னும் இந்தச் சிற்றிடம் ஒரு பொருண்மையல்ல... அது பல குரல்களின் மேற்பொறிப்பு. அங்கே பாரதியின் மூச்சு, பெருமாளின் திருமேனி, தெருவின் அன்றாட ஒலி, எல்லாமும் ஒரே தளத்தில் அடுக்கடுக்காக எழுதப்பட்டு, அழிக்கப்பட்டு, மீண்டும் எழுதப்பட்டிருக்கின்றன. நான் இன்று செய்வது ஒரு பயணம் அல்ல...அது ஒரு மறுவாசிப்பு..சரியாகச் சொல்வதென்றால் ஒரு உரையாடலின் இடைவெளிக்குள் நுழையும் முட்டாள் தனமான முயற்சி. முதலில் பாரதி வாழ்ந்த வீட்டைப் பற்றி உரைத்துவிடுகிறேன். அவர் சுவாசித்து மீந்த உயிர்காற்றை 1982 ல் எட்டயபுரத்தில் சுவாசித்தது இன்றும் நினைவு நுரையீரல்களில் நிரம்பித் தளும்பிக்கொண்டிருக்கிறது... அதாவது 2022ல் திருவல்லிக்கேணிக்குச் சென்றதை இப்போது வித்ட்ராயல் ஆப் லிபிடோ முறையில் உங்களுக்குச் சொல்கிறேன்.. திருவல்லிக்கேணியில் இருக்கும் பாரதி வாழ்ந்த வீடு ஒரு காட்சியகம். சுவர்களில் தொங்க...