Posts

Image
  உச்சத் திணை... சிறுகதை... கோபுரத்தில் உள்ள கலசங்களின் மூடியைத் திறக்கவேண்டும்...வெறும் கைகளால் தான்...திறந்து உள்ளிருக்கும் தினை அரிசிகளை ஒரு கைப்பிடி எடுத்து சேமித்து வைக்க வேண்டும்... இப்படியான எண்ணம் ராம்பாபுவிற்கு ஏன் வந்ததென்று தெரியவில்லை... எண்ணங்கள் தோன்றுவதன் மூலப்புள்ளியை கண்டடைதல் எப்படி என்பதுதான் அவனின் ஆகப்பெரிய ஆராய்ச்சியாகவும் இருந்தது... போகட்டும்... முதலில் தனது இருசக்கர வாகனத்தில் கிராமங்கள் நிறைந்திருக்கும் சாலையொன்றைத் தேர்ந்தெடுத்து போய்க்கொண்டிருந்தான்... ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடைபெற்றிருந்த புதுப்பிக்கப்பட்ட கோபுரம் அவனின் வண்டியை நிறுத்தியது... மேலே ஏற வழி இருக்கிறதா எனத் தேடத்தொடங்கினான்... உலகில் பிறந்து முதல் அடி எடுத்து வைக்கும் நாள் முதல் எப்படியாவது எதன் மேலாவது ஏறிவிடத்தான் எல்லோரும் வழி தேடிக்கொண்டிருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டான்...உச்சியை அடைந்து விட வேண்டும்...அவ்வளவு தான்... கோபுரத்தின் உச்சிவரைக்குமான சாரம் இன்னமும் பிரிக்கப்படவில்லை...பழங்காலத்து கோவில் என்பதால் கண்டிப்பாக படிக்கட்டுகளும் இருக்கவேண்டும்...இருந்தது......
Image
  பின் நவீன அரசியல் கவிதைகள்…1 ஒரு சிட்டுக் குருவி பரணில் தொங்கிக் கொண்டிருக்கும் என் உணவு வழங்கல் அட்டையில் கூடு கட்டத் தொடங்குகிறது… அது தனது தகுதியற்ற அலகால் ஆயிரம் உரூபாய்களை சுமப்பதற்கான ஒத்திகை முயற்சியில் அமர்வதும் பறப்பதும் வைக்கோல் பிசிறொன்றை ஆனந்தமாய் உட் செருகுவதுமாய் என்னை வசீகரிக்கிறது… மின்சாரக் கம்பிகளில் அமர்ந்து பிறகென் பரண் மேல் அமரும் குருவி மாயத்தால் என் உடலெங்கும் ஆயிரம் ரூபாய் மின்னழுத்தம் ஒளிரல் தருகிறது… ஒற்றை ஆயிரம் உரூபாய்த் தாள் எப்போதோ உயிர் துறந்ததால் இரண்டு ஐந்நூறு தாள்களை உள் வாங்கக் காத்திருக்கும் குடும்ப அட்டை விட்டத்தில் குருவி சற்று நேரம் அமர்ந்து விருட் விருட் டென உயிர்ச் சிறகடித்து உசுப்புகிறது… சிட்டுக் குருவிகளின் அழிவின் காலத்திலா ஆயிரம் உரூபாய்களுக்கான உரிமையின் காலம் தொடங்க வேண்டும்… என் தகுதிக்கான உலர் வைக்கோல் பொய்யொன்றை என் பிரமாண பத்திர மார்புகளின் நடுவில் வெளித் தெரியும் படி செருகி வைக்கிறேன்… தகுதிக்கான விண்ணப்பக் கேள்வி காகங்கள் என்னொத்த சீதாப்பெண்களின் மார்பின் வைக்கோல்பிரிகளின் தரம் பிரிக்க கொத்திக் குதறுகின்றன… குருவி அமர உதிரம் ச...
Image
  பின் நவீன பிற்போக்கு சிறப்புச் சிறுகதைகள்… 4…பரிணாமம் ராம்பாபு மனைவியுடன் புத்தம் புதிய கேஸ் ஸ்டவ் வாங்கத்தான் மங்கள் அண்ட் மங்கள் வந்திருக்கிறான்…எம் அண்ட் எம் திருச்சியில் மிகப்பெரிய ஷோரூம்…அதில் கிடைக்காத பொருள்களே இல்லை…அறுபதைக் கடந்து முப்பத்தைந்தாண்டு மணவாழ்வை கண்ட ராம்பாபுவிற்கு புதிய கேஸ் அடுப்பு வாங்க மனமில்லை…பழைய முப்பத்து நான்கு ஆண்டுகளாய் உபயோகத்தில் இருக்கும் அடுப்பை மாற்றிக் கொள்ளவும் மனமில்லை…மனைவியின் பிடிவாதத்தால் தான் இதோ வந்திருக்கிறான்…பழைய அடுப்பு புழுதி படிந்து பரணில் கிடத்தப்படுவதை அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை… விதவிதமான இரண்டு பர்ணர் மூன்று நான்கு பர்ணர்கள் என வித்தியாசமான டிசைன்களில் அடுப்புகளை விற்பனைப் பெண் அழகான தமிழாங்கிலத்தில் விவரிக்க விவரிக்க மனைவியின் கண்கள் அவ்வளவு பெரிதாக ஆர்வம் காட்டின…இது போன்ற ஆர்வத்தை அவன் மனைவியின் கண்களில் பார்த்ததே இல்லை… ஏன் ராம்பாபுவின் அம்மா முதன் முதலில் சுடுமண் அடுப்பொன்றை கிராமத்துச் சந்தையில் ஐம்பதாண்டுகளுக்கு முன் வாங்கும் போது கூட இவ்வளவு ஆர்வத்தைக் காட்டவில்லை… ராம்பாபுவும் அண்ணனும் ரயில்வே லயண் கரை...