காளத்தி நாதரை தரிசிக்க அதிகம் காத்திருக்க வேண்டியதில்லை..திருப்பதிக்கு வரும் அதே அளவு கூட்டம் காலஹஸ்திக்கும் வருகிறது...ஆனால் தேக்கப்படுவதில்லை..பக்தியின் வியாபாரம் தவிர்த்த நிஜம் இது..வரிசையில் வரும்போதே அர்ச்சனைத் தட்டுத் தேங்காயை உடைத்து விடுகிறார்கள்..அதை உடைத்துக் கொடுத்துக் கொண்டிருந்த அர்ச்சகர்..என் முகத்தை ஒருதரம் பார்த்தார்..நான் பிரபலமென்று அவருக்குத் தெரியாதென நினைத்திருந்தேன்..மொட்டை வேறு அடித்திருக்கிறேன்..என் முக நூல் பதிவுகளை காளஹஸ்தி வரை படித்திருக்க வாய்ப்பில்லையென எண்ணி இறுமாந்திருந்தேன்..ஆனால் அர்ச்சகர் மீண்டும் ஒருமுறை என் முகத்தைப் பார்த்தார்..இந்த முறை அவர் கண்களிலிருந்து வெளிப்பட்ட அக்னியை என்னால் படிக்க முடிந்தது...விறுவிறு என அவ்விடத்தைவிட்டு அகன்று போனார்..என் பின்னால் கூட்டம் தேங்கத் தொடங்கியது...என் எதிரே வரிசையின் வெற்றிடம் இழுக்கத் தொடங்க நான் அமைதியிழந்தேன்..உடனே ஒரு பிராமணரல்லாத சிப்பந்தி எனக்கடுத்திருந்தவரின் தேங்காயை வாங்கி உடைக்க இப்போது வரிசையில் நான் ஒதுக்கப்பட்டேன்..இது தீண்டாமையில்லையா..?மராட்டிய தயாபவாரின் தலித்திலக்கிய கவிதையொன்று நினைவில் வர....