Posts

பார்வை

Image
நீ நீருக்கடியிலிருந்து பார்க்கிறாய்.. கரிய பாம்பின் கண்களின் கொத்துவதற்கு முன்னான பார்வையது.. மேலெழும்பி கருடபார்வையால் கூர்த்துகிறாய்.. தொலைவில் வரும் ஜவ்வுமிட்டாய்க் காரனைக் கண்டுவிட்ட குழந்தைப் பார்வையது... தோல்போர்த்திய வாத்தியத்தைத் தாக்கும் விரல்களின் பார்வையென பிசைகிறாய்.. முகப்பருக் கண்களின் மையிட்ட சலனப் பார்வை அசைகிறதங்கே.. பார்..பார்..இன்னும் ...இன்னும்.. பார்த்துக்கொண்டேயிரு.. இறந்து கிடக்கிறது கண்.. உடன் மூடிவிடு.. இல்லையெனில் பார்வைகளை இமைகளால் இறுதியில் கூட மூடிவிட முடியாது... ராகவபிரியன்

a challenge

Image
எனக்குள் ஒரு பதப்படுத்தப்பட்ட குதிரை இருந்தது.. அதைப் பார்க்க வருபவர்களை நான் நுழைவுச் சீட்டு எடுக்கச் சொல்கிறேன்.. சிலர் சத்தமின்றி எடுக்கிறார்கள் சிலர் கட்டணம் அதிகமென கூச்சலிடுகிறார்கள்.. சிலர் அதீத ஆவலில் குதிரை போலவே தலையைத் திருப்புகிறார்கள்.. அந்தக் குதிரை முன்னொரு காலத்தில் ஊட்டியிலும் கிண்டியிலும் முதல் பரிசுகளைக் குவித்திருக்கிறது.. அதன் மீதான பந்தயபணத்திற்காக தன் மனைவியை அடகு வைத்திருக்கிறார்கள்.. சிலர் அம்மணமாயும் அலைந்திருக்கிறார்கள்.. அப்போது அதைப்பற்றி பேசாதவர்களின் பெயர்களைச் சொல்லிவிடலாம்.. அதை ஒரு நாள் கொட்டிலில் தடவிக் கொடுக்க துடித்த பெண்களை உலகம் அறியும்.. அதற்கு கொம்பும் உண்டு குளம்பும் உண்டு கடிவாளங்கள் மட்டும் இல்லை.. அதைத்தான் இப்போது விஷம் வைத்துக் கொன்று விட்டார்கள்.. அதைத்தான் எனக்குள் வைத்திருக்கிறேன்.. இப்போது அது உனக்குள் ஓடுவதைப் பார்... ராகவபிரியன்

ராகவபிரியன் தேஜஸ்வி எழுத்தாளர்: My poem in Indian Railways Magazine

ராகவபிரியன் தேஜஸ்வி எழுத்தாளர்: My poem in Indian Railways Magazine : எனது ஆங்கில படைப்பாக்கங்களை தொடர்ந்து இந்தியன் ரயில்வே இதழில் வெளியிட்டு என்னை உலக இலக்கிய அரங்கில் உயர்த்திப்பிடிக்கும் இதழின் ஆசிரியருக்க...

ராகவபிரியன் தேஜஸ்வி எழுத்தாளர்: ANDAL...AND MARGAZHI

ராகவபிரியன் தேஜஸ்வி எழுத்தாளர்: ANDAL...AND MARGAZHI : During the 8th centuary AD the spiritual world of Tamil Nadu had witnessed the emergence of ANDAL the daughter of PERIYALWAR..who had brou...

ANDAL...AND MARGAZHI

Image
During the 8th centuary AD the spiritual world of Tamil Nadu had witnessed the emergence of ANDAL the daughter of PERIYALWAR..who had brought in the interrogative changes in the devotion to GOD. She had brought in a consanguinity culture which is even now pervading the entire bakthi world especially among Tamil speaking girl children during this month of Margazhi. Her versatile genius in Tamil poetry writing made it easy for her to unite with ARANGANATHA..of  Srirangam one of  her THIRUPPAVAI song..which is recited even today at every nook and corner of Tamil nadu... the meaning of her first song...in my words...as ordered by ARANGA.... On the full moon day of Margazhi the chillest auspicious month of Tamil nadu.. my dear friends shall we take bath before the dawn.. and worship our Lord ARANGAN my dear friends.. you were all the wealthy children of AYARPADI.. in your previous births.. so do not be in deep sleep.. Our Lord, the son of YASODA having the fullmoon face is w...

A writeup called book

Image
கனத்தஅட்டை புத்தகமாக விரிக்கப்படாமல் கிடந்த மனதை இப்போது யாரும் தொடுவதில்லை.. புத்தகத் திருவிழாவில் யாருக்கும் தெரியாத வாசகனாய் தன் புத்தகத்தை தானே வாங்கி பிரித்துப் படிக்கும் பாவனையில் சுருங்கிச் சுருளும் புத்தகத்தினுள் நசுக்கப்பட்ட புழு.. எழுதத் தொடங்கிய வால்மீகியின் ஓலைச்சுவடியின் மீதான பிள்ளையார் சுழியிட்ட புராதன நொடிச்சப்தங்கள் காதுக் கருவியின்றி அப் புத்தகத்தினுள் கேட்க்கும்.. புழு நெளியும் நொடிகளின் கனம் அப்புத்தகத்தின் கனமென மெல்ல நகர்கையில்.. இதயத்தைப் பிடித்துக்கொண்டு இன்னொருமுறை படியுங்கள்... உங்கள் ஆள்காட்டி விரலாவது இதயம் தொடட்டும்.. ராகவபிரியன்

My poem in Indian Railways Magazine

Image
எனது ஆங்கில படைப்பாக்கங்களை தொடர்ந்து இந்தியன் ரயில்வே இதழில் வெளியிட்டு என்னை உலக இலக்கிய அரங்கில் உயர்த்திப்பிடிக்கும் இதழின் ஆசிரியருக்கும் இதழ் சார்ந்த அத்தனை பேருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் வணக்கங்களும் நன்றிகளும்..அன்பன்..ராகவபிரியன் My sincere Thanks to the Editor Indian Railways magazine for continuously publishing my articles and putting my name high in the literary horizon..my article in this month's issue