Wednesday, December 13, 2017

A writeup called book

கனத்தஅட்டை புத்தகமாக
விரிக்கப்படாமல்
கிடந்த மனதை
இப்போது யாரும் தொடுவதில்லை..
புத்தகத் திருவிழாவில்
யாருக்கும் தெரியாத
வாசகனாய்
தன் புத்தகத்தை
தானே வாங்கி
பிரித்துப் படிக்கும் பாவனையில்
சுருங்கிச் சுருளும்
புத்தகத்தினுள் நசுக்கப்பட்ட புழு..
எழுதத் தொடங்கிய
வால்மீகியின்
ஓலைச்சுவடியின் மீதான
பிள்ளையார் சுழியிட்ட
புராதன நொடிச்சப்தங்கள்
காதுக் கருவியின்றி
அப் புத்தகத்தினுள் கேட்க்கும்..
புழு நெளியும்
நொடிகளின் கனம்
அப்புத்தகத்தின்
கனமென மெல்ல நகர்கையில்..
இதயத்தைப் பிடித்துக்கொண்டு
இன்னொருமுறை
படியுங்கள்...
உங்கள் ஆள்காட்டி விரலாவது
இதயம் தொடட்டும்..
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...