Thursday, December 28, 2017

பார்வை

நீ நீருக்கடியிலிருந்து பார்க்கிறாய்..
கரிய பாம்பின் கண்களின்
கொத்துவதற்கு முன்னான பார்வையது..
மேலெழும்பி கருடபார்வையால்
கூர்த்துகிறாய்..
தொலைவில் வரும்
ஜவ்வுமிட்டாய்க் காரனைக்
கண்டுவிட்ட குழந்தைப் பார்வையது...
தோல்போர்த்திய
வாத்தியத்தைத் தாக்கும்
விரல்களின் பார்வையென பிசைகிறாய்..
முகப்பருக் கண்களின்
மையிட்ட சலனப் பார்வை அசைகிறதங்கே..
பார்..பார்..இன்னும் ...இன்னும்..
பார்த்துக்கொண்டேயிரு..
இறந்து கிடக்கிறது கண்..
உடன் மூடிவிடு..
இல்லையெனில்
பார்வைகளை
இமைகளால் இறுதியில் கூட
மூடிவிட முடியாது...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...