ஒரு பனவனின் ஆன்மீக அனுபவங்கள்...2+8 தோற்ற மயக்கம் என்ற பதம் நமக்கு பாரதி தந்தது..ஒரு தோற்றத்தை வைத்து எதையும் மனிதனால் புரிந்து கொள்ளவோ அல்லது முடிவெடுக்கவோ முடியாதென்பது தான் நிஜம்..கடந்த சில நாட்களுக்கு முன் திவ்ய பிரபந்தங்கள் உரத்து வாசிப்பதை நிறுத்தச் சொல்லிய அரங்கனின் கட்டளையை பதிவு செய்திருந்தேன்..அறிவீர்கள்..அந்தப் பொழுதுகள்...அல்லது அந்த நாட்கள் ஒரு ஆன்மீக நெருக்கடியான நாட்கள்..உரத்து வாசிப்பதை நிறுத்திய போதும் அரங்கன் வேறு விதமாக தன் வடிவங்களை எனக்குக் காட்டியபடியே இ ருந்தான்..ஒரு ஆன்மீக வாழ்வியலின் தோற்ற மயக்கமென அதை நான் ஒதுக்கித் தள்ளிவிட முடியவில்லை..ஓர் இரவின் முடிவுத் தளத்தில் எனது ஆழ்ந்த உறக்கத்தின் மேடையில் அரங்கனின் கோவில் கதவுகளை ஒருவர் தாளிடுகிறார்..அவரை நான் பிடித்துத் தள்ளுகிறேன்..அவர் என்னை மேடையிலிருந்து தள்ளிவிட என் கால்கள் தரையை உதைக்கின்றன..கடுமையான வலி இன்னமும் எனது இடது காலில் தங்கியிருப்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா என அறியேன்...அர்ஜூனன் அரங்கனின் ஈஸ்வர ஸ்வரூபத்தை அரங்கனே வர்ணித்ததை கேட்டு ஆச்சர்யம் அடைகிறான்..அரங்கனின் வார்த்தைகளை அரங்க பக்தன் நம்பு...