தொன்ம தேய்மான காலாச்சார தேனீரகங்கள்..2

பயணப்போதுகளின் செவ்வியல் முழுமை ஒரு கோப்பை தேனீருக்கான திறப்பை அகப்பாதையினூடே தரவில்லையெனில் அது முழுமையிலிருந்து விலகிய ஒரு பாதியை இரக்கத்திற்கு உரியதாக்கிவிடுகிறது. அவ்வாறான ஒரு பயணத்தில் தேனீர்க் கடைகளைத் தேடும் ஆன்ம புறக் கண்கள் பாதையின் மீதான கவன தப்புதல்களின் விளைவுகளை புலனின்ப புறக்கணித்தலுக்குள் அடைத்துவிட்டு பயண நீட்சியை ஆதிரிப்பதில்லை. தேனீரற்ற தொடர் பயணம் தன் திசைகளைத் தொலைத்துவிட்டு இலக்கடையும் பயண பன்மைத்துவத்தை கீறல்களுக்கு உட்படுத்தக்கூடலாம். அவ்வாறான பயணம் ஆபத்துக்களுடன் தனது நெருங்கிய நட்பு வளையத்தைப் தக்கவைத்துக்கொள்ளும் தகைமையுடைத்தது. சுய பயண அனுபவத் தரவுகளின் கூட்டல் கழித்தல்களில் தேனீரற்ற பயண முழுமை செவ்வியலுக்குள் உறை மூடிய கால் பதிக்க நேர்ந்த காலங்களை கட்டி வைத்திருப்பதை அதன் இறுக்கமான முடிச்சுகளின் அவிழ்க்கவியலா தன்மையைக் கொண்டு அறியத் தரவேண்டியிருக்கிறது.
காஞ்சியிலிருந்து திருச்சி நோக்கிய பயணங்களும் திருச்சியிலிருந்து காஞ்சி நோக்கிய பயணங்களும் தேனீரக நிறுத்தல்களில் பெரும்பாலும் தனது செவ்விய இலக்கு நோக்கிய பாதையோர தேனீரின் மிடறுகளில் இளைப்பாறியிருக்கின்றன. இளைப்பாறுதல்களை பாரம் சுமப்பவர்களுக்கு மட்டும் கொடுத்த தேசிய நெடுஞ்சாலையோர தேவாலயங்களின் முன் நிறுவப் பட்ட நிறுவனமயமான பன்னாட்டு தேனீரகங்களை பயண புறவழி அகக்கண்கள் தவிர்திருப்பது தொன்ம தமிழக தேனீர் கலாச்சார சிதைவுகளின் காரணிகளை போர்த்தியிருப்பதால் தான் எனில் உங்கள் அகக்கதவுகள் சாத்தான் முகத்தில் அறைந்து சாத்தப்படுவதன் எச்சமெனவும் கொள்ளளாகும்.
தொன்ம தேனீரக இருப்பிடங்களை அதன் பரந்துபட்டு கால் பதிக்கும் வாசங்களால் அடையாளம் கண்ட பயணங்கள் மணற் சிற்பங்களாய் உள்ளெழுந்து குறைந்த காலங்களே நினைவுக் கால் பதித்து நின்று பின் வெற்று படப்பிடிப்பிற்காக மட்டும் உருவாகி பின் கலைந்து போகும் தன்மையை மகிழுந்துகளை இயக்குகையில் மேன்மைப்படுத்தப்பட்ட முழுமையில் பயனச் செவ்வியலில் பதிக்கவியலவில்லை..
திட்டமிடா பயணமொன்றில் வெற்றகடுடன் புறப்பட்ட மகிழுந்துவின் மீளம உருண்டைகள் தன் சுழல் வேக்கத்தை உயர்த்தத் தொடங்கிய போது.. தேனீர் அருந்தச் சொல்லும் அக எண்ணங்களின் அதிகாரத்தை கண நேரம் கேள்விக்கு உட்படுத்த வயிற்றின் வைக்கோல் போர் தீப்பற்றியெறியத் தொடங்கியது. அப்போதில் தனியொரு பயணத்தை தேனீரருந்தாமல் தொடர்ந்தால் பாரதி தனியொரு பயணம் தேனீருக்காக தடுக்கப்படவில்லையெனில் பாதை குறுக்கே பாரிகேட் வைத்திடுவோமென பாடியிருப்பான். அதனால் கீழ்கதிர்ப்பூர் தேனீரக மொன்றில் மீள்ம உருண்டை மாடுகளை அவிழ்த்துவிட்டு அதன் முன் வைக்கோல் பரப்பி ஓய்வின் அனுமதியை திணிக்கவேண்டியதானது.
அத்தேனீரகத்தின் ஈக்கள் தங்கள் சிறகுகளின் வலிமையை அதன் ராஜ்ஜியத்தின் உரிமையை ஒவ்வொரு மேசையின் கைவிடப்பட்ட தேனீர் போத்தல்களில் அமர்ந்தும் நெகிழிச் சுவர் தாண்டிக்குதித்து வண்ணம் கூட்டிய இனிப்புகளின் மேல் தங்கள் கைகளை நீட்டியும் பிறகு வாய் துடைத்தும் நிலை நாட்டிக்கொண்டிருந்தன. செவ்வியல் முழுமையை இத்தேனீரகத்தில் தேனீர் அருந்தினால் அடைவது கடினமென அகமனத்தின் ஆலமரமொன்று தன் விழுதின் ஊசலாட்டத்தால் தரை தொடும் அவதையை அக்கடினத்தன்மையை நடாத்திக் காட்டி ஊர்ஜிதம் செய்தது.. தொன்ம கலாச்சார தேனீரக சூழலிய தூய்மை அதன் உள்ளார்ந்த வரலாற்று தேய்மானத்தின் நிஜத்தை அகத்திறப்பொன்றில் கொட்டிவிட்டுப் போனது. தேனீருக்கான மகோன்னத பயண நிறுத்தத் தேனீரகங்களைத் தேடிக் கண்டடைதல் என்பதும் ஆழ்மன உந்துதல் குதிரைகளுக்கு கடிவாளம் அமைத்தலும் கடினமென ப்ராய்ட் தனது முந்தைய தேனீர் அருந்து நிலை நிகழ் அருந்து நிலை பின்னை அருந்து நிலையென விரிவாகவே சொல்லிச் சென்றிருந்தது நினைவில் வந்தது. மொய்த்த வல்வினையுள் நின்று என தொண்டரடிப்பொடி பாடிச்சென்றிருந்ததும் நினைவில் வர பயணச் செவ்வியல் முழுமையைத் துரத்தும் கால்களின் தீராத வலியை உணரவியன்றது.. தேனீர் அருந்தாமலே மெல்ல அகன்று ஓய்வின் மீளா மீள்ம உருண்டைகளைத் தட்டி யெழுப்பி மகிழுந்துவைக் கிளப்புதல் அவசியமாகிப்போனது. கிளப்புதல் கிளைத்தல் கிளம்புதல் எனும் முக்கால வாழ்வின் பயணங்கள் தேனீரின்றியமையாதெனும் நிஜம் புலப்பட்டது. தேயாத தொன்ம அடுத்த தேனீரகத்தில் கண்டிப்பாக எரியும் அகடு வைக்கோல் போரை தேனீரூற்றி அணைத்தல் சாத்தியப்படுமெனும் நம்பிக்கையில் புறவழிக் கண்களை பாதையில் நட்டு வைக்கும் இயன்முறை செய்கையில் இறங்கத் தொடங்கனேன். இனியொரு தொன்ம தேனீரகம் கண்டடையும் வரையில் பயணச் செவ்வியல் முழுமை பெறுமோ அறியேன்..
ராகவபிரியன்

Comments

Popular posts from this blog