அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..ஊக்கமளிப்பதாக நினைத்துக்கொண்டு பெரியவர்களின் வயதானவர்களின் அதிதீவிர பக்தர்களின் மனம் புண்படும் படி நடந்து கொண்டும் பேசிக்கொண்டும் ..ஒரு சில அதிமேதாவிகள் பிரச்சாரம் செய்துகொண்டும் இருப்பது அரங்கனுக்கான அத்யாவசியப் பணிகளை நடக்கவிடாமல் செய்வதற்குச் சமம் எனப் புரிந்துகொள்ளமறுப்பதை கவனப்படுத்தவேண்டிய கட்டாயத்திற்காகவும் அவசியத்திற்காகவுமே சில விழிப்புணர்வுச் செயல்கள் தேவைப்படுகின்றன..தேவைப்பட்டன...அப்படியான ஒரு காலகட்டத்தில்தான் தேவாரமும் திருவாசகமும் பிரபந்தங்களும் கவிதாயுதமாக மன அம்புறாதூளியில் அடைக்கப்பட்டிருக்கலாம்..
பக்தியென்பதும் அதை கடைபிடிப்பதும் அதற்கான வழிமுறைகளும் ஆலய வழிபாட்டு முறைகளும் எத்தனையோ பெரியவர்களால் மஹான் களால் வகுத்தளிக்கப்பட்டவை...அவைகளை இன்றைய வாழ்வியல் தேவைகளுக்காக புரிதலின்றி சமரசம் செய்துகொண்டு [உதாரணத்திற்கு மிருஷ்டா பூஜைகளே நானறிந்த வரை பெரும்பாலான கோவில்களில் செய்யப்படுவதில்லை...]அதைச் சரியானதென்றும் பூஜை முறைகளை தவறாக செய்துகொண்டிருந்தாலும் அதை யாரும் சுட்டிக் காட்டக் கூடாதென்ற அதிமேதாவி ஆணவ மனப்பாண்மையும் சுய நலச் சிந்தனைகளுக்கு பொருளாசைகளுக்கு பெண்ணாசைகளுக்காக பக்தியைய் பயன் படுத்துதலும் அரங்கன் சிவவடிவமெடுத்து தன் மூன்றாவது கண்ணைத் திறக்கச்செய்துவிடும் என்பதை உணர்த்துகிறது தேவாரப் பாடலொன்று...
மலைபல வளர்தரு புவியிடை மறைதரு வழிமலி மனிதர்கள்..
நிலைமலி கரர்முதல் உலகுகள்..நிலைபெறு வகை நினைவொருமிகும்
அலைகடல் நடு அறிதுயில் அமர் அரியுரு இயல் பரன்..உறைபதி சிலைமலி மதில் சிவபுர நினைபவர்...
நிலைமலி கரர்முதல் உலகுகள்..நிலைபெறு வகை நினைவொருமிகும்
அலைகடல் நடு அறிதுயில் அமர் அரியுரு இயல் பரன்..உறைபதி சிலைமலி மதில் சிவபுர நினைபவர்...
இறைவனின் உறைவிடமான கோவில்களை தனிச் சொத்தாக நினைத்த..தன் சொத்தாக நினைத்த எத்தனையோ சாம்ராஜ்ஜியங்கள் இப்போது இருந்த இடம் தெரியாமல் மறைந்து போன நிஜம் தந்த படிப்பினையை ..வரலாறை அறியாமல் சிலர் இன்னும் கூட இந்தக் கோவிலில் நான் இதைச் செய்தேன் அதைச்செய்தேன்..அதனால் எனக்கு அதிக உரிமையிருக்கிறது என்பதுபோல் நடந்து கொள்வது நமது கலாச்சாரத்தை தொன்மையை பக்திமேன்மையை அரங்கனின் அரங்க நிஜத்தை கொச்சைப்படுத்துவதாக மட்டுமன்றி அல்லாது மீண்டும் ஒரு பேரழிவைச் சந்திக்கவேண்டிய சூழலை நமது சந்ததிகளின் மேல் நாம் வலிந்து திணிப்பதாகவும் ஆகலாம்...
இதுபோன்ற ஒரு காலகட்டம் வருமென்றுதான் அரங்கன் அர்சுனனைப் பார்த்து இவ்வாறு கூறுகிறார்..
ஸமோ தமஸ்தப: ஸெளசம் ஷாந்திரார்ஜவமேவ ச
ஜ்ஞ்சா நம் விஜ்ஞ்சா நமாஸ்திக்யம் ப்ரஹ்மகர்ம ஸ்வபாவஜம்...
ஜ்ஞ்சா நம் விஜ்ஞ்சா நமாஸ்திக்யம் ப்ரஹ்மகர்ம ஸ்வபாவஜம்...
இதன் பொருள் நானறிந்த வரையில்...
மனவடக்கம் புலனடக்கம் ஆணவமற்ற வகையில் தன் கடமையைச் செய்தல் பிறர்மீதான அபாண்ட குற்றச்சாட்டுகளைக் கூறாதிருத்தல் அகத் தூய்மை புறத் தூய்மை மற்றும் ஆலய வழிபாடுகளில் நேர்மையைக் கடைபிடித்தல் சாஸ்திரங்களையும் வழிபாட்டு முறைமைகளையும் கசடறக் கற்றுத் தேர்ந்து அதைத் தவறாமல் கடைபிடித்தல் இவைகளே பக்தி வெளியில் உலாவும் ஜீவன்களின் கடமைகள் என பரமாத்மா கூறுகிறார்...
விஜ்ஞ்சா நம் ஏவ...என்று கூறும் பரமாத்மா...பக்தியெனும் தத்துவசாரத்தை ஒரே வார்த்தையில் அர்சுனனுக்கு உபதேசித்துவிடுகிறார்...இப்போது விஞ்சான ரீதியில் பக்தியை கூறுபோட்டு கோவில்களை வியாபார ஸ்தலமாக்கிய நமது குற்றங்களை எப்படி போக்கிக் கொள்வது..நமது பாவங்களுக்கான பாவமன்னிப்பை எப்படித் தேடுவது என்பதை விரைவில் உங்களுக்காக பதிவிடுகிறேன்..
நன்றிகளுடன்..உங்கள்..அன்பன்...ராகவபிரியன்
நன்றிகளுடன்..உங்கள்..அன்பன்...ராகவபிரியன்

No comments:
Post a Comment