Saturday, November 29, 2025

 





ஸ்ரீஸ்துதி 6.

 இந்து மத ஆன்மீகத்தின் தத்துவப் பார்வை உலகளாவிய ஒன்று. அது வாழ்வின் புயற் காலங்களில் அழிக்கவியலா வேள்வித் தீயை வளர்க்கும் அமைப்பியல் தத்துவங்களை உள்ளடக்கியது. கடும் புயல் வேள்வி நெருப்பை ஊதி வளர்க்க அதில் நம்பிக்கை நெய்யை ஊற்றச் செய்யும் அணுகுமுறையைக் காட்டும் தெய்வீகப் பார்வை அது. இருண்ட வாழ்வின் வானத்தில் தீராது கொட்டும் அடர் மழையின் காலம் ஆகச் சிறியதெனச் சொல்லியபடி மேகம் மறைத்த ஆதவன் தரும் வெளிச்ச காலம் வெகு தொலைவில் இல்லை எனக் காட்டும் இயங்கியல் பார்வை இது. ஆதவனுக்கான ஹவிஸ்களை சமர்ப்பிக்கும் வேள்வித் தத்துவ கோட்பாடு புயலின் துயரை நொடியில் துடைக்கும் வல்லமை உடையது. அழிக்க வேண்டியதை அழித்து உருவாக்க வேண்டியதை புதிதாக உருவாக்குவது தான் இந்து ஆன்மீகத்தின் புயற்கோட்பாட்டுப் பார்வை. வேள்விகளில் சமர்ப்பிக்கப்படும் ஹவிஸ்கள் மானுட உளவியல் கோட்பாட்டுடன் ஒத்திசைவை தருவது இந்து ஆன்மீகத் தத்துவத்தின் கூடுதல் மரபியல் செயல்பாடெனில் அதுதான் நிஜம்.

 ஆதவன் மானுட புத்தியின் குறியீடு. வேள்வியின் அக்னி ஆசைகளின் வெளிப்பாடு. சமித்துக்கள் ஆன்மாவை ஆசைகளாக்கி வேள்வியில் சாம்பலாக்க வேண்டுமெனச் சொல்லும் கருதுகோள் உத்திகள். புயல் வீழ்ச்சியைத் தருவதில்லை. இந்து மதத் தத்துவங்கள் எழுச்சியைத் தான் தரும். புயலில் இருண்ட வாழ்வின் காலத்தே நம்பிக்கை அக்னி வார்த்து ஹவிஸை ஆதவனுக்குச் சமர்ப்பித்தால்  ஞாயிறன் மகிழ்வான்.

 வேள்வியின் பலன் அனைத்தும் அரங்கனையே சேருமென ஆச்சார்யன் நிகம்மாந்த மஹா தேசிகர் சொல்கிறார். அரங்கனுக்கு மானுடம் அடிமையெனும் அரிய தத்துவப் பார்வையை வேதங்கள் தருவதாகச் சொல்கிறார். மானுடன் தான் அரங்கனுக்கு அடிமை இல்லை எனும் எண்ணம் உருவாக இடம் தருதல் கூடாது . அப்படி இடமளித்தால் அரங்கனிடமிருந்து தனது ஆன்மாவை தானே திருடியதாகும். இது ஆன்மீகத் தத்துவத் தகர்புப்புயலை உருவாக்கும் வல்லமையுடையது.

 உத்தேச்யத்வம் ஜநநி பஜதோருஜ்ஜிதோபாதி கந்தம்

ப்ரத்யக் ரூபே ஹவிஷி யுவயோ ரேக சேஷித்வ யோகாத்!

பத்மே பத்யுஸ் தவ ச நிகமைர் நித்ய மந்விஷ்யமாணோ

நாவச்சேதம் பஜதி மஹிமா நர்த்தயந் மாநஸம் ந:

[ ஆச்சார்யன் நிகம்மாந்த மஹா தேசிகர்]

 அரங்க நாயகியும் பெருந்தேவியுமான என் அன்னையே.. மானுட ஜீவித யாகத்தில் அவிர்பாகம் உன்னையும் அரங்கனையும் வரதனையுமே சேரும். மானுட அடிமைகளின் மேலான உங்கள் உரிமை சமமானது. இதைத்தான் ஆன்மீக தத்துவம் போதிக்கிறது. புயலுக்குப் பின்னான அமைதியை உன்னால் மட்டுமே தரவியலும் எனும் நிஜம் வேதங்களின் உட்பொருளாக இருப்பதை தகர்த்தல் அரிது. வாழ்வின் புயல் கரையைக் கடந்து வலுவிழந்துவிடும். பிறகான பரிதியின் கிரணங்கள் வளமையைத் தரும் எனும் நம்பிக்கையோடு உங்கள் இருவருக்குமான ஹவிஸ்களை வாழ்வியல் வேள்வியில் சமர்ப்பிக்கின்றோம்.

 திருவரங்கன் திருவடிகளே சரணம்.

ஆச்சார்யன் திருவடிகளே சரணம்

 ராகவபிரியன்


Wednesday, November 26, 2025

 


சில ரகசியமான விடயங்களை பொதுவெளியில் பதிவு செய்வது எதன் பொருட்டென புரியவில்லை. இருந்தாலும் வரலாற்றில் ஒரு சாமான்யனின் பெயரை செதுக்குவது அவசியம் என்பதால் தான் இந்த ரகசியங்களை வெளியிட வேண்டியிருக்கிறது.
அது 1975 ல் இருந்து 1977 வரையிலான இந்திய கண்டத்தின் அவசர நிலை காலம். ஒரு சாமான்ய ஏழை ஒரு வேளை உணவிற்காக தமிழகத்தை விட்டு கர்நாடகாவில் பதினாறு வயதிலேயே கூலியாய் உழைக்க நேர்ந்த காலம்.
இரும்புத் தாது சுரங்கங்களில் இரும்பு போல்டர் கற்களை சிறு சிறு ஜல்லிக் கற்கலாக உடைக்க வேண்டும். காலை ஏழு மணிக்கு லாரியில் அழைத்துச் செல்வார்கள். அடர்ந்த காடு சூழ்ந்த வேகக்காற்று வீசிக்கொண்டிருக்கும் பள்ளத் தாக்குகள். வெடி வைத்து தகர்க்கப்பட்ட இரும்புத் தாது போல்டர்கள். இரவு எப்போது மீண்டும் ஹோஸ்பேட்டில் கொண்டு விடுவார்கள் என்பது எவருக்கும் அறியாத ஒன்று. சுத்தியல் பிடித்து தோலுரிந்த கைகளால் காய்ந்த சோள ரொட்டியைப் பிய்த்து வெறும் மிளகாய் மட்டும் உப்பு சேர்த்து அரைத்த கூழில் தோய்த்து உண்ணுதல் என்பது அந்த சாமான்யனுக்கு அப்போது விதிக்கப்பட்டிருந்தது.
ஓய்வு கிடைத்த ஒன்றிரண்டு இரவுகளில் ஒரு சில நேரம் அவனுடனான சக தொழிலாளத் தோழர்கள் ஷோலே பார்க்க சாமான்யனை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அப்போது தான் தர்மேந்திரா ஹேமமாலினி அமிதாப் பச்சன் கப்பர் சிங் போன்றோரைப் பற்றி பேசும் கலையைக் கற்றான். அந்த இனிய பேச்சின் கற்பனைப் போதுகளில் சாமான்யனுக்கு கல் உடைக்கும் வலி தெரியாதது அவனுக்கே வியப்பாக இருக்கும்.
அதுவும் ஹேமமாலினியை தர்மேந்திரா திருமணம் செய்து கொண்டுவிட்டார் என்றறிந்த போதுதான் ஒரே அடியில் ஒரு இரும்பு போல்டரை சல்லி சல்லியாக உடைத்திருக்கிறான். அந்த சாமான்யன். அதிலிருந்து அவனின் கைமட்டுமல்ல இதயமும் வலியை உணரத் தொடங்கியது.
அப்படித்தான் மீண்டும் தமிழக்த்தின் டூரிங் கொட்டகையில் நண்பர்களுடன் டிக்கெட் எடுக்காமல் பதினாறு வயதினிலே பார்த்திருக்கிறான் சாமான்யன். பிறகு ஸ்ரீதேவியின் கனவுகள் பட்டினி இரவுகளில் ஒரு சாமான்யனை பூச்சரங்கள் தொங்கும் சப்ரமஞ்சக் கட்டிலில் பசியறியாமல் உறங்கச் செய்திருப்பது வரலாறன்றி வேறென்ன?
பிறகொரு நாளில் ஸ்ரீதேவியை ஒரு இந்தி சினிமாக் காரன் திருமணம் செய்து கொண்டது தெரிந்து ஒரு பெளர்ணமி இரவு முழுவதும் சாமான்யன் பட்டினியாய் விழித்திருந்திருக்கிறான். பட்டினிப் போர் அதன் அறச் சீற்றத்தின் உதாசீனத்தை உணர்ந்த வரலாற்று எச்சங்கள் அவை.
அதே போல் மஞ்சுளா விஜய குமாரின் மூன்றாவது மனைவியானதைத் தொடர்ந்து சினிமா ஹீரோயின்களின் மேலான அன்பை உதறியெறியும் த்யானத்தை பயிலச் செய்யும் சமூக அராஜம் வரலாற்றில் பொறிக்கப்பட்டுத்தானே ஆகவேணும்.
இந்த மண்ணில் ஒரு சாமான்யன் தன் கனவு தேவதையை திருமணம் செய்து கொள்ளவியலா சமூக அவலத்தை சகிக்கவியலா அராஜகத்தை இன்னமும் எத்தனை ஆண்டுகள் தான் நாம் அனுமதிக்கப்போகிறோம் சொல்லுங்கள்.
இதையெல்லாம் வரலாற்றில் பதிவு செய்துதானே ஆகவேண்டும்..
ராகவபிரியன்

Sunday, November 23, 2025

 



விழா காணுதல் என்பது ஒருவித கலை. கண்களால் காணவேண்டியவையும் மனதால் காணவேண்டியவையும் திருவிழாக்களில் கொட்டிக் கிடக்கும். குழந்தைகள் முதல் வாழ்வின் இறுதி நாளில் உள்ளோர் வரை திருவிழாவிற்கு சென்று வருவது நமது மரபு. திருவிழாவில் எந்த வயதில் எதைக் காண்கிறோம் அல்லது எதைப் பார்க்க கண்களை பழக்க வேண்டும் என்பது ஆன்மீகப் பள்ளியின் பாடத் திட்டத்தில் உள்ளது. அந்தப் பாடத் திட்டங்களை அற்புதமாக போதிக்கும் ஆன்மீகப் பல்கலைக் கழகங்கள் தான் நமது திருவிழாக்கள்.
அப்படியான விழாபல்கலைக்கழகங்கள் ஏறக்குறைய தினம்தோறும் காஞ்சியில் தன் வகுப்பறைகளை விரித்து பாடங்களை ஜீவனுடன் போதிப்பது சிறப்பு. அவ்வகுப்பறையில் காணும் கலையை நேர்த்தி மிகு கூர்மையாக்கிக் கொள்ள போதிக்கும் பாடம் ஒன்றைப் பற்றித் தான் இங்கே பதிவு செய்தாக வேண்டும்.
ஓவ்வொரு கார்த்திகை ஞாயிறு இரவிலும் கச்சியின் சபேசனுக்கு தெப்போற்சவம். காஞ்சியின் பேரூர்ந்து நிலையம் தொடங்கி அடர்ந்த போக்குவரத்து நெரிசல் மிகு வீதியெங்கும் சாலையோரக் கடைகள் பாதி வீதியில் பாடங்களை போதித்துக் கொண்டிருந்தன. உள்ளூர் வாசிகள் தங்கள் குழந்தைகளுடன் ஒவ்வொரு கடையிலும் கூட்டமாகக் கூடி மரபுசார் வாழ்வியல் பாடங்களை வைத்த கண் வாங்காமல் பார்த்து இதயத்தில் தேக்கிக் கொண்டிருந்தார்கள்.
ஆன்மீக பாடங்களைக் கேட்க கோவிலின் உள்ளான வகுப்பறைக்குள் புகுதல் வேண்டும். ஆங்கே ஆன்மீக கலைத் திறனை கூர்மையாக்கிக் கொள்ள அகக் கண்களை பார்வைக் கைகளால் பற்றி கோவில் வகுப்பறை இருக்கையில் அழுத்தித் முன்னும் பின்னும் தேயக்க வேண்டும். சூடு பிடித்து புகையெழும்ப உராயச் செய்து தீட்டித் தீட்டி கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும். ஆனால் கோவில் உள்ளே நுழைய இன்னும் ஆறுமாதங்கள் உள்ளதால் சாலையோரக் கடை வகுப்புகளில் சற்று அமர்ந்த இவனின் அகபுற கண்கள் மறந்து போன பாடங்களின் மீள் வாசிப்பைத் தொடங்கின.
நெகிழி வளையல்கள் பொம்மைகள் துணி போர்த்திய மிருக பிரதிமைகள் வீட்டு உபயோக சிறு பொருட்கள் அரிய கைவினைப் பொருட்கள் என விதவிதமான பாடத் திட்டங்களின் அவசியம் ஒவ்வொரு கடையிலும் கூறுகட்டி கும்மாளமிட்டுக் கொண்டிருந்தன. எல்லாவற்றின் மீதும் மோதித் திரும்பும் பார்வைக் கத்தி கைகளில் பிடிகொடுக்காமல் நழுவியதில் ஆன்ம மனதை கூர்மையாக்கும் கத்தியை எப்படிப் பிடிப்பதெனும் பாடம் மட்டும் புரியவேயில்லை..
சட் டென ஒரு கடையின் முன் மேலதிக கூட்டம். வகுப்பறை வாசலில் கூட்டம் கூடி நின்றால் வகுப்பறையில் ஆசிரியல் இல்லையென்றே அர்த்தம். சற்று எட்டிப் பார்க்க வேண்டிய கட்டாயம் கண்களை விரட்டியது. அங்கே மிளகாய் பஜ்ஜி சுடச் சுடச் எண்ணெய் சட்டி மீண்டெழுந்த சூடு ஆறாமல் வாழ்வியலின் விழாக் காணும் பாடத் திட்டத்தை கச்சிதமாக போதித்துக்கொண்டிருந்தது. மெல்ல அகபுறக் கண்களை இழுத்துப் பூட்டி த்யானம் தரும் சாத்வீக சுகம் தேடியபடி அந்தக வகுப்பறையை கடக்க நேர்ந்தது.. காலத்தைக் கடப்பதற்கும் விழாக் கடைகளை கடப்பதற்கும் நிறைய துணிச்சல் தேவைப் படுகிறதல்லவா? அதைத் தரும் ஒரு கீதையின் போதனையை மெல்ல முணுமுணுக்க நேர்ந்தது.
பாஹ்யஸ்பர்சேஷ்வஸக்தாத்மா விந்தத்யாத்மநி யத்ஸுகம்
ஸ ப்ரஹ்மயோக யுக்தாத்மா ஸுகமக்ஷய மஸ்நுதே!!
சப்தம், இன்னொரு உடல் ஸ்பரிசம், கண் அழகென காட்டும் உருவம், பார்வை தரும் சுகம்... போன்றவை தரும் நுகர்வு பண்டங்களை பாஹ்யஸ்பர்ஸம் என்று அரங்கன் சொல்கிறான். கச்சியின் சபேசனும் கார்மேக அரங்கனும் வேறு வேறு பாடங்களையா ஆன்மிக வகுப்பறையில் போதிக்கப் போகிறார்கள்? இதுபோன்ற நுகர்வு பண்டங்கள் தரும் சுகம் தரும் பார்வையை பூட்டிக்கொள்ளத் தெரிந்தவன் வாழ்வின் வகுப்பறையில் அதீத சப்தங்களின் நடுவில் கூட த்யானம் தரும் சாத்வீக சுகம் பெறுதல் சாத்தியம். இதைத் தான் நாம் வகுப்பறைத் தூக்கம் என்று சொல்கிறோம்.
அரங்கனின் வார்த்தைகள் ஆன்ம மனதின் கரும்பலகையில் எழுதப்பட்டிருப்பதை மீள் வாசிக்க நேர்ந்தது. இப்போது மிளகாய் பஜ்ஜி மிதக்கும் இரும்புச் சட்டியோ இன்னபிற பாஹ்யஸ்பர்ஸ பொருட்களோ கண்களுக்குத் தெரியவில்லை. திருவிழா பல்கலை வகுப்பறையில் போதிக்கும் அரங்கனின் சொற்கள் தாலாட்ட நல்ல உறக்கம் தேக்கி கோவில் வாசலையும் கடைக்கூட்டத்தையும் கடந்து வந்துவிடும் த்யானம் கைவரப் பெற்றது கொஞ்சம் நம்புதலுக்கு அப்பால இடைவெளியொன்றில் புகுந்து கொண்டது.
இப்படித்தான் இன்னும் ஆறுமாதங்கள் கச்சியின் பல்கலைக்கழக வளாகங்களில் வகுப்பிற்குச் சென்றாலோ இல்லை செல்லாமல் திறந்த வெளியொன்றிலோ த்யானம் பழகியாக வேண்டும். இல்லையேல் பயிற்சியற்ற மானுட தூக்கத்தையாவது பயின்றாக வேண்டும். பயிற்சியின் முடிவிலோ அல்லது வாழ்வியலின் இறுதி அத்தியாயத்திலோ தியானத்தில் முனைவர் பட்டம் கண்டிப்பாக அரங்கன் தருவான். அதற்குள்ளான கிடைத்த மனதிற்கு நெருங்கிய இடைவெளியொன்றில் ஒரு தட்டில் இரண்டு மிளகாய் பஜ்ஜிகள் மிதந்து வர கடப்பதென்பது கடினமாகி நிற்பதை அந்த ஆடல் வல்லானும் அரங்கனும் போதிக்கத் தொடங்கினார்கள்..
ராகவபிரியன்.

Friday, November 21, 2025

 





காஞ்சியின் சுற்றுப்புறவியல் கவலை தருகிறது. நிறைய ஏரிகள் தூர்க்கப்பட்டு குடியிருப்பு மனைகளாக உருமாற்றப்படுகின்றன. ரியல் எஸ்டேட் அதாவது மெய்ப்பேட்டையியல் அதன் ஆக்டோபஸ் கைகளை காஞ்சியைச் சுற்றி நீட்டிக்கொண்டே இருக்கின்றன. காஞ்சியின் புராதன சின்னங்கள் அதன் கவனிப்பை தொலைத்துவிட்டு சீரிளமைத் திறமிழந்து நிற்பது அவமானமாய் இருக்கிறது.
மணிமேகலை காஞ்சியில் வசித்த பிள்ளையார் பாளையம் எனப்படும் பகுதியில்
பிக்குணிக்கோலத்துப் பெருந்தெரு அடைதலும்,
ஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர்க்குறு மாக்களும்”
எனும் சீத்தளைச் சாத்தனாரின் வரிகளைப்போல பிக்குணிக் கோலத்துடன் கையில் பிட்சை பாத்திரம் ஏந்தி நிறைய ஏழைகளும் பார்வையற்றோரும் வயதானவர்களும் இன்னபிற வீட்டுணவு இல்லாதோரும் குழுமுகிறார்கள்.. அங்கே மணிமேகலையின் அமுதசுரபியென தினமும் காலையிலும் மாலையிலும் தெருவோர சிற்றுண்டி வண்டிகள் தரும் சுவைமிகு உணவுண்டு பின் பசியாறி மீந்த உணவை கெட்டிப்பட்டு ஓடவியலாமல் நிற்கும் சாக்கடையில் எறிந்துவிடுகிறார்கள்.. சாக்கடையின் முகப்பில் தப்பித்துக் கிடக்கும் உணவுகளைத் தின்ன மாடுகளும் ஒரு சில குதிரைகளும் தெரு நாய்களும் சின்னதாய் உணவுத் திருவிழாவை தினமும் கொண்டாடுவதை சீத்தலைச் சாத்தனார் இப்படிச் சொல்லிச் சென்றிருக்க வேண்டும்..
“கார்வறம் கூரினும் நீர்வறம் கூராது,
பார் அக வீதியில் பண்டையோர் இழைத்த
கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சியொடு
மாமணி பல்லவம் வந்தது ஈங்கெனப்
பொய்கையும் பொழிலும் புனைமின் என்று அறைந்த
தெய்வதம் போயபின் செய்தியாம் அமைத்தது
இவ்விடம் என்றே அவ்விடம் காட்ட”
இந்தப் பாடலின் உண்மைத் தன்மையின் நீட்சி இன்றும் கூட காஞ்சியின் நெரிசல் நேர காலையிலும் மாலையிலும் காணக்கிடைப்பது தான் கலாச்சார எச்சங்களின் மீட்சி.
போகட்டும்..
வளம் கொழிக்கும் மெய்ப்பேட்டையியலின் நுண்ணிய செயல்பாடுகளால் வீட்டு மனை வாங்கும் முன் மணிமேகலை பிக்குணிக் கோலத்துடன் சுற்றி வந்த ஏரிகளையும் வேகவதியின் மீதியாற்றுத் தடங்களையும் கண்டுபிடிப்பதென்பது சாதாரணர்களுக்கு சவால் நிறைந்தது.
இருந்தாலும் நகரேஷூ காஞ்சியில் கைவீசி காலாற நடப்பதற்குத்தான் இடமும் இல்லை இயலவுமில்லை ...அவ்வளவு நெரிசல்..
ராகவபிரியன்

Thursday, November 20, 2025

 

கடல் பறவையொன்று

தன் அழகையும்
ஆளுமையையும்
ஓயாத கனவு அலைகளையும் சுமந்தபடி
பள்ளி நோக்கி சிறகடிக்கத்
தொடங்கிய தேவ வேளை அது..
ஒரு தலை காதல் முட்டாள்
மீனுக்கான வலையில்
கத்தியைச் செருகி
ஆலாவிற்கு வீசியதில்
கடல் பரப்பெங்கும்
அதன் கனவு றெக்கைகளும்
பச்சை ரத்தமும்
அலைகளோடு எல்லோரின்
இதயக் கரைகளிலும்
மோதி மோதி திரும்பிக்கொண்டிருக்கின்றன.
பள்ளிக் குழந்தையின்
பாடப் புத்தகங்களின் நடுவில்
கத்தி செருகும்
மாபெரும் மடத்தனம்
போதிக்கும் கல்வி
மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டுமென
கச்சத்தீவு வரை கூவும்
வன்முறையின் கடல்காற்று
சுழன்று சுழன்று அழுகையில்
போலி முற்போக்கு கண்களில்
ஈரப் பதம் ஒரு சதவீதம் கூட
காணப்படவில்லை..
அந்த முட்டாள்
கொலைவாளை அலைகளில்
கழுவி கஞ்சா இலைகளால்
துடைத்துக் கொண்டிருக்கிறான்..
கொலையாளிகளும்
போதை வியாபாரிகளும்
முற்போக்கு முட்டாள்களும்
சுற்றி நின்று
அந்தக் கயவனை காப்பாற்றத் துடிப்பதைத்தான்
கடலன்னையால்
பொறுத்துக் கொள்ளவே இயலவில்லை..
எந்த ராட்சச வேளையில்
தனுஷ் கோடியை
விழுங்கியது போல்
இந்தக் கயமையை சுனாமியென எழுந்து
கடலன்னை
விழுங்கப் போகிறாளோ..?
ராகவபிரியன்

Sunday, November 16, 2025

 



இலக்கிய வலதுசாரிகள்..5
உடல் நிலை நலிவடைந்திந்திருந்த கடந்த பத்து நாட்களாக எழுத்தும் எண்ணங்களும் ஒரு மூலையில் குத்துக்காலிட்டு தலைகவிழ்ந்து அமர்ந்துகொண்டு படுத்தின. பண்டைய தமிழிலக்கியங்களை ஆங்கிலப்படுத்த ஏற்றிருந்த மீந்த புனித கடமை அவ்வப்போது நெற்றியைத் தொட்டுப் பார்த்து இன்னமும் சுரம் விடவில்லை எனச் சொல்லிவிட்டு அருகில் அமர்ந்து கொண்டு உறங்கவியலாமல் செய்தது.
நினைவற்று படுக்கையில் கிடக்கிறேன். எழுத்தின் பழைய நினைவுகள் இமைகளை திறந்தும் மூடவும் செய்து சில காட்சிகளை விரித்துக் காட்டிவிட்டு மீண்டும் சுருட்டி வைத்து விளையாட்டுக் காட்டுகையில் திரும்பிப் படுப்பது இயலாமல் போனது.
ஒருகளித்த நிலையென்பது பேரவதையல்லவா...
சட் டென மனைவி பகவத் கீதை புத்தகத்தை எடுத்து வந்து தலைக்கடியில் வைக்கிறாள். அதீத சுரம் தலையை தொங்கச் செய்கையில் கீதையின் அடர்ந்த புத்தக அணை கழுத்தின் நெகிழ்வுத் தன்மையைத் தக்கவைத்து மீண்டும் தலையை நிமிரச் செய்யுமென நம்புபவள் அவள்.
அந்த பாதி நினைவின் பொழுதில் கீதையை தமிழில் மொழிபெயர்த்த மாபெரும் பன்மொழி வித்தகர் ஸ்வாமினாத ஆத்ரேய சாஸ்திரிகள் மனதின் வெளியொன்றில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.
அவரின் கையில் பக்த ராமதாஸரைப் பற்றிய புத்தகத்தின் பிரதிகள். அவைகளை ஒருமுறை கண்களில் ஒற்றிக் கொள்வதும் மீண்டும் அள்ளி எடுத்து அணைத்துக் கொள்வதுமாக இருக்கிறார்.
திருவாரூரில் ஒருமுறை தொடர்வண்டி நிலையத்தில் என் தகப்பனார் தேஜஸ்வியுடன் ஒரு சாஸ்திரிகள் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். அருகில் சென்றேன். இவன் யார் எனக் கேட்கிறார் ஆத்ரேய சாஸ்திரிகள். என் மகன்தான். ஆனால் முரடனாக இருக்கிறான் என்ன செய்வதென தந்தை கேட்கிறார். பின்னாளில் அவர்தான் மாபெரும் பன்மொழி வித்தகர் ஸ்வாமினாத ஆத்ரேய சாஸ்திரிகள் என அறிய நேர்ந்தது.
கீதையைப் படிக்கச் சொல்லு தேஜஸ்வி. என்ற அவரின் வார்த்தைகளைக் காதில் வாங்கினாலும் தந்தையின் மேலான அடாத கோபத்தில் அவ்விடம் விட்டு அகன்றுவிடுகிறேன். ஆனாலும் அவரின் இந்தக் குரல் மட்டும் இன்னும் காதுகளில் இருந்து அகலவில்லை.
பின் நாளில் என் தந்தை அவரின் கீதை மொழிபெயர்ப்பைப் பற்றி நிறைய என்னிடம் சொல்லியிருக்கிறார்.
ஸ்வாமினாத ஆத்ரேயன் கு.ப.ராஜகோபாலன் தி.ஜானகி ராமன் மற்றும் கரிச்சான் குஞ்சு போன்றவர்களுடன் இலக்கியப் பணியாற்றியிருக்கிறார் என்பதையும் தந்தை சொல்லக் கேட்டிருக்கிறேன். மணிக்கொடியிலும் ஒரு சில கதைகள் ஆத்ரேயன் எழுதியிருப்பதாக தேஜஸ்வி சொல்லியிருக்கிறார்.
இலக்கியம் மொழியாற்றல் இவைகளையும் மீறி பெரியவர் ஸ்வாமினாத ஆத்ரேயர் கர்னாடக இசையில் வல்லவர். ஒரு முறை மதுரை மணி அய்யர் நிதிசால சுகமா எனும் பாடலை பாடமறுத்த போது திரு ஆத்ரேயன் அவர்கள் அந்தப் பாடலின் நிஜ உருவாக்கத்தை அற்புதமாக விவரித்ததாக தி ஹிண்டுவில் படித்திருக்கிறேன்.
திரு ஆத்ரேய சாஸ்திரிகள் அப்பாவிற்குக் கொடுத்த புத்தகத்தை எவருக்கும் கடன் கொடுக்கக்கூடாதெனும் கட்டளையை தன் கையால் எழுதி வைத்திருக்கிறார் தேஜஸ்வி. அதன் ஒளி நகலையும் இங்கே இணைத்திருக்கிறேன்.
மாபெரும் வலதுசாரி இலக்கிய மேதை திரு ஸ்வாமினாத ஆத்ரேயன் மொழிபெயர்த்த கீதையை இவ்வளவு கனத்துடன் தலைக்கடியில் வைத்த பின்னும் தலை சாய்ந்துவிடுமா என்ன? சொல்லுங்கள்.
ராகவபிரியன்

Friday, November 14, 2025

 


முதலில் வோட்டிங் மெஷின் மின்னணு முறையில் ஓட்டுக்களை பாஜகவிற்கு போடுவதாகச் சொன்னார்கள். பிறகு வோட்டிங் மெஷின்களை முன்பே தயார் செய்து இரும்பு அறைக்குள் அடுக்கி வைத்துவிடுகிறார்கள் என்றார்கள். பிறகு பிரேசிலில் இருந்து வந்து ஒருவர் அறுபத்து ஏழு ஓட்டுக்கள் போட்டுவிட்டு யாருக்கும் தெரியாமல் விமானத்தின் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பிரேசில் திரும்பிவிட்டதாக கதைத்தார்கள்.
பீகாரின் மக்கள் எதையும் காதுகொடுத்துக்கூட கேட்கவில்லை. இனி கேட்கப்போவதும் இல்லை. அவர்களின் உரத்தக் குரல் என்ன சொல்கிறதென புரிகிறதா...?
நாளைய தமிழக மக்கள் மீண்டும் உயிர்பெற்று அரசியல் களத்தில் உலவும் பால கங்காதர திலகர் நரேந்திர மோடியையும் சர்தார் வல்லபாய் வல்லமையுடைத்த அமித்ஷாவையும் 239 தொகுதிகளிலும் வெல்ல வைக்கப்போகும் நாள் தொலைவில் இல்லை என்றுதான் உரத்துச் சொல்கிறார்கள்..
ராகவபிரியன்
அன்று நித்திஷ் மோடிஜியிடம் என்ன சொன்னார் தெரியுமா...
243 லட்சியம் 243 ம் நிச்சயம்...என்பதுதான் அது..

Wednesday, November 12, 2025

 



பத்தாம் திகதியன்று உடலில் அனல் கொதித்த அன்று தான் தில்லியில் மனித வெடிகுண்டு வெடித்திருக்கிறது. நேற்றுதான் உடல் நிலையில் சற்று முன்னேற்றம். தொலைக்காட்சியின் படக்காட்சிகள் உடல் வாதையையும் மீறிய மனவாதையின் காய்ச்சலை சுரமாணியின் பாதரச எல்லைகளையும் தாண்டி உடைத்துத் தெறிக்கச் செய்து விட்டது. தடுமாறி திக்கற்று தவித்த அறச்சீற்றம் கொட்டிய வார்த்தைச் சிதறல்களை இங்கே உங்களுக்காக பின் நவீன பாணியில் ...

தில்லி செங்கோட்டையில்
சிகப்பு வண்ணத்தை
மனித உடல்சிதறற்களின்
பிய்ந்து பீறிட்ட குருதியில்
பூசியிருக்கிறான் ஒரு கயவன்...
இதயமில்லாதவனின்
இறுதியாத்திரைக்கு
மகிழுந்துவை அவனின் மதம் கொடுத்தனுப்பியிருப்பதுதான்
கொடுமை..
அவன் ஓட்டி வந்த மகிழுந்துவில்
அவன் சுமந்து வந்திருந்த மதமும்
தீரா மானுட வெறுப்பும்
அவன் கொளுத்திய வெடியில்
வெடித்துச் சிதறாமல்
இருந்ததுதான் வியப்பு.
அக்கொடியவனால்
அப்பாவி உயிர்களும்
அவர்களின் கனவுகளும்
ஏன் ஒரு குழந்தையின்
பால் போத்தலும் கூட
வெடித்துத் தூள் தூளாகி
குதுப்மினாரின் உச்சியில்
குவிக்கப்பட்டிருப்பதால்
இன்று
அது தலைகுனிந்து நிற்கிறது..
இந்தியா
ஒரு போதும்
இதையொத்த வன்முறைக்கு
மண்டியிட்டதில்லை என்பதை
அவனை ஏவிய
கயவர்களின் கல்லறையில்
இப்போதே
எழுதி ஆகவேண்டும்...
அதுவரை
வன்முறைக்கு
பலியான ஒவ்வொரு இந்தியனின்
பச்சை ரத்தமும் அதன்
வண்ணமிழக்கப் போவதில்லை..
ஜெய் ஹிந்த்
ராகவபிரியன்


Venkatachalam Sesha Giri
காங்கிரஸ் கட்சியில் தொடங்கி முழு இந்திய தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக உள்ளது. தெற்கில் பெரிய தாக்குதல் எதுவும் நடக்கவில்லை, ஏனெனில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து திராவிடக் கட்சிகளும், வி.சி.கே.வும் வடக்கு மற்றும் பிற நாடுகளில் தாக்குதல்களைத் திட்டமிட பயங்கரவாதிகளுக்கு உதவுகின்றன.
The entire I.N.D.I .Group starting from Congress party are in support of terrorists. No major attack takes place in the south because Dravidian parties along with congress,communists as well VCK help terrorists in planning attacks in North and other countries
  • பதில்
  • மறைத்திடுக
Venkatachalam Sesha Giri
பயங்கரவாதத்திற்கு காரணமான குற்றவாளிகள்:
1. கேரள முதல்வர் பினராயில் விஜயன் (மலப்புரத்தில் ஒரு மினி பாகிஸ்தானை உருவாக்கினார்)
2. தமிழக முதல்வர் ஸ்டாலின் (பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாட, NIA விசாரணைக்கு அனுமதிக்கவில்லை)
3. மேற்கு வங்க முதல்வர் மம்தா (வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களின் அனைத்து வகையான நடவடிக்கைகளையும் அனுமதித்தல்)
4. தெலுங்கானா முதல்வர் ஆர். ரெட்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, அகிலேஷ், சமாஜ்வாதி தலைவர், அனைவரும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும், ஆதரவு அளித்ததற்காகவும். இந்தியாவில் பயங்கரவாதத்தை எப்படி முடிவுக்குக் கொண்டுவர முடியும்?
  • பதில்
  • மறைத்திடுக
Venkatachalam Sesha Giri
இஸ்லாமிய குற்றவாளிகளுக்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததற்காக உள்துறை அமைச்சரைப் பாராட்ட வேண்டும். உள்ளூர் போலீசாருடன் இணைந்து ATS ஏற்கனவே நகரத்தில் பல தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தியுள்ளது, இதனால் பெரும் உயிரிழப்புகள் ஏற்படvilai
  • பதில்
  • மறைத்திடுக

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...