RAGAVAPRIYAN THEJESWI IS AN EMINENT WRITER OF YOUR CHOICE Welcome to my literary space! I am Ragavapriyan Thejeswi, a writer of poetry, prose, and spiritual reflections in both Tamil and English. My writings explore: Neo Modernism in Literature and spirituality
Friday, March 29, 2019
ராகவபிரியன் தேஜஸ்வி எழுத்தாளர்: காளத்தி நாதரை தரிசிக்க அதிகம் காத்திருக்க வேண்டியத...
ராகவபிரியன் தேஜஸ்வி எழுத்தாளர்: காளத்தி நாதரை தரிசிக்க அதிகம் காத்திருக்க வேண்டியத...: காளத்தி நாதரை தரிசிக்க அதிகம் காத்திருக்க வேண்டியதில்லை..திருப்பதிக்கு வரும் அதே அளவு கூட்டம் காலஹஸ்திக்கும் வருகிறது...ஆனால் தேக்கப்படுவத...
Thursday, March 28, 2019
காளத்தி நாதரை தரிசிக்க அதிகம் காத்திருக்க வேண்டியதில்லை..திருப்பதிக்கு வரும் அதே அளவு கூட்டம் காலஹஸ்திக்கும் வருகிறது...ஆனால் தேக்கப்படுவதில்லை..பக்தியின் வியாபாரம் தவிர்த்த நிஜம் இது..வரிசையில் வரும்போதே அர்ச்சனைத் தட்டுத் தேங்காயை உடைத்து விடுகிறார்கள்..அதை உடைத்துக் கொடுத்துக் கொண்டிருந்த அர்ச்சகர்..என் முகத்தை ஒருதரம் பார்த்தார்..நான் பிரபலமென்று அவருக்குத் தெரியாதென நினைத்திருந்தேன்..மொட்டை வேறு அடித்திருக்கிறேன்..என் முக நூல் பதிவுகளை காளஹஸ்தி வரை படித்திருக்க வாய்ப்பில்லையென எண்ணி இறுமாந்திருந்தேன்..ஆனால் அர்ச்சகர் மீண்டும் ஒருமுறை என் முகத்தைப் பார்த்தார்..இந்த முறை அவர் கண்களிலிருந்து வெளிப்பட்ட அக்னியை என்னால் படிக்க முடிந்தது...விறுவிறு என அவ்விடத்தைவிட்டு அகன்று போனார்..என் பின்னால் கூட்டம் தேங்கத் தொடங்கியது...என் எதிரே வரிசையின் வெற்றிடம் இழுக்கத் தொடங்க நான் அமைதியிழந்தேன்..உடனே ஒரு பிராமணரல்லாத சிப்பந்தி எனக்கடுத்திருந்தவரின் தேங்காயை வாங்கி உடைக்க இப்போது வரிசையில் நான் ஒதுக்கப்பட்டேன்..இது தீண்டாமையில்லையா..?மராட்டிய தயாபவாரின் தலித்திலக்கிய கவிதையொன்று நினைவில் வர...நான் தெலுங்கில் ஏன் எனது தேங்காயை உடைத்துத் தரவில்லையென சிப்பந்தியிடம் கேட்க..அவர்..அழகான தமிழில் சாமி...அய்யரு வந்துருவாரு...கொஞ்சம் இருங்க என்றார்..நான் பரவாயில்லை நீங்களே உடைத்துவிடுங்கள் என்றவுடன்...ஆச்சர்யமாய் அதைவிட இன்னமும் மேலதிக பக்தியுடன் தேங்காயை உடைத்துத் தந்தார்..
சிவபோதச் சித்தாந்தத்திற்கு முன் தோன்றிய திருக்களிற்றுப்படியாரின் பாடலொன்று...
சிவபோதச் சித்தாந்தத்திற்கு முன் தோன்றிய திருக்களிற்றுப்படியாரின் பாடலொன்று...
துன்பமாய் எல்லாம் பரவசனாய்த் தாந்துவளில்
இன்பமாய் தன்வசனாய்த் தான் இருக்கில்- என்பதனால்
நின் வசனாயே இருக்கின் நின் உடனான் நேரிழையாள்
தன்வசனாய் இருப்பன் தாள்..
இன்பமாய் தன்வசனாய்த் தான் இருக்கில்- என்பதனால்
நின் வசனாயே இருக்கின் நின் உடனான் நேரிழையாள்
தன்வசனாய் இருப்பன் தாள்..
இந்தப்பாடலின் தத்துவத்தை திருக்காளஹஸ்த்தியில் கண்கூடாகப் பார்த்து அனுபவிக்கலாம்...ராஜகோபுரம் விழுந்து மீண்டெழுந்த திருவிளையாடலின் திருத்தலமல்லவோ...அது...
ஆன்மீகப் பயணத்தின் இறுதியாக திருப்பதியின் இஸ்கான் சென்றோம்..வேறு இஸ்கான் கோவில்களைப் பார்த்திருக்கிறேன்..அங்கிருந்த அமைதி இங்கில்லாததுபோன்ற ஒரு உணர்வு..ஒரு வேளை ஆன்மீக மார்க்ஸிய பின் நவீன சிந்தனைகள் என் உள்ளத்தின் நிஜபக்தியோகத்தைச் சிதைத்துவிட்டதா அறியேன்..வெளியில் வரும் வழியில் நிறைய வணிக நடப்புகள் இஸ்கானில் இருந்ததைப் பார்த்தேன்..ஒருவர்..அன்னதானத்திற்காக ஒரு ரசீதை நீட்ட என்னாலான தொகையொன்றை அதில் எழுதி அதற்கான தொகையையும் கொடுத்தவுடன் மனமெங்கும் இமயப் பனிப்புகை சிலீரென்று கதவு திறந்து உள் நுழையும் திருப்தியை அனுபவித்தேன்..
இனி அடுத்த நாள் காலைதான் ஊர் திரும்ப வேண்டும்..முழு மாலை ரம்மியமாய் அதுவும் திருப்பதியில் கிடைத்தது அரங்கனருள்தானே..மெல்ல திருப்பதி வீதிகளை தனியாகச் சுற்றிக் கொண்டிருந்தேன்..ஜிலேபி எழுத்துக்களை கூட்டி வாசிக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்த போதில் அன்னமையாவின் பாடலொன்றை அதியற்புதமாக விழியிழந்தவர்களின் இசைக்குழுவொன்று இசைப்பதைக் கேட்டு அவ்விடத்தில் சற்று நேரம் நின்றேன்..எந்தரோ மஹானுபாவலு அந்தருக்கு வந்தனமு என்ற தியாகையரின் கீர்த்தனையை [ஸ்ரீ]காப்பி ராகத்தில் இசைக்க உடல் சிலிர்த்துப் போனேன்..அந்த விழியிழந்தவரின் இசை ஞானம் என்னை என்னவோ செய்தது...அவரின் கையைப் பிடித்து உள்ளங்கையில் ஒரு நூறு ரூபாயை வைக்க..அவர் நான் எதிர்பாராமல் குனிந்து என் கால்களைத் தொட்டு நமஸ்கரிக்க..என்ன பாவம் செய்தேனோ...அவரை இனி இதுபோல் செய்யாதீர்கள் என கேட்டுக்கொண்டு ..அங்கேயே நின்று இன்னும் சில பாடல்களைக் கேட்டு ரசித்தேன்..பகவதபசார பாகவதபசாரங்களை செய்தால் அரங்கனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளும் ஆச்சாரியன் நிகம்மாந்த மஹாதேசிகனின் பாதுகா சகஸ்ர ஸ்லோகத்தை ஜெபித்துக்கொண்டே
"ராமே ராஜ்ஜியம் பிதுரபிமதம் சம்மதம்ச பிரதானாம்.."அருமையான ஸ்லோகமது..அடுத்த நாள் ரேணிகுண்டாவிலிருந்து காலை பத்துமணிக்குப் புறப்பட்டு மாலை திருச்சி வந்து சேர்ந்தோம்..குளிர் சாதன பெட்டியின் முன்பதிவு செய்த இருக்கையென்பதால் என் மனைவி தூங்கிக் கொண்டே வந்த அந்த வாழ்வின் இலக்கிய இடைவெளியில் செய்மோர் ஸ்மித்தை இன்னொரு முறை படிக்கும் வாய்ப்பை அரங்கன் அருளிச் செய்தான்...இந்த பயணக் கட்டுரையை பொறுமையாக வாசித்து விருப்பம் மற்றும் பின்னூட்டம் இட்ட அத்தனை நல் உள்ளங்களுக்கும் அரங்கனருள் கண்டிப்பாக கிட்டும் என்பதை தெரிவிக்கும் அதே வேளையில் ஒரு சிலர் பின் நவீன கவிஞராகவோ எழுத்தாளராகவோ அல்லது இரண்டும் சேர்ந்தகலவையாக உருவானாலோ நான் பொறுப்பல்ல என்பதையும் பதிவு செய்து எனது பெட்டியின் சக்கரங்கள் தார்ச் சாலையில் உடைந்து விடுமென்பதால் தோளில் சுமந்து வரவேண்டும்..எனவே விடை தாருங்கள்...
வணக்கங்களுடன்...அன்பன்...ராகவபிரியன்
"ராமே ராஜ்ஜியம் பிதுரபிமதம் சம்மதம்ச பிரதானாம்.."அருமையான ஸ்லோகமது..அடுத்த நாள் ரேணிகுண்டாவிலிருந்து காலை பத்துமணிக்குப் புறப்பட்டு மாலை திருச்சி வந்து சேர்ந்தோம்..குளிர் சாதன பெட்டியின் முன்பதிவு செய்த இருக்கையென்பதால் என் மனைவி தூங்கிக் கொண்டே வந்த அந்த வாழ்வின் இலக்கிய இடைவெளியில் செய்மோர் ஸ்மித்தை இன்னொரு முறை படிக்கும் வாய்ப்பை அரங்கன் அருளிச் செய்தான்...இந்த பயணக் கட்டுரையை பொறுமையாக வாசித்து விருப்பம் மற்றும் பின்னூட்டம் இட்ட அத்தனை நல் உள்ளங்களுக்கும் அரங்கனருள் கண்டிப்பாக கிட்டும் என்பதை தெரிவிக்கும் அதே வேளையில் ஒரு சிலர் பின் நவீன கவிஞராகவோ எழுத்தாளராகவோ அல்லது இரண்டும் சேர்ந்தகலவையாக உருவானாலோ நான் பொறுப்பல்ல என்பதையும் பதிவு செய்து எனது பெட்டியின் சக்கரங்கள் தார்ச் சாலையில் உடைந்து விடுமென்பதால் தோளில் சுமந்து வரவேண்டும்..எனவே விடை தாருங்கள்...
வணக்கங்களுடன்...அன்பன்...ராகவபிரியன்
கபில தீர்த்தம் என்ற இடத்தில் ஒரு மலையருவி உள்ளது...முன்பு திருப்பதிக்கு நடந்து வருபவர்கள் அங்குதான் குளித்து கபிலர் வணங்கிய லிங்க உரூபமான சிவபெருமானை வணங்கி பின் ஏழுமலையானைத் தரிசித்திருக்கவேண்டும்..கோவிலுள் செல்லும் முன்பே மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள வசதியாகப் பூங்கா ஒன்றும் இருக்கிறது..அருகில் பாதிமுடிவடைந்த நிலையில் ஒரு தேர் நின்றுகொண்டிருக்க எதிரே நம்மாழ்வார் சந்நிதி..உள் நுழைந்து நம்மாழ்வார் பாசுரம் ஒன்றை உரத்தக் குரலில் சொன்னவுடன் பட்டர் துளசி பிரசாதத்தைக் கையில் திணித்து நனவுலகிற்கு எனையழைத்து வந்தார்..செய்மோர் ஸ்மித் பின் நவீன கவிதைகளை எப்படியணுக வேண்டுமென்பதை அட்டகாசமாகச் சொல்லியிருப்பார்...பின் நவீனக் கவிதைகளைப் புரிந்துகொள்ள முயலக்கூடாது...நம்மாழ்வார் எப்படி நாலாயிரம் பாடல்களையும் கூரத்தாழ்வாருக்குக் காட்டிக்கொடுத்தார் என்று மனதில் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் பக்தியிலக்கியமென்று நம்புகிறோமோ ......அதே போல் பின் நவீனக் கவிதையைப் பின் நவீனமென நம்பவேண்டுமென்று சொல்லும் செய்மோர்..அதைப் புரிந்துகொள்ள முயலும் போது கருத்துத் திணித்தல் எனும் கடின மொழிக்கூற்றையும்.. நமது வாடிக்கையான ஒவ்வா மன நிலையையும்... அங்கே திணித்துவிடுகிறோம்..செய்மோர் ஸ்மித் சொல்லியுள்ளதால் அதை நானும் நம்புகிறேன்..நீங்கள் நம்புவீர்களென்றும் நம்புகிறேன்..
உள்ளே உள்ள நரசிம்மர் சந்நிதியின் பட்டர்பிரான்...என்னைப் பார்த்தவுடன் நீங்கள் ஸ்கூல் வாத்தியாரா என்று கேட்டு ஆச்சரியப்படுத்தினார்..ஆமாம் நான் பணிபுரிந்த இடத்தின் பெயரில் ஸ்கூல் என்ற எழுத்துக்கள் இன்னமும் உபயோகப்படுத்தப்படும் உளவியில் ரீதியான மாந்திரீக யதார்த்த வாதம் நினைவிற்கு வர ஒன்றும் சொல்லாமல் ஒரு ஐம்பது ரூபாய்த் தாளைத் தட்டில் வைக்க பரமசிவனின் முடியிலிருந்து பாய்ந்து வரும் கங்கையின் பிரவாகமாய் அர்ச்சனை மந்திரங்கள் சரியான உச்சரிப்புடன் அவர் வாயிலிருந்து பூக்களுடன் சேர்ந்து நரசிம்மர் திருவடியில் மெத் மெத்தென்று விழ அதீத திருப்தியுடன் ஸ்ரீநிவாசம் வந்தடைந்தோம்...எப்படி பின் நவீனம் என்பது நம்புவோர்க்கு நிஜத்தின் நிஜமோ அப்படி நம்பினோர்க்கு அரங்கன் நிஜம்..அரங்கனின் நிஜம் தரும் திருப்தியை திருப்பதியில் கூட வார்த்தைகளால் விவரிக்க முடியாமல் மெல்ல ஸ்ரீ நிவாசத்திலிருந்து தனியாய் இடது ஓரமாய் சாலையில் நடக்கத்தொடங்கினேன்..அணிச்சையாய் ஒரு சிலர் சார் ஆட்டோவா..? எக்கட போத்துன்னாவு சாரே...சார் தமிழா...அரவவாடா....என்றதும் என்னுள்ளிருந்த அரவம் தலைதூக்கிப் படமெடுக்க...அவர்கள் கொஞ்சதூரம் பின் தொடர்ந்து பின் அடுத்த நபரைத் துரத்தத் தொடங்கினார்கள்..முக நூலில் பிந்தொடர்வோர் என்னைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள்..சார் நீங்கள் கவிஞரா..எழுத்தாளரா...என்றெல்லாம் கேட்காமலேயே....விடுங்கள்....தூரத்தில் அந்தி நேர திருப்பதி மலை அரங்கனின் அனந்த சயனமாய் பிரம்மாண்டமாய்த் தெரிய நான் என்னை மறந்து ஏறக்குறைய ஒரு கீலோமீட்டர் நடந்து வந்துவிட்டேன்..நனவோடையின் நடை தூரம் அது எனச் சொல்லும் முன்..நனவின் நிஜத்தில் எதிரே பார்த்தால் கோகிலா ஒயின்ஸ் என்ற பெயர்பலகை ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் தமிழிலும் அருமையாக எழுதப்பட்டிருக்க..உள்ளே மதுபக்தக் கூட்டங்களில் பின் நவீனம் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கவேண்டுமென்ற நினைவுடன்..திரும்பவும் ஸ்ரீ நிவாசம் நோக்கி நடக்கத்தொடங்கினேன்..எனது புத்தகவெளியீட்டு விழாவிற்கு வராத கூட்டங்கள்..ஒரு மதுக் கடையையில் கூடும் புதிர் நிறை காந்த சக்தியை புத்தகத்தில் எப்படி உட்புகுத்துவது என்ற என் பக்தியின் பிரிவுகளை ஒன்றிணைக்க வேண்டிய ஸ்ட்ரெக்சுரலிசம்..பற்றி யோசித்த படியே வந்து கொண்டிருந்தேன்..ஸ்ட்ரெக்சுர்லிசம் எனது ஆன்மீக பயணத்தின் அனுபவங்களை ஒன்றிணைத்ததா எனத் தெரியாமல்..ஸ்ரீ நாவசம் வந்து..அடுத்த நாளின் காளஹஸ்த்திப் பயணத்திற்கான திட்டங்களை பின் நவீன பாணியில் என் சகதர்மினியிடம் விளக்கிக் கொண்டிருந்த வேளை அவளிடமிருந்த குறட்டை ஒலியில் ஓங்காரத்தின் காந்த சக்தியிருந்ததை கண்டு கொலம்பஸின் மன நிலையை ஒருவாறாக உணர்ந்தேன்...அதை உங்களிடம் சொன்னால் நீங்கள் நம்பவாபோகிறீர்கள்...?
உள்ளே உள்ள நரசிம்மர் சந்நிதியின் பட்டர்பிரான்...என்னைப் பார்த்தவுடன் நீங்கள் ஸ்கூல் வாத்தியாரா என்று கேட்டு ஆச்சரியப்படுத்தினார்..ஆமாம் நான் பணிபுரிந்த இடத்தின் பெயரில் ஸ்கூல் என்ற எழுத்துக்கள் இன்னமும் உபயோகப்படுத்தப்படும் உளவியில் ரீதியான மாந்திரீக யதார்த்த வாதம் நினைவிற்கு வர ஒன்றும் சொல்லாமல் ஒரு ஐம்பது ரூபாய்த் தாளைத் தட்டில் வைக்க பரமசிவனின் முடியிலிருந்து பாய்ந்து வரும் கங்கையின் பிரவாகமாய் அர்ச்சனை மந்திரங்கள் சரியான உச்சரிப்புடன் அவர் வாயிலிருந்து பூக்களுடன் சேர்ந்து நரசிம்மர் திருவடியில் மெத் மெத்தென்று விழ அதீத திருப்தியுடன் ஸ்ரீநிவாசம் வந்தடைந்தோம்...எப்படி பின் நவீனம் என்பது நம்புவோர்க்கு நிஜத்தின் நிஜமோ அப்படி நம்பினோர்க்கு அரங்கன் நிஜம்..அரங்கனின் நிஜம் தரும் திருப்தியை திருப்பதியில் கூட வார்த்தைகளால் விவரிக்க முடியாமல் மெல்ல ஸ்ரீ நிவாசத்திலிருந்து தனியாய் இடது ஓரமாய் சாலையில் நடக்கத்தொடங்கினேன்..அணிச்சையாய் ஒரு சிலர் சார் ஆட்டோவா..? எக்கட போத்துன்னாவு சாரே...சார் தமிழா...அரவவாடா....என்றதும் என்னுள்ளிருந்த அரவம் தலைதூக்கிப் படமெடுக்க...அவர்கள் கொஞ்சதூரம் பின் தொடர்ந்து பின் அடுத்த நபரைத் துரத்தத் தொடங்கினார்கள்..முக நூலில் பிந்தொடர்வோர் என்னைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள்..சார் நீங்கள் கவிஞரா..எழுத்தாளரா...என்றெல்லாம் கேட்காமலேயே....விடுங்கள்....தூரத்தில் அந்தி நேர திருப்பதி மலை அரங்கனின் அனந்த சயனமாய் பிரம்மாண்டமாய்த் தெரிய நான் என்னை மறந்து ஏறக்குறைய ஒரு கீலோமீட்டர் நடந்து வந்துவிட்டேன்..நனவோடையின் நடை தூரம் அது எனச் சொல்லும் முன்..நனவின் நிஜத்தில் எதிரே பார்த்தால் கோகிலா ஒயின்ஸ் என்ற பெயர்பலகை ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் தமிழிலும் அருமையாக எழுதப்பட்டிருக்க..உள்ளே மதுபக்தக் கூட்டங்களில் பின் நவீனம் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கவேண்டுமென்ற நினைவுடன்..திரும்பவும் ஸ்ரீ நிவாசம் நோக்கி நடக்கத்தொடங்கினேன்..எனது புத்தகவெளியீட்டு விழாவிற்கு வராத கூட்டங்கள்..ஒரு மதுக் கடையையில் கூடும் புதிர் நிறை காந்த சக்தியை புத்தகத்தில் எப்படி உட்புகுத்துவது என்ற என் பக்தியின் பிரிவுகளை ஒன்றிணைக்க வேண்டிய ஸ்ட்ரெக்சுரலிசம்..பற்றி யோசித்த படியே வந்து கொண்டிருந்தேன்..ஸ்ட்ரெக்சுர்லிசம் எனது ஆன்மீக பயணத்தின் அனுபவங்களை ஒன்றிணைத்ததா எனத் தெரியாமல்..ஸ்ரீ நாவசம் வந்து..அடுத்த நாளின் காளஹஸ்த்திப் பயணத்திற்கான திட்டங்களை பின் நவீன பாணியில் என் சகதர்மினியிடம் விளக்கிக் கொண்டிருந்த வேளை அவளிடமிருந்த குறட்டை ஒலியில் ஓங்காரத்தின் காந்த சக்தியிருந்ததை கண்டு கொலம்பஸின் மன நிலையை ஒருவாறாக உணர்ந்தேன்...அதை உங்களிடம் சொன்னால் நீங்கள் நம்பவாபோகிறீர்கள்...?
காளஹஸ்தியில் சர்ப்ப தோஷங்கள் நீங்குவதாக ஒரு நம்பிக்கை...நாம் சூரியனையும் சந்திரனையும் கிரஹனத்தன்று பாம்புகள் விழுங்குவதாக இன்னமும் நம்புகிறோம் என்றால்..அதை எத்தனையோ நூற்றாண்டுகட்டு முன்னால் நைடதம் என்ற சாதக நூலின் தமிழாக்கப் பாடலொன்றில் அருமையாய்... இறுமாந்து உறும் வெண்மதி என்றிருப்பதைப் படித்து... இறுமாந்துபோனது நினைவிற்கு வந்தது..சந்திர கிரஹன காலத்தில் ஜனிக்கும் சிசுவால் பீடிக்கப்படும் சாபங்களை அழகாக நைடத நூல் விளக்குகிறது..
பூமேஸ் சாயாம் ப்ரவிஷ்ட ஸ்தகதியதி
சசி நம் சுக்லபஷாவஸாநே
ராஹூர் பரஹ்ம பரஸாதாத்மதிக தவரஸ்
தத்தமோவ்யாஸ் துல்ய:
சசி நம் சுக்லபஷாவஸாநே
ராஹூர் பரஹ்ம பரஸாதாத்மதிக தவரஸ்
தத்தமோவ்யாஸ் துல்ய:
மேற் கண்ட ஸ்லோகத்தில் ராகு கேதுக்களால் பிடிக்கப்படும் சூரிய சந்திரர்களால் அந்த நேரத்தில் ஒளி தரமுடியவில்லை அவ்வளவுதான்..என்றிருக்கிறது..ஆனால் பின் நாளில் சாதக பலன்கள் சொல்வதாகச் சொல்லிக்கொள்பவர்களின் பம்மாத்து மொழியாக்கத்தால்..அந்த நேரம் பீடை நேரமென்றும் அது மனித வாழ்விற்கு ஆகாதென்றும் சொல்லப்பட்டு இன்றளவும் நம்பப்பட்டுக்கொண்டுமிருக்கிறது...உதாரணத்திற்கு கறைவாள் அரவு என்றிருக்க வேண்டியதை கறைவாழ் அரவு என்று திரித்து எழுதி பயம் உண்டாக்கி அது சரிதான் என்று இன்றளவும் நம்மப்பட்டுக்கொண்டிருப்பது..சில நேரங்களில் சில மனிதர்கள்..[நன்றி ஜெயகாந்தன் அவர்களுக்கு] ஆயிரக் கணக்கில் பணம் கொடுத்து இந்தக் கொடுமையை நம்பிச் செல்வது..சகிக்க முடியா வேதனையைத் தரும் கனத்த இதயமுடன் வரிசையில் காளத்தி நாதரை தரிசிக்க நின்றுகொண்டிருக்கிறோம்...
ராகவபிரியன்
இன்னும் வரும்
ராகவபிரியன்
இன்னும் வரும்
Tuesday, March 26, 2019
18.03.2019 அன்று விடியல் நான்கு மணிக்கெல்லாம் ஸ்ரீனிவாசம் எதிரே உள்ள நெடுஞ்சாலையை மிகச் சுலபமாகத் தாண்டி தள்ளுவண்டியில் தரப்பட்ட மிகத் தரமான விலைமலிவான தேனீர் அருந்திவிட்டு தானாகக் கூவியழைத்த முச்சக்கர தானியங்கி ஊர்தியில் திணித்துக்கொண்டோம்..ஒரு யதார்த்த நிகழ்வாய் ஊர்தி ஒட்டுனர் வழியில் நின்ற இன்னும் இருவரை ஏற்றிகொண்டு திருப்பதியின் எல்லாச் சாலைகளையும் சுற்றிக் காண்பித்தார்..நாங்களும் மாந்திரீகத்திற்கு ஆட்பட்டவராய் கொஞ்சம் நகர்ந்து இடம் கொடுக்க ...ஆகச் சிறந்த ஆந்திராவின் மருத்துவமனைகள் அங்கிருப்பதாக மாந்திரீக யதார்த்த வாதம் செய்து...பெருமைப்பட்டுக்கொண்டே நடுவில் ஏறிய இருவரையும் இறக்கிவிட்டுவிட்டு எங்களை அலிபெறி அதாவது திருப்பதிமலையடிவாரத்தில் இறக்கிவிட்டார்...
வாகனங்களைத் தவிர்த்து நடந்து மலையேறுவதென்பது ஒரு தனித்த பக்தியின் தெய்வீக நடப்பின் நிஜம்..பண்டைய தமிழர்கள் காசிமுதல் ராமேஸ்வரம் வரை நடந்தே போயிருக்கிறார்கள்..நமது ராமானுஜர் கூட திருப்பதி மலையை எந்த வசதியுமற்ற பாதுகாப்பற்ற அபாயங்கள் நிறைந்த அந்நாட்களில் தினம் மூன்று முறை நடந்து ஏறி வழிபாடுகளைச் செம்மைப்படுத்தியதாக வரலாறு பேசுகிறது...
திருப்பதி பயணத்தின் உச்சகட்டமாய் காளிகோபுரம் ஏறும் கடைசீ சில படிகளுக்கு முன் எங்களுடன் பிறந்து சில நாட்களே ஆன கைக்குழந்தையையும் சுமந்து நடந்து ஏறி சற்று முன்னே அமர்ந்திருந்த ஒரு அன்னை தன் குழந்தைக்கு பால் கொடுக்கும் அந்த நொடிகளில் ..மிக அருகில் அந்த இருளுக்குள் பாய்ந்த சொற்ப வெளிச்சத்தில் மின்னும் கண்களுடன் ஒரு சிறுத்தைப்புலி அந்தக் குழந்தையைப் பார்த்துக்கொண்டிருந்ததை நானும் மனைவியும் மகளும் கண்டு அரண்டு போனோம்..அந்த அறியாக் கூட்டத்தை நாங்கள் எச்சரிக்கப் போட்ட கூச்சலில் அந்த சிறுத்தை நொடியில் தாவி மறைந்து போனது...மார்ட்டின் செய்மோர் ஸ்மித் நவீனத்திற்கான மூன்று காரணிகளை அலசுகிறார்..அவை வாழ்வின் நிலையாமை ஏதுமற்ற நிலையின் மீதான முடிவு மற்றும் இவ்விரண்டையும் பிரக்ஞையின்றி இல்லையென்று கூறிக்கொண்டே வாழ்தல்..இவைதான் நவீனமென ஆணித்தரமாக அடித்துப்பேசியது நினைவில் வந்து போக சிறுத்தையை.. ஒரு அபாயத்தை... அரங்கனை.. பக்தியை.. வாழ்வின் நிலையாமையை... ஏதுமற்ற ஒரு நிலைக்கான பிரயத்தனங்களை.... மிக அருகில் தரிசித்த அந்த நொடிகள் பின் நவீனத்திற்கான புத்தம் புதிய உலகை திறந்த.. பட்டு நூல் கத்தரியால் வெட்டப்பட்ட... ஒரு மெலிய அணுவின் வெளிவருவதற்கு முன்னான அவதைச் சப்தங்களின் விபரீத முதல்படியை வெளிச்சமிட்டன...
நவீனத்தைக் கடப்பதைவிட ஒரு அபாயத்தைக் கடந்துவிட்ட அந்த நொடிகள் அரங்கன் மீதான எங்கள் பக்தியின் உச்சத்தை உணர்த்தியதாகவே உணர்ந்தோம்..எங்களுக்கு ஒதுக்கப்பட அந்த சரியான நேரத்தில் ஏழுமலையில் நின்ற திருக்கோலத்தில் இருக்கும் அரங்கனை..திருப்பாணாழ்வாரின் பாசுரத்தில் நமக்குக் காட்டிய அருவ தோற்றத்தின்.ஒளிக்கீற்றை..
மந்திபாய் வடவேங்கட மாமலை வானவர்கள்..
சந்திசெய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்ததுபோல் ஒர் எழில்...
உந்திமேல் அதுவன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே..
சந்திசெய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்ததுபோல் ஒர் எழில்...
உந்திமேல் அதுவன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே..
என்று மனதில் சிவந்த ஆடையுடுத்தி ஆரஞ்சு நிற அங்க வஸ்திரம் அணிந்த அரங்கனுருவை மனதில் நினைத்து அங்கேயே ஒரு பாசுரம் இயற்றி...மனதிற்குள்தான் வெளிவந்தபோது..அதுவரை பட்ட இடிகள்..நசுக்கல்கள்..பின்னிருந்து வலிந்த தள்ளல்கள் எல்லாம் மறைந்து ஒரு ஒளியாண்டுக்குள் வாழ்ந்து நிறைந்த மன நிறைவு ..கொடுக்கப்பட்ட சிறிய லட்டுப் பிரசாதத்தில் இனிதாய் சுவையாய் இதயம் வரை இனித்தது..
மெல்ல மலையிறங்க...எப்போதோ முக நூலில் நான் எழுதிய மலையிறங்கும் மிதிவண்டிப் பயணம் என்ற பின் நவீன கவிதை நினைவில் வர வயிற்றைப் பிசைந்தது... நவீனத்தைக் கடக்க மூன்று காரணிகளை ஒதுக்கிவிடச் சொன்னார் செய்மோர் ஸ்மித்..உன் இருத்தலால் ஒரு உபயோகமும் இல்லை என்ற சிந்தனையை முதலில் தூக்கியெறியச் சொன்னார்..அது தான் முதல் காரணி...நானும் என் இருத்தலுக்காக சிறுத்தையை விரட்ட குனிந்து கண்டெடுத்த சிறிய கல்லை ...என் அப்போதைய இருத்தலின் நிஜத்தை ..சிறுத்தை சென்ற பின்பு தூக்கியெறிந்து விட்டேன்..நானும் அந்தச் சிறுகல்லும் திருப்பதி மலையின் ஏதோ ஒரு மூலையில்..அன்னமையா பசியால் துடித்த ஒரு தேவவேளையில் அரங்கன் பத்மாவதியாய்க் காட்சிதந்த அந்தப் புனித இடத்தில்..அன்னமையாவிற்கு ஊட்டிவிடும்பொழுதுகளில் தப்பிவிழுந்த சில அன்னப் பருக்கைகளுடன்.. விழுந்து கிடப்போம்..
சந்தி காலத்தில் அதாவது பகலும் இரவும் சந்திக்கும் வேளையில் பிறக்கும் சிசு சொற்ப ஆயுளுடையது என்று பிருகத் சம்மிதையில் கூறுயிருக்கிறது...அந்தச் சுலோகம்...
அந்தாஸ் தமாயாத் ஸ்ந்தியா வ்யக்திபூதா நதுராகயாவத்
தேஜ..பரிபாதிமுகாத்பா நோர் அர்தோதயோயாவத்..
தேஜ..பரிபாதிமுகாத்பா நோர் அர்தோதயோயாவத்..
திடீரென்று இந்தச் சுலோகம் நினைவிற்கு வர சிறுத்தை கூர்ந்து நோக்கிய அந்த சிசு கண்டிப்பாக சந்தியா காலத்தில் பிறந்திருக்க சாத்தியமில்லை...அதன் ஆயுள் அரங்கனருளால் கெட்டியானதென்பது விளங்க..நாங்கள் மாலை கபில தீர்த்தம் நோக்கி எங்களது ஆன்மீகப் பயணத்தின் அடுத்த அட்டவனையின் கட்டளைக்குக் கீழ்படிந்த பயணத்தைத் துவக்கினோம்...
இன்னும் வரும்..
ராகவபிரியன்
இன்னும் வரும்..
ராகவபிரியன்
Wednesday, March 20, 2019
ராகவபிரியன் தேஜஸ்வி எழுத்தாளர்: அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..எனது திருப்பதி பயண அன...
ராகவபிரியன் தேஜஸ்வி எழுத்தாளர்: அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..எனது திருப்பதி பயண அன...: அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..எனது திருப்பதி பயண அனுபவங்களை விரைவில் பதிகிறேன்..முன் கூட்டியே முன்பதிவு செய்த இருக்கையில் பயணித்ததால் என்னு...
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..எனது திருப்பதி பயண அனுபவங்களை விரைவில் பதிகிறேன்..முன் கூட்டியே முன்பதிவு செய்த இருக்கையில் பயணித்ததால் என்னுடன் மூன்றாவது முறையாக டெரிடாவும் வந்தார்..அவர் சொல்கிறார்...பின் நவீனம் என்பது நம்பவைக்கும் புனைவெழுத்தாம்..மாயூரம் வேத நாயகம் பிள்ளையின் முதல் நாவலை அத்தனை வாசகர்களும் உண்மையான நிகழ்வின் பிரதியென்றே எண்ணியிருந்ததாகப் படித்திருக்கிறேன்..ஆனால் நவீனத்தில் அது புனைவென்று சொல்லி உண்மையை சாதுர்யமாக மறைத்துவிட முடிகிறது...பின் நவீன கவிதைகள் புனைவின் பெயரால் ஒரு கவிஞனோ எழுத்தாளுமையோ தன் அதிகாரத்தை வாசகன் மேல் செலுத்துவதென்பது அந்த வாசகனை அந்தப் பிரதியிலிருந்து விலகி நிற்க வைத்துவிடுகிறதென்பதே என் அனுபவ நிஜம்...இருந்தாலும் வலிமைமிக்க பின் நவீனக் கவிதையால் ஒரு கவிஞனால் வாசகனிடம் நெருங்கிவிட முடியுமென்று நான் நம்புவதால் இந்தப் பின் நவீன கவிதையை இங்கே பதிவிடுகிறேன்..பின்னூட்டங்களோ விருப்பங்களோ எதுவுமற்றிருப்பின் இதன் வெற்றி ஊர்வலம் தொடங்கிவிட்டதென்றே அறிக...வணக்கங்களுடன்...அன்பன்...ராகவபிரியன்
மலையேறி வந்து முடியிறக்கியானது..
மீந்தச் சிறு உச்சிக் கற்றைகளில்
பற்றை முடிந்த ராசகுமாரன்
தொப்பி மகுடமணிந்து
சவரக் காயங்களின் பிசிறுரத்தம் தடவுகிறான்...
பற்றை முடிந்த ராசகுமாரன்
தொப்பி மகுடமணிந்து
சவரக் காயங்களின் பிசிறுரத்தம் தடவுகிறான்...
கோவிலருகிலுள்ள
சோபாணக் கடையின் வரைபடமொன்றை
மனதில் சுருட்டிக் கொள்கிறான்..
சோபாணக் கடையின் வரைபடமொன்றை
மனதில் சுருட்டிக் கொள்கிறான்..
பக்திக் கடலில் மிதக்கும்
பாறைகளொன்றில்தான்
கடையிருக்கிறது..
பாறைகளொன்றில்தான்
கடையிருக்கிறது..
தொப்பி கழற்றி
கடலுக்குள் வீசிவிட்டு
கையளவு கடல் நீரெடுத்து
முகம் கழுவ
காய்ந்த ரத்தப்பிசிறுகள்
நெற்றியில் ஒட்டிக்கொள்கின்றன..
கடலுக்குள் வீசிவிட்டு
கையளவு கடல் நீரெடுத்து
முகம் கழுவ
காய்ந்த ரத்தப்பிசிறுகள்
நெற்றியில் ஒட்டிக்கொள்கின்றன..
தொப்பிமிதக்கும் தீவொன்றில்
கடவுளிடம்
நேரில் வேண்டுதல்களை வைத்தபடி
உறங்கிப்போக..
கடவுளிடம்
நேரில் வேண்டுதல்களை வைத்தபடி
உறங்கிப்போக..
அவனைச் சுற்றி
சப்ளாக் கட்டைகளில் சப்தமிட்டபடி
பக்திமிஞ்சிய சுறாமீன்கள் சுற்றிச் சுற்றி
மீந்த போத்தலின்
கடல் நீர்ச்சுவையினும் இனிதான
சொட்டு நீருக்காக
நடனப்பெருமூச்சு விட
அதில் அவனின்உச்சி முடிகள்
ஒவ்வொன்றாய் உருவப்பட்டுக்கொண்டிருந்தது...
சப்ளாக் கட்டைகளில் சப்தமிட்டபடி
பக்திமிஞ்சிய சுறாமீன்கள் சுற்றிச் சுற்றி
மீந்த போத்தலின்
கடல் நீர்ச்சுவையினும் இனிதான
சொட்டு நீருக்காக
நடனப்பெருமூச்சு விட
அதில் அவனின்உச்சி முடிகள்
ஒவ்வொன்றாய் உருவப்பட்டுக்கொண்டிருந்தது...
அவனின்
மொட்டைத் தலையில்
எப்போதுமே
மகுடம் சரியாகப் பொருந்துவதில்லை..
ராகவபிரியன்
மொட்டைத் தலையில்
எப்போதுமே
மகுடம் சரியாகப் பொருந்துவதில்லை..
ராகவபிரியன்
Thursday, March 14, 2019
ஆன்மீக நிகழ்வுகள் ஆயிரமாயிரமாண்டுகளாய் நிகழ்ந்த வண்ணமுள்ள நம் திருவரங்கத்தின் ஆதி பிரம்மோத்ஸவமான பங்குனித் திரு நாளின் இரண்டாம் நாள் திருவரங்கன் ஜீயபுரம் எழுந்தருளுவார்...இன்றும் இதோ எழுந்தருளியிருக்கிறார்..தெய்வ பக்தியென்பதியென்பது யதார்த்த அனுபவ நிஜம்..அந்த நிகழ்வின் காரண கர்த்தாவான அரங்கன் புரிந்த அற்புதங்கள் வரலாறாகி அந்த வரலாற்றை தலைமுறை தலைமுறைகளாக கொண்டு சேர்க்க நிகழ்த்தப்படும் நிகழ்வுகளே திருவிழாக்களும் உத்ஸவங்களும்...எப்படி பின் நவீனத்திற்கு ராஜம் அய்யர் பங்களிப்புகள் மற்றக்கப்பட்டதோ அப்படி பின் நவீன யுகத்தின் கோவில் திருவிழாக்களின் ஆதி தொடக்க நிகழ்வுகள் மறக்கப்பட்டுவிட்டன..
அகண்ட காவிரியாய் குடகிலிருந்து குதித்தோடிவரும் ஆறு முக்கம்பூ என்ற இடத்தில் இரண்டு ஆறுகளாய்ப் பிரிந்து சில ஆயிரமாண்டுகட்கு முன்பு மணப்பாறை வரையும் பல சிற்றாறுகளாய் ஓடியிருந்திருக்க வேண்டும்..நடு நடுவே சில தீவுகளும் தீபகற்பங்களும் சிற்றூர்களாய் இருந்தவிடத்து இன்றும் கூட ஒரு சிறிய தீப கற்பமாய்த் திகழும் ஜீயபுரத்தில் ஒரு மூதாட்டியும் அரங்க பக்தனான சின்னஞ்சிறுவனும் வசித்து வந்தது நிஜம்..கரைபுரண்ட காவிரி பங்குனியின் முதல் நாளில் சற்றே தன் உடல் சுருக்கிக்கொள்ள அந்தச் சிறுவன் காவிரியில் குதித்து நீந்த ஆற்றின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு இன்றைய அம்மா மண்டபத்தில் படியேறுகிறான்..மூச்சுத் திணற மீண்ட உயிர் உட்புகுந்த அந்த அதிர்வில் கண்களின் புகைசூழ் பார்வையில் எதிரே சங்கு சக்ரதாரியாய் அரங்கன்...ஆனால் ஜீயபுரத்தில் அந்த மூதாட்டி பெயரனைக் காணாமல் தயிர்சாதம் பிசைந்து வைத்துக்கொண்டு ஜீயபுரக் காவிரிக்கரையில் இன்றைய மண்டபம் இருக்குமிடத்தில் கதறிக்கொண்டிருக்க...அந்த பெயரனாய் வடிவெடுத்த அரங்கன் தயிர்சாத உருண்டைகளை அந்த மூதாட்டி ஊட்ட மிடறு மிடறாய் உண்ணும் கண்கொள்ளாக் காட்சி இன்றும் கூட ஒரு சில அரங்க பக்தர்களுக்கு நிகழ்த்திக்காட்டுகிறான் அரங்கன்..அன்று இரவு பெயரன் கரைமீது நடந்து வீடு வர உடனே அரங்கன் மறைந்து விட... அந்த மூதாட்டி வந்திருந்தது அரங்கனென உணராது போனேனே....அரங்கா..நீயெனில் அக்கார அடிசில் செய்திருப்பேனே என்று அரற்ற...அரங்கன் திருவரங்கத்தில் அக்கார அடிசில் தினம் சாப்பிட்டு அலுத்துப்போனேன் அம்மா...அரங்க நாயகியே எனக்குத் தயிர்சாதம் ஊட்டிவிட்ட நிகழ்வம்மா இது...இனி ஒவ்வொரு ஆண்டும் இத்திரு நாளில் நான் உன் வீட்டிற்கு வருவேன் என்று உறுதியளித்து ..தன் நிஜ விஸ்வரூபத்தைக் காட்டி மறைந்துவிட..அந்த நிகழ்வை... இன்றுவரை கடைபிடிக்கும் அரங்கனின் உறுதியை சில நூறு வருடங்கட்கு முன்பு எதிரிகள் தடுத்துவிட்டது காலக்கொடுமையென்றே ஆன்மீக அன்பர்கள் கருதிவந்திருக்கிறார்கள்... அந்தச் சிறுவனின் மறுபிறப்பான கொப்பணார்யனின் பிரம்மப் பிரயத்தனத்தால் மீண்டு வந்த அரங்கனின் உத்சவங்கள் வழமைபோல் கொண்டாடப்படவேண்டும் என்ற வேண்டுகோளை..அரங்கனடியார்கள்... ஆச்சார்யர் நிகம்மாந்த மஹா தேசிகனிடம் வைக்க..ஆச்சார்யர்... உடனே ஒரு ஸ்லோகமொன்றை ஓலைச் சுவடியில் எழுதி அரங்கனின் சன்னிதியில் வைக்கிறார்...
யதிப் பிரவர பாரதீ ரஸபரேண நீதம் வய:
ப்ரபுல்ல பலிதம் சிர; பரமிஹ ஷமம் ப்ரார்த்தயே:
நிரஸ்த ரிபு ஸம்பவே க்வச ந ரங்கமுக்க்யே விபோ
பரஸ்பர ஹிதைஷிணாம் பரிஸரேஷூ மாம் வர்த்தய!!
ப்ரபுல்ல பலிதம் சிர; பரமிஹ ஷமம் ப்ரார்த்தயே:
நிரஸ்த ரிபு ஸம்பவே க்வச ந ரங்கமுக்க்யே விபோ
பரஸ்பர ஹிதைஷிணாம் பரிஸரேஷூ மாம் வர்த்தய!!
இதன் பொருள் எனது தாழ்மையான ஆகக்குறைந்த சிறிய அறிவிற்கு எட்டிய வரை..திருவரங்கனே எதிரிகள் மத்தியில் நான் வாழும்படியாகிவிட்டது..காவிரியின் நடுவில் இருக்கும் நீ எனது சிறிய வயதில் ஸ்ரீபாஸ்யத்தையும் ஸூத்ரங்களையும் கற்பித்துவிட்டாய்...இப்போது முதுமை வந்து தலை நரைத்து எதுவும் செய்யமுடியாதிருக்கிறேன்...கொப்பணார்யனாய் அவன் அன்னையிடம் பெற்ற அமுத தயிர்சாதமாய் எங்கள் குறைகளை நீ ஏற்றுக்கொண்டு எதிரிகள் இல்லாத சாத்விக குணம் கொண்ட ஜீயபுரத்தில் எழுந்தருளுவது போல் எங்கள் மத்தியில் எழுந்தருளி எங்கள் குறைகளை பயங்களை எங்களின் மீதான அசூயைகளை நீக்கியருள வேண்டும்...
அரங்கன் திருவடிகளே சரணம்...
ஆச்சார்யன் நிகம்மாந்த மஹாதேசிகன் திருவடிகளே சரணம்...
நன்றிகளுடன்...அன்பன்...ராகவபிரியன்
ஆச்சார்யன் நிகம்மாந்த மஹாதேசிகன் திருவடிகளே சரணம்...
நன்றிகளுடன்...அன்பன்...ராகவபிரியன்
தனது நாடகங்களில் பிரச்சாரத் தன்மையில்லாத அழகியலோடு கூடிய பூச்சற்ற உண்மைகளை ...அதுவும் அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்வியல் அவலங்களை எந்தக் கம்யூனிஸ பள்ளிக்கும் செல்லாமல் தனது எழுத்தின் வலிமையால் மட்டுமே சாத்தியமாக்கிக் காட்டிய பெர்டோல் பெரெக்ட் உலக இலக்கியங்களின் சிறப்பியல்புகள் என்பது கருத்துத் திணித்தல் இல்லை என்று உரக்க முழக்கமிட்டவர்.. அவர் தனது நாடான ஜெர்மனியின் இரண்டாம் உலகப்போரின் பாதிப்புகளைச் சகிக்காமல் எழுத்துச் சாட்டையால் ஆதிக்க மனப்பான்மையுள்ள அத்தனை பேரின் முதுகிலும் ஒரு கோடாவது ரத்தச் சிவப்பில் போடாமல் விடவில்லை..
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தந்திர அரசியலுக்கு உடன்பட்ட அதிகாரமிக்க குழுவொன்று பெரெக்டையும் இன்னும் அந்நாளில் பிரபலமாயிருந்த 20 நபர்களையும் விசாரனைக்கு வரச் சொல்லி உத்தரவிட...மற்றவர்கள் தயங்க நிஜமான சிம்மமாய் அவர்கள் முன் தோன்றி...ஆங்கிலம் தெரியாதென ஜெர்மானிய மொழியில் கேள்விகளுக்குப் பதிலளித்து...அட்டகாசமான நகைச்சுவையுடன்...தான் கம்யூனிஸ்ட் இல்லை என கர்ஜித்தவர்...அவரின் பதில்களை மொழிபெயர்த்தவர்..அவரின் ஆங்கில அறிவைக் கண்டு வியந்து...தனது மொழிபெயர்ப்பின் சில வார்த்தைகளை அவர் திருத்தியதை...அந்த நுண்ணறிவைக் கண்டு வியந்து போற்றியதை...இலக்கிய உலகம் இன்னமும் பாதுகாத்து மட்டுமல்ல பதிவு செய்தும் வைத்திருக்கிறது...
தனது தனிப்பட்ட கருத்துக்களை தன் ஆக்கங்களில் புகுத்தாத நியாமான எழுத்தாளர்...என்று அழியாப் புகழ்பெற்ற பெரெக்ட் 1954ல் ஸ்டாலின் அமைதிப் பரிசை வென்றுள்ளார்...அன்றைய கீழை ஜெர்மனி சோவியத் படைகளின் உதவியைப் பெற்றதை அவர் பாராட்டி எழுதியதை சோவியத் ரஸ்யா வியப்புடன் கொண்டாடியது...ஆனால் மக்கள் சேவையில் தவறிழைக்கும் எவரையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்பதை அவரின் அதியற்புதமான கவிதையொன்று பேசுகிறது...இது மொழிமாற்றமோ மொழியாக்கமோ இல்லை....அந்தக் கவிதையை என்னளவில் தமிழில் தருகிறேன்...
எங்கள்
எழுத்தாளர் சங்கத்தின்
செயலர்
துண்டுப் பிரசுரங்களை
விநியோகிக்கிறார்...
எழுத்தாளர் சங்கத்தின்
செயலர்
துண்டுப் பிரசுரங்களை
விநியோகிக்கிறார்...
அரசாங்கம்
மக்களின் நம்பிக்கையை
இழந்துவிட்டதென்று...
மக்களின் நம்பிக்கையை
இழந்துவிட்டதென்று...
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
நம்பிக்கையில்லை
எனத் தீர்மானித்தால்
பாராளுமன்றம் கூட கலைக்கப்படலாம்...
நம்பிக்கையில்லை
எனத் தீர்மானித்தால்
பாராளுமன்றம் கூட கலைக்கப்படலாம்...
ஆனால்
ஆட்சியாளர்களுக்கு
மக்கள் மேல்
நம்பிக்கையில்லையென்றால்
மக்களையே
கலைத்துவிடலாம்...
ஆட்சியாளர்களுக்கு
மக்கள் மேல்
நம்பிக்கையில்லையென்றால்
மக்களையே
கலைத்துவிடலாம்...
அவர்களின் வாழ்வாதாரத்தை
அவர்களின் சமுதாயக் கட்டமைப்பை
அவர்களுக்கான அன்பை
அவர்களின் நிம்மதியை..
அவர்களின் உறக்கத்தை
ஏன்
அனைத்தையுமே
கலைத்துவிடலாம்...
ராகவபிரியன்
அவர்களின் சமுதாயக் கட்டமைப்பை
அவர்களுக்கான அன்பை
அவர்களின் நிம்மதியை..
அவர்களின் உறக்கத்தை
ஏன்
அனைத்தையுமே
கலைத்துவிடலாம்...
ராகவபிரியன்
Tuesday, March 12, 2019
எனக்கென நிறைய இருக்கிறது
உங்களுக்கெனவும் தான்..
நடுவில் இல்லாமையென்பதென்ன...?
உங்களுக்கெனவும் தான்..
நடுவில் இல்லாமையென்பதென்ன...?
சிற்றுண்டி எடுத்த பின்னும்
கோவில் பிரசாதத்திற்காக
நிறைந்த நிறைய கைகள் நீள்கின்றன..
இரவுப் பட்டினிக்குப் பின்னான
காலைத்தேனீரகங்கள் மொய்க்கப்படுகின்றன..
திடீரென
குடி தண்ணீருக்கான காலிகுடங்கள்கூட
நடுச்சாலைகளில் நினைவிழந்தபடி
வரிசையில் நீள்கின்றன..
கோவில் பிரசாதத்திற்காக
நிறைந்த நிறைய கைகள் நீள்கின்றன..
இரவுப் பட்டினிக்குப் பின்னான
காலைத்தேனீரகங்கள் மொய்க்கப்படுகின்றன..
திடீரென
குடி தண்ணீருக்கான காலிகுடங்கள்கூட
நடுச்சாலைகளில் நினைவிழந்தபடி
வரிசையில் நீள்கின்றன..
எதுவோ இல்லையென்பதை
எப்படியோ நினைவுபடுத்துகிறார்கள்...
எப்படியோ நினைவுபடுத்துகிறார்கள்...
வேலை காலியில்லை
சோலைகளில் பூக்களில்லை
தானியங்கி பணப்பெட்டிகளில்
பணமில்லை..
அங்கே காவலாளி தூங்குவதுமில்லை..
சோலைகளில் பூக்களில்லை
தானியங்கி பணப்பெட்டிகளில்
பணமில்லை..
அங்கே காவலாளி தூங்குவதுமில்லை..
பீர் குடுவையில் ஊற்றப்படுகையில்
நுரை வருவதில்லை..
இப்போதெல்லாம்
போதையும் வருவதில்லை..
நுரை வருவதில்லை..
இப்போதெல்லாம்
போதையும் வருவதில்லை..
வாழ்விற்கான போராட்டங்களில் உயிரில்லை..
நெகிழிக்குப்பைகள் கொட்டப்படாத...
சாக்கடைகள் கலக்காத... காவிரியில்லை..
சாக்கடைகள் கலக்காத... காவிரியில்லை..
எனக்கான சின்னமின்னும் ஒதுக்கப்படவில்லை
இல்லை இல்லை இல்லை...
ஆனால் எதுவோ இருக்கிறது...
வாக்காளர் அடையாள அட்டையிருக்கிறது..
வாக்கு வங்கிகள் இருக்கின்றன..
அந்த வங்கிகளுக்கான
தானியங்கி வாக்காளர்கள் இருக்கிறார்கள்..
வாக்காளர் அடையாள அட்டையிருக்கிறது..
வாக்கு வங்கிகள் இருக்கின்றன..
அந்த வங்கிகளுக்கான
தானியங்கி வாக்காளர்கள் இருக்கிறார்கள்..
இந்தியா இருக்கிறது...
எனக்கும் அதற்கும்
நிறைய எதிரிகளும் இருக்கிறார்கள்..
எனக்கும் அதற்கும்
நிறைய எதிரிகளும் இருக்கிறார்கள்..
பாராளுமன்றம் இருக்கிறது
சட்ட மன்றங்களும் தான்...
சட்ட மன்றங்களும் தான்...
எனக்கும் நிறைய இருக்கிறது ...சொல்வதற்கு
உங்களுக்கும் தான்...
உங்களுக்கும் தான்...
ஆனால்
சமூக வலைத்தளங்களும்
ஊடகங்களும்
விழிப்புணர்வும்
என் பதிவுகளுக்கான விருப்பங்களும் தான்
போதாமலிருக்கிறது...
இருக்கிறது.. இருக்கிறது... இருக்கிறது..[நடுவில் இல்லாமையென்பது என்ன...]
இல்லை...இல்லை..இல்லை....
சாமான்ய பொதுஜனன்
சமூக வலைத்தளங்களும்
ஊடகங்களும்
விழிப்புணர்வும்
என் பதிவுகளுக்கான விருப்பங்களும் தான்
போதாமலிருக்கிறது...
இருக்கிறது.. இருக்கிறது... இருக்கிறது..[நடுவில் இல்லாமையென்பது என்ன...]
இல்லை...இல்லை..இல்லை....
சாமான்ய பொதுஜனன்
Subscribe to:
Comments (Atom)
என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...
-
இது சோக இருள் சூழ்ந்த தீபாவளி அந்த இருள் வானில் ஆறுமாதம் முன் நீண்ட மரணத்தின் கரம் இன்று வெடிகுண்டுகளை திரியின் முனை நீக்காமலேயே கொளுத்திக...
-
பத்தாம் திகதியன்று உடலில் அனல் கொதித்த அன்று தான் தில்லியில் மனித வெடிகுண்டு வெடித்திருக்கிறது. நேற்றுதான் உடல் நிலையில் சற்று முன்னேற்றம்...
-
மானுட இருத்தலை வெளிக்காட்டுதல் தேவையற்றது. எனினும் மனிதன் தனது இருத்தலின் மேல் வெளிச்சம் பாய்ச்சியபடியேதான் இருக்கிறான். தன் மீதான பிரபஞ்சத்...
-
ஸ்ரீஸ்துதி 6. இந்து மத ஆன்மீகத்தின் தத்துவப் பார்வை உலகளாவிய ஒன்று. அது வாழ்வின் புயற் காலங்களில் அழிக்கவியலா வேள்வித் தீயை வளர்க்கும்...
-
HATRED IS BLUE AND UNFINISHED From the day I could see things through my Brahmin eyes The entire world around me shedding Brahmin hatred.....



