கடந்த இரண்டு நாட்களாக மனம் அமைதிகொள்ள மறுக்கிறது..பிக்காசோ வரைந்த செவ்வியல் அமைதி ஓவியமொன்றை யாரோ சேதப்படுத்திவிட்டால் வரும் அமைதியின்மையைப் போன்றதது.....வார்த்தைகளில்லை என்னிடம் ...எனினும் சர்.ஆர்தர் காட்டன் அவர்களால் கட்டப்பட்ட முக்கொம்புவின் மேலணை இடிந்து கிடக்கையில் அவரின் அணைகட்ட பயன் படுத்திய நூற்றுக்கும் மேற்பட்ட கருவிகள் [இன்னமும் தவ்லேஸ்வரத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது]...வேலையாட்கள்..பிரிடிஷ் அரசாங்கத்தின் பாராமுகம்..ஒத்துழைப்பின்மை போன்று ஒரு நெடிய வரலாறு காவிரியின் அலைகளில் ஒரு பிளாஸ்டிக் குடுவையைப்போல் என் மனமெங்கும் அலைகழிக்கப்படுகிறது..எலமனூரிலிருந்து ஒரு கிலோமீட்டரில் தான் திருப்பறாய்த்துறை...அங்கிருக்கும் விவேகானந்தா ஆரம்பப்பள்ளியில் 1969 ல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது...பரிசிலில் காவிரியைக் கடந்து முக்கொம்பு செல்வோம்...அங்கிருந்துதான் கொள்ளிடத்தின் மேல் அப்போது அணைப்பாலம்[ காட்டன் அவர்களால் கட்டப்பட்டது..] இருந்தது...அதன் மேல் எத்தனையோ முறை நடந்திருக்கிறோம்...பழியாய்க்கிடந்திருக்கிறோம்...பாலத்தின் அடியில் மெல்ல கதவுமீறி சில்லென்று விழும் காவிரியில் வெகு நேரம் மகிழ்வின் உச்சங்களில் இருந்திருக்கிறோம்...
சர்.ஆர்தர் காட்டன் 96 வயது வரை வாழ்ந்தவர்...இந்தியர்களின் மேல் அளவற்ற அன்பு கொண்டிருந்தார்...அதனாலேயே பிரிடிஷ் அரசாங்கத்தின் கோபத்திற்கு ஆளானார்..மணல் மீது செங்கற்களை அடுக்கி அணை கட்டுவதென்பது ஒரு பொறியாளரான காட்டன் அவர்களுக்கு வியப்பாய் இருந்தது...கல்லணையை முழுதும் ஆராய்ந்தார்..அதன் வடிவமைப்பையும் நீடித்த செயல் திறனையும் வியந்து பிரிடிஷ் ராணிக்கும் வைஸ்ராய்க்கும் கடிதங்கள் எழுதியிருக்கிறார்..
ஆந்திராவின் பிரகாசம் பேராஜ்..மற்றும் தவ்லேஸ்வரம் பேராஜ் போன்றவை அவரின் இந்தியர்களுக்கான கொடை ..
திருப்பறாய்த்துறையின் அகண்ட காவிரியின் எதிர்கரை குணசீலம்...வேணிற்காலங்களில் பொடிமணல் சூடு தாங்க அங்கங்கே ஊற்றுகள் தோண்டி அதில் துண்டை நணைத்து காலின் அடியில் போட்டுக்கொண்டு சூடு தணியும் வரை நிற்போம்..பிறகு கொதிக்கும் சுடுமணல் ஓட்டம்...அடுத்திருக்கும் ஐயன் வாய்க்காலில் குளித்து குணசீலப்பெருமானை வணங்கி திரும்பி வரும் போது வாத்தலை வழியாக மேலணையில் நடந்து பரிசல் பயணம் செய்ததெல்லாம் என் மன அணையிலிருந்து ஒவ்வொன்றாக உடைந்து விழுந்த படியிருக்கிறது...
சர் ஆர்தர் காட்டன் அவர்கள் மேலணைக்கான பென்சில் ஓவியமொன்றை வரைந்து அது முதலில் தொலைந்துவிட்டதாகவும்..பிறகு வேறொன்றை அவர் தயாரித்ததாகவும் படித்தபோது ...என் கண்ணீர்த் துளியொன்று உடைந்த மதகுவழி எகிறிச் செல்லும் காவிரியில் விழுவதை உங்களால் பார்க்க முடியும்...
ராகவபிரியன்