பிரமாணங்களுக்கு அளவை வாதம் என்ற பெயரும் உண்டு..சைவம் வைணவம் போன்று இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே கருதப்பட்டது பிரமாணங்கள்.நமது மதத்தின் தொன்மையின் அளவை அளவிடமுடியாத ஆச்சரியங்களில் பக்தியின் மூலம் அரங்கனைக் காணும் ஒரு பிரமாணமும் உள்ளதென்பது இன்னுமொரு அதிசயம்தான்..
அர்ச்சா மூர்த்தியாய் அவதரித்திருக்கும் அரங்கன் பக்தர்களுக்காக கோவில்களில் பசித்தேயிருக்கிறான்..நிஜமான நியமான பூஜைகளாலும் அவன்மீதான நம்பிக்கையுடன் பூஜிப்பவர்களுக்காக அவன் தனக்கு மனிதர்கள் செய்யும் அபச்சாரங்களையும் ஓரளவு பொறுத்துக்கொள்கிறான்..பரமாத்மாவான அரங்கனே அண்டசராசரங்களுக்கும் தேவர்களுக்கும் அரசன்..அனைத்து ஜீவராசிகளும் அவனின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன..இதை ஆணவத்தாலும் மமதையாலும் அலட்சியத்தாலும் உணராத ஜீவராசிகளும்..மனிதர்களும்..ஏன் தேவர்களும் வீழ்ச்சியையே அடைகிறார்கள்..இதையும் அரங்கனே தன் வாயால் சொல்கிறான்..

அஹம் ஹி ஸ்ர்வயஜ் ஞா நாம் போக்தா ச ப்ரபுரேவச!
நது மாமபி ஜா ந ந் தி தத்வே நாதஸ்ஸ்யவந்தி தே!!
நது மாமபி ஜா ந ந் தி தத்வே நாதஸ்ஸ்யவந்தி தே!!
இங்கே வீழ்ச்சியென்று அரங்கன் சொல்வது மீண்டும் பிறவியெடுப்பது தான்..அரங்கனே இந்திரன் பிரம்மன் யமன் பிரஜாபதி இன்னபிற தேவர்களையும் தேவதைகளையும் அவரவரின் பணிக்காக நியமிக்கிறான்..அவனின் கோவில் பூஜைகளைச் செய்பவர்களையும் அவனே நியமிக்கிறான்..இதை அறியாத மனிதர்கள் ஆணவமென்னும் மாயையால் தாங்களாகவே தங்களுக்குத் தகுதியிருக்கிறதென நினைத்து அரங்கனின் பூஜையில் ஈடுபட்டு அபச்சாரங்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்..எல்லா யாகங்களையும் ஏற்றுக் கொள்பவனும் தேவர்களையும் அனைத்து ஜீவராசிகளையும் அண்ட சராசரங்களையும் ஆளும் பரமாத்மாவானவனுமான அரங்கனை தத்துவ ரீதியாக அறியாதவர்கள் கண்டிப்பாக வீழ்ச்சியடைவார்கள் என்றே மேற்சொன்ன ஸ்லோகத்தில் அரங்கன் சொல்லிக்கொண்டிருக்கிறான்..
அரங்கன் தனக்குப் பசிக்கிறதென சொல்வதின் தத்துவம் அறியாதவர்களும்..தனக்கான எட்டு கால பூஜைகளில் சமரசம் செய்து கொண்டு மிருஷ்ட்டா பூஜையை செய்யாமல் தவிர்ப்பவர்களும் எனக்கான பூஜைகளைச் செய்யும் தகுதியிழந்துவிடுகிறார்கள்…எனது அர்ச்சா மூர்த்தியை நியமங்களின்றி தொட்டு எனக்குச் சூட்டப்படும் பக்தர்களின் எண்ண மாலைகளை அவசரகதியில் கழற்றி வீசியெறிபவர்களை நான் எனது பக்தர்களின் விரோதிகளாகவே பாவிக்கிறேன் என்றும் சொல்கிறார்..
அரங்கன்..
யாந்தி தேவவ்ரதா தேவா ந் பித்ரூ ந்யாந்தி பித்ருவ்ரதா
பூதா நி யாந்தி பூதேஜ்யா யாந்தி மத்யாஜி நோபி மாம்
பூதா நி யாந்தி பூதேஜ்யா யாந்தி மத்யாஜி நோபி மாம்
என் கோவிலில் இருந்துகொண்டு தேவதைகளை தேவர்களை வழிபடுகிறார்கள்..பித்ருக்களை வழிபடுகிறார்கள்..பூதங்களை வழிபடுகிறார்கள்..என்னை அலட்சியம் செய்கிறார்கள்..ஆனால் என் கோவிலுக்கு வரும் பக்தர்கள் என்னையே மானசீகமாக பூஜிப்பதால் அவர்கள் வெற்றிபெற்று என்னை வந்தடைகிறார்கள்..எனக்கு பூஜை செய்யும் தகுதிகளில் முதல் தகுதி என் மீதான நம்பிக்கையும் நியமங்களைக் கடைபிடிக்கும் மன உறுதியும் என்மீதான அசைக்க முடியாத பக்தியும் .ஆகும்..அவ்வாறானவர்கள் முதலில் என் பக்தர்கள்..அவர்கள் ஒரு நாளும் என் பக்தர்களை நிந்திப்பதில்லை…ஆனால் என் பக்தர்களின் நம்பிக்கையை பொருட்படுத்தாமல் என் அர்ச்சாமூர்த்திக்கு பூஜைசெய்யும் வாய்ப்பு கிடைத்த ஆணவத்தால் என் கோவிலில் தேவதைகளையும் பூதங்களையும் பித்ருக்களையும் பூஜை செய்பவர்கள் ஒருக்காலும் என்னை வந்தடைவதில்லை..மாறாக எனக்கு அபச்சாரத்தையே செய்கிறார்கள்..நான் அரண்மனைகளின் அக்கார அடிசிலை விரும்பாதவன் என்பதை நிரூபித்திருக்கிறேன்..விதுரரின் வீட்டில் கஞ்சியை எனக்குப் படைத்தாலும் அதுவே என் பிரசாதமாகி அண்டசராசரங்களின் பசியைப் போக்கிவிடும் என்பதையும் செய்து காட்டியிருக்கிறேன்..என்று சொன்ன அரங்கன்
துரியோதனன் விருந்துக்கு அழைத்தும் மறுத்துவிட்ட பரமாத்மாவானவனிடம் ஆணவத்துடன் காரணம் கேட்கிறான்..அரங்கன் எனக்கு பசியே இல்லை..என்று சொல்லி
துரியோதனன் விருந்துக்கு அழைத்தும் மறுத்துவிட்ட பரமாத்மாவானவனிடம் ஆணவத்துடன் காரணம் கேட்கிறான்..அரங்கன் எனக்கு பசியே இல்லை..என்று சொல்லி
ஸம்ப்ரீதிபோஜ்யாந் நா நி ஆபத்போஜ்யா நி வா பு ந:
ந ச ஸ்ம்ப்ரீயஸே ராஜ ந் ந சைவாபத் கதாவயம்
ந ச ஸ்ம்ப்ரீயஸே ராஜ ந் ந சைவாபத் கதாவயம்
மிருஷ்ட்டா பூஜை எவ்வளவு உயர்ந்ததும் முக்கியத்துவம் வாய்ந்ததும் என்பதை உணர்தியதோடல்லாமல்..விதுரர் வீட்டில் அவர் எதிர்பார்க்காமல் சென்று அங்கிருந்த ஆறிய கூழைக் குடித்து..அர்ச்சையின் பசி எவ்வளவு பெரிதென்பதையும் உணர்த்தியிருக்கிறார்…அரங்கன் பூஜையில் நேரந்தவறாமையும் கட்டுப்பாடும் நியமங்களும் மிக மிக முக்கியம்..அதைக் கடைபிடிக்காதவர்கள்..அதிலிருந்து விலகிக்கொண்டால்..அர்ச்சா மூர்த்தியாய் அரங்கன் கொலுவிருக்கும் ஊருக்கு வரும் கெடுதல்கள் தடுக்கப்படலாம்…துரியோதணனின் ஆணவம் கெளரவ சாம்ராஜ்யம் விழக் காரணம் என்பது மட்டுமல்ல..பரமாத்மாவை அலட்சியம் செய்ததும் அவனின் வீழ்ச்சிக்கு மூல காரணம் என்பதும் புராணங்கள் நமக்குச் சொல்லும் வாழ்வின் வழிகள்…அளவை வாதமெனும் பிரமாணங்கள்…அதாவது அரங்கனின் ஆணை என்ற பொருளிலும் பண்டைய காலங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்..
அரங்கன் திருவடிகளே சரணம்..ஆச்சார்யன் திருவடிகளே சரணம்…
அன்பன்..ராகவபிரியன்
அரங்கன் திருவடிகளே சரணம்..ஆச்சார்யன் திருவடிகளே சரணம்…
அன்பன்..ராகவபிரியன்

No comments:
Post a Comment