Monday, January 1, 2018

சாத்தியமாகும் பின் நவீனம்

ஒரு கவிதை மரபா..புதியதா...நவீனமா..பின் நவீனமா...எனச் சொல்லக்கூடிய தகுதி கவிதைக்காகவே பிறந்து வாழ்ந்து கவிதையிலேயே மரித்துப்போகும் ஒரு வாசகனுக்குத்தான் உண்டு என்பது ஆதிமுதற் கல்லின் மேல் செதுக்கிய முதல் கவிதை... அதை வாசித்து ரசித்த வரலாற்றில் பெயர் விட்டுப்போன அந்த வாசகனின் ஆன்மா கூறுகிறது...
எத்தனையோ நூற்றாண்டுகளாய் மரபு வலம் வந்த தமிழிலக்கியத்தில்...ஜோதிடம்..மருத்துவம்..முதற்கொண்டு..அதுவும் பண்டித தமிழ் மரபில் இருந்த கவிதையை பாரதி கொஞ்சம் புரிதமிழ்ல் தன்னிகரற்ற மரபு பாடல்களை பாடிக்காட்ட மரபு படிப்பறிவில்லா வாசகனுக்கும் சென்றடைந்ததால்..ஆங்கிலேயன் பயந்தோடியது வரலாறு...
இப்போதும் கூட மரபுப் பாடல் எழுதமுடியும்..
கடவுள் ஏன் கல்லானான்
படத்தில் ஏன் புல்லில்லை...
பாரதி எனும் மகாகவி புதிய கவிதை இருக்கும் கவிதையை எழுதிக்காட்ட முயன்றான்..எதுகை மோனைக்குள் அடைபட்டுக்கிடந்த பொருளற்ற பாடல்களுக்குள் செயலற்றுக் கிடந்த கவிதையை புதுமையாக்க முயன்றான்..
சிட்டுக்குருவிகள் சிறகடிக்கத் தொடங்கின..பிரமிள் வரை ஒரு இறகு தீராத பக்கங்களை எழுதித் தீர்த்தது..
மு.மேத்தாவும் அப்துல் ரகுமானும் ..புதுய உத்திகளை கவிதைக்குக் கொடுத்தனர்..
மேத்தா..புல்லின் மேல் விழும் பூவாய் வாசகனை பாதித்தார்...
புதிய புதிய உத்திகள் புது உத்வேகம் கொடுக்க நவீன யுகக் கவிதைக் குழந்தை மெல்ல நடைவண்டியை நகர்த்தத் தொடங்கியது...
கண்ணின் விழிக்குமிழில் ஒரு ரயில் வண்டி தடதடத்து ஓடுவதை தேவதச்சன் வாசகனுக்கு சிலவரிகளில் நிகழ்த்திக்காட்டினார்...
இப்போது நிறைய நவீன கவிதைகள் நிறைந்துகிடக்கின்றன...இதழ்களிலும் ஊடகங்களிலும் சமூக வலைத் தளங்களிலும்...
ஆனால் நிஜமான பின் நவீன யுகம் புறப்பட்டுவிட்டதா...என்ற கேள்விக்கான விடையை இன்றைய கவிஞர்களும் வாசகர்களும் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்..பிரம்மராஜன் நாம் இன்னும் நவீன யுகத்தைத் தாண்டவில்லை என்கிறார்..ஆனால் ஆங்கில இலக்கியத்தில் இப்போது பின் நவீன கவிதைகள்தான் படைக்கப்படுகின்றன என்ற பரவலான கருத்தை ஆங்கில கவிவாசகர்கள் ஓரளவு ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்...
இத்தனையையும் மீறி பின் நவீன கவிதைக்கான முயற்சி தமிழில் எப்போதோ தொடங்கிவிட்டதாகவே கருத இடமிருக்கிறது..அதற்கான நிஜமான முயற்சியில் மெளனமாக யவனிகா ஸ்ரீராம் முதல் வெற்றியை ஈட்டியிருப்பதாகவே என்னளவில் பார்க்கிறேன்...
பல ஏக்கர் நிலங்கள் அலுமிய டப்பாக்களில் அடைந்துகிடக்கையில் பக்கது மேசையிலிருந்து ஒரு காதல் விண்ணப்பம் நிரப்பமுடியுமா...என்பது போன்ற முயற்சிகள்.. பின் நவீனத்திற்கான முன்னத்திஏர் என இன்றைய சொல்லாடல் மூலம் சொல்லமுடியும்...
இவ்வளவையும் மீறி ஒரு பின் நவீன முயற்சியை கவிதையில் நிகழ்த்துவதென்பது சுலபமல்ல...அப்படியே நிகழ்த்திக் காட்டினாலும் வாசகர்கள் ஒப்புக்கொள்வார்களா என்ற கேள்வியினால் வரும் தயக்கம் தான் எனது முந்தைய பதிவு.. இன்னும் நிறைய வாசகர்கள் கருத்துக்கள் தெரிவித்தால் இந்த வாசகனும் ஒரு பின் நவீன கவிதையை பதிவிட முடியும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்ளும்...
ஒரு சாமான்ய பொதுஜனன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...