கவிதைகளை கன்னாப்பினா என்று உற்பத்திசெய்துவிட்டு அதற்கான வாசகர்களை தேடிக்கொண்டிருக்கும் இன்றைய அவல நிலையைக் கவிதையாக்க முடியாத கவிஞர்களை காலம் அடையாளம் காட்டிவிடும்.. கவிதைகள் என்பது உற்பத்தி செய்யப்படும் பொருள் அல்ல..அது விளைந்து வரவேண்டும்..தானாக அவதானிக்கும் எதுவும் உற்பத்தி என்ற சொல்லில் அடங்குவதில்லை...தானாக உற்பத்தியாகும் ஒரு கவிதையை செப்பனிடச் செய்யும் திறன் கொண்டவரே அதை வாசகனிடம் கொண்டு சேர்க்கும் ஆற்றல் பெற்றவர்..அவரை கவிஞர் என அழைப்பதில் வாசகர்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை..ஆகச் சிறந்த செப்பனிடம் திறன் கொண்ட எந்தக் கவிஞரும் இப்போது இலக்கியச் சந்தையில் மதிப்புப்பெறுவதில்லை..மாறாக அவர் போட்டிகளைச் சந்திக்க நேர்கிறது...
ஒரு நூற்றாண்டு காலக் கவிஞர்களையும் கவிதைகளையும் ஆய்ந்து பார்த்து செப்பனிடும் திறனைப் பிரித்தறிந்து அடியில் காந்தம் வைக்காத தராசில் ஏற்றிப்பார்த்தால் அவதானித்தக் கவிதைகளைவிட உற்பத்திக் கட்டாயத்தால் உதவாததை ஒரு உளிசுத்தியல் உபகரணத்தோடு செப்பனிட்டு உடைந்து போனாலும் அதை சிற்பமென சாதித்து விற்றுவிடும் சந்தைப்படுத்தும் முறைமையை இப்போது கொண்டாடிக்கொண்டிருக்கும் போக்கைப் பிரித்தறியமுடிகிறது
அப்படிப்பட்ட தராசித் தேர்வில் தானாக வெளியேறியவை போக மீந்து தட்டில் தங்கியவை ஒன்றிரண்டுதான்..அப்படிப்பட்ட கவிதைகளை எழுதிச் செப்பனிட்டு அர்ப்பணித்த கவிஞர்களின் பெயர் காலகல்வெட்டில் வெட்டப்பட்டு இலக்கியக் கோவிலின் மதில் சுவர்களில் பொருத்தப்படுகிறது..
அதுபோன்ற காலத்தை வென்று நிற்கும் கவிஞர்களையும் கவிதைகளையும் அடுத்தடுத்தப் பதிவுகளில் சொல்கிறேன்..உங்களின் பின்னூட்டங்களையும் வரவேற்பையும் பொறுத்தே அவை இனி இங்கே தொடரப்படும் என்பதையும் தெளிவு படுத்த விரும்புகிறேன்..வணக்கங்களுடன்..அன்பன்..ராகவபிரியன்
No comments:
Post a Comment