Tuesday, November 28, 2017

எங்கள் பேருந்து நிலையத்தின் உடைந்த இருக்கையின் மீதேறி விளையாடுகிறது வீடற்ற தமிழ்பேசும் குழந்தை அதை ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ்துறைத் தலைவருக்காக கொண்டு செல்வீர்களா...? கோவிலில் தரிசனம் முடித்து கோபுர மண்டபக் கருங்கல் சங்கப்பலகையில் தமிழ் பேசிச் சிரிக்கிறாள் எங்கள் வீட்டுப்பெண்... அதையாவது கொண்டுசென்று அங்கே வைப்பீர்களா...? எங்கள் பேருந்தில் பயணம் செய்த தமிழ் மூதாட்டியின் முதுகுத் தண்டுடைத்த இருக்கையையாவது தலைவருக்குத் தருவீர்களா...? வேலைவாய்ப்பற்ற எங்கள் தமிழ்மொழிவழி பயின்ற பட்டதாரி இளைஞர்கள் இரவு முழுவதும் தமிழில் பேசித் தீர்த்த கிராமத்து சுமைதாங்கி இருக்கையையாவது ஹார்வேர்டில் வைப்பீர்களா... புரியவில்லை... ஹார்வேர்டின் தமிழ் இருக்கையில் தமிழ் இருக்குமா....? ராகவபிரியன்


No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...