Sunday, July 14, 2019

ஒரு ஐம்பதாண்டுகள் எழுத்துலகில் அல்லது கவியுலகில் தன் இருத்தலை நிறைவு செய்தல் என்பது எவ்வளவு துயரம் மிகுந்தது என்பதை தன்னுடைய சுயசரிதையில் சொல்லிச் சென்றுள்ளார்..நவீன அமெரிக்கக் கவிதையின் பிதாமகரென்று பெயரெடுத்த வில்லியம் கார்லஸ் வில்லியம்..முதுகலை மருத்துவ இயல் பயின்று மருத்துவராய்...தன் தொழிலில் நிபுனத்துவம் பெற்றிருந்தாலும்..கவிதையே தன் மூச்சு என்று முழங்கியவர்..மரபும் நவீனமும் ஒருக்காலும் ஒருமித்த நிலையை அடையமுடியாதென ஆணித்தரமாக எழுதியவர்..அவரின் பிரபலமான ஒரு வாசகம்..எனது கவிதைகளைப் படிக்காமலேயே நிறைய மனிதர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்..என்பதை டி.எஸ் ..எலியட் கிண்டலடித்திருக்கிறார்..1922ல் டி.எஸ்.எலியட்டின் மரபு சார்ந்த கவிதைத்தொகுப்பு,,வீணாகிய நிலங்கள்...வெளிவந்து இலக்கிய உலகை வியப்பில் ஆழ்திய கனமான பொழுதுகளில்..வில்லியம்ஸின் நவீன கவிதைகள் அடங்கிய அருமையான வியத்தகு கவிதைத்தொகுப்பு.. சிகப்புச் சக்கரச் சறுக்கல்கள்..கண்டுகொள்ளப்படாமல் உதாசீனமடைகிறது..இலக்கிய வாசகர்களின் உலகம் சார்ந்த அணுகுமுறைகள் புரிபடுவதில்லை என்று ஆதங்கம் கொள்கிறார் வில்லியம்ஸ்..தன் சுயசரிதையில் அந்த நிகழ்வை..எலியட் தன் கவிதைகள் மூலம் என்னை மீண்டும் மாணவ பருவத்தில் அமிழ்த்துகிறார்..எனது கவிதைகளைப் படித்திருந்தால் அவர் ஒருவேளை இலக்கியத்தில் இளம் கலைப் பெற்றிருக்கக்கூடலாம் என்றெழுதுகிறார்..1963ல் தன் எழுபத்தொம்பதாம் வயதில் மரணிக்கும் சில நாட்களுக்கு முன்புதான் அவருக்கு புலிட்சர் பரிசு கிடைக்கிறது...ஆனால் மிகுதியும் மரபு சார்ந்து எழுதிய எலியட் 1948ல் நோபல் பரிசு பெற்றுவிடுகிறார்..வில்லியம்ஸுக்கு ஐந்து ஆண்டுகள் இளையவரான எலியட்ஸ் தன் வார்த்தைகளில்..வில்லியம்ஸ் நம் காலத்தின் போற்றத்தகுந்த மேதைக் கவி என்று பதிவு செய்திருப்பதுதான் இலக்கிய வரலாறு..
1965ல் எலியட்ஸும் இறந்து போகிறார்..ஒரு ஐம்பதாண்டுகள் மேலை இலக்கியத்தில் உயரிய இடத்தில் இருந்த வில்லியம்ஸின் ஒரு கவிதையை என்னளவில் தமிழில் தருகிறேன்..இது மொழியாக்கமோ மொழிபெயர்ப்போ..மொழி மாற்றமோ ..இல்லை...
இது துயரின் காலம்..
துயரின் பனிப்பொழிவென்பது
நீங்கள் சொல்வது போல்
வெண்மை நிறம் இல்லை..
பனிப்பொழிவால்
மரங்கள்
புதர்கள்
பூக்கள்
நிறம் மாறலாம்..
மரணிக்கவும் நேரலாம்..
ஆனால்
துயரால்
ஒருபொழுதும்
மனம் நிறமிழப்பதில்லை..
வசந்தங்களில்
மகிழ்ந்திருந்த இம்மனம்
துயரில்
தன் பூக்களைத் தான் உதிர்க்கிறது..
துயரின் வேர்களை
மரணிக்கச் செய்யும்
சக்தியிழந்திருக்கிறது..
ஒரு துயரின் காலம்
வெண்மையில்லையெனில்
எந்த நிறமென்ற
விசாரணைகளை நான் வெறுக்கிறேன்..
துயர் நிறமற்றதல்ல..
நிறமுற்றதுமல்ல..
துயர் துயர் நிறைந்தது..
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...