Tuesday, July 30, 2019

I have purchased a car..
But no self owned parking place..
When gloomy dark clouds
hovering over my car or
When the hottest rays of sun
erupt with full strength
on my car..
I pray to Thee my Aranga
to give a shelter or shadow
just not for me but for my car..
Shadow shouldn't be a borrowed one
My Aranga ..it should be of thou gift..
When i park my car in the market
my mind is also locked inside it..
When i place it in the open..
on a primeval street of my forefathers
my heart started beating from inside my car..
To thee my Aranga..my prayers are there
for a shadow for my car..
Early morning shadows are long
and my car enjoys the cooling of thee..
when the noon shadows are naught
thou gift shouldn't be so hot
and the air inside the wheels doubles
in thickness putting my blood in vein struggle..
when the evening shadows are away
i have to borrow it for my car.. costliest today..
I have purchased a car..a gift of Thee..
and parked it on a borrowed shadow..
Aranga..my lord.. strike strike at the root of
penury in parking and heart..
Ragavapriyan Thejeswi

Monday, July 29, 2019

Taking a long leave from poetry
leaving a scar inside me ..
perchance or perhaps
continuity shouldn't be disturbed..
During the leave period
agony and stillness swallowing the time..
perchance or perhaps
joy shouldn't be allowed to vanish..
During the eternal joy
trails and tribulations never be cared
perchance or perhaps
experiences shouldn't be forgotten..
During the perennial remembrance
thoughts and notes may glimpse and go..
perchance or perhaps
poems shouldn't be written hastily..
May poetry and literature occupy my life
perchance or perhaps until my last breathe
without any leave..
Ragavapriyan Thejeswi

Friday, July 26, 2019

கூடுகளுக்கான
சுள்ளிகளைச் சுமக்கும்
சிறகுகளில்
ஜரிகை சேர்த்திருப்பதைக்
காணலாம்..
சுள்ளிகளெனில்
சம்பிரதாய
சமித்துகளும்
உடைந்த குச்சிகளும்
மட்டுமல்ல..
கம்பிகளைத் தேடிச்
சுகமாய் சுமக்கும்
பறவைகளின்
இளைப்பாறுதல்களில்..
மூக்கைத் தடவும்
கால்கள்
கவிதை காட்டுவதைப்
பார்த்திருப்பீர்கள்..
கூடுகளில் உறங்கும்
சின்னப் பறவையின்
உதயத்திற்கு முன்னான
தாலாட்டுகளில்
கம்பிகள்
தாங்கும் சக்தியையும்
சேர்த்திசைக்கும்..
சம்பிரதாய
எழுத்துக்களுக்குச்
சற்றும் குறைந்ததல்ல
முக நூல் கம்பி எழுத்துக்கள்..
வாசகப் பறவைக
தாங்கும் சக்தி
வாங்கும் சக்தியைவிட
அதிகமென்பதை
உணர்ந்து கொண்டிருக்கிறீர்கள்..
ளின்
பறவையிசையின்
புறப்பாட்டின்
சக்தி புரிகிறதா..
நட்புகளே...
சாமான்ய பொதுஜனன்

Thursday, July 25, 2019

எட்டிப் பார்க்கிறேன்..
வட்டங்களாய் அடுக்கியிருக்கும்
காலங்களில் கால்வைத்திறங்க முடிந்த
கிணறைத்தான் எட்டிப் பார்க்கிறேன்..
பாச நீர் நிரம்பிய வட்டங்களில்
பச்சையங்கள் அப்பியிருக்கின்றன..
கால்வைத்தால் வழுக்கக் கூடுமெனினும்
ஒரு நினைவுக்கரப்பான் பூச்சி
நீர்பரப்பில் விடாமல்
தன் மீசையைச் சுத்தம் செய்ய..
எழுந்து சுவர் மோதித் திரும்பும்
அலைகளை அவ்வப்போது பார்க்கிறேன்..
கரப்பான் நீர் ஊற்றுக் கண்ணின்
மூலம் தேடி தேடிக் களைத்துப் போய்
உறங்கும் பொழுதொன்றில்..
பாசக் கயிறொன்றைப் பிடித்து
கிணறின் மடுவில் இறங்குகிறேன்..
ஊறிக் கிடக்கும் அத்தனையையும்
வெளியேற்றுகிறேன்..
கரப்பான்
களைந்த மீசைகள் மட்டும்
மிதந்தேயிருக்கின்றன..
மீசையற்ற கரப்பானாய்
பாசக் கிணறின் சுவர்களைத் தடவ
உள்ளங்கை ஈரமாகிவிடுகிறது...
ஊற்றுக் கண்ணை அடைத்திருக்கும்
சேற்றுப் பீழைகளையும்
வண்டல்களையும் வெளியேற்றி
மேலே பார்க்கிறேன்..
இனி கரப்பானின் தேடல்
தடையின்றித் தொடரலாம்..
மேலிருந்து
என்னையே எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கும்
மனைவி கேட்கிறாள்...
சந்திர வளைவு தெரிகிறதா..என..
சந்திர வளைவின் மேல் தான்
கிணறு கட்டப்பட்டிருக்கிறது..
அதற்கு மேல் கிணற்றில் ஊடுறுவ
எனக்கு அனுமதியில்லை..
சந்திர வளைவின் மின்னும்
தண்ணீர்த் திவலைகளின் ஒளியில்
கரப்பான் விழித்துக் கொள்கிறது..
வெளி வந்து கிணறை மூட முயன்றால்
புதிய ஊற்று
காலத்தின் மேல் வட்டம் வரை
தளும்பிக்கொண்டிருக்கிறது..
மீண்டும் எட்டிப் பார்க்கிறேன்...
ராகவபிரியன்

Sunday, July 21, 2019

இன்று காலையில் இந்து ஆங்கில நாளிதழின் லிட்டரரி ரிவ்யூவில் ஒய்சி குலின் அவர்களுடனான நேர்காணலை அருணிமா மஜூம்தார் மிக அருமையாக எழுதியிருந்ததைப் படித்தவுடன்..எழுத்துக் கலையின் மீதான அடிப்படை எதுவென்ற கேள்வி மனதுள் துளிர்த்தது..மிக அதிகமான உலகளாவிய வாசக சந்தையைக் கொண்டவர்.ஒய்சி குலின்..அவரின் இஸ்தான்புல்லுக்கான கடைசி தொடர்வண்டி என்ற நாவல் உலகப்புகழ்பெற்றது..அந்த நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பின் உத்தியும் நடையும் கதை மாந்தர்களும் கதைக் களமும் ஒரு நூற்றாண்டு துருக்கிய வாழ்வின் அவலங்களை கண்முன்னே கொணர்ந்து வாசகனின் கண்ணில் ஒரு துளி கண்ணீரையாவது உற்பத்தி செய்துவிடும்..துருக்கி என்ற சர்வாதிகார இன்றைய ஆளுமையின் கீழ்... மக்கள் வாழ்வென்பதே என்னவென்று உணரமுடியாத கணங்களை..போராட்டங்களே வாழ்வெனும் பரிதாபத்திற்குரிய நிஜத்தை துய்த்துக்கொண்டிருக்கிறார்கள்..கருத்துச் சுதந்திரம் என்ற பேச்சுக்கே இடமின்றி..எழுத்தாளர்கள் கவிஞர்கள் சிறையில் வாடும் கொடுமைமிக்க வரலாற்றின் மொழிச்சார்பற்ற நோபல் வரைபடத்தில் ஓரான் பாமுக் நோபல் பரிசு பெற்று உலக கவனத்தை ஈர்த்துவிடுகிறார்..எழுபத்தியேழு வயதான ஒய்சி குலின் ஓட்டோமன் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் கொடுங்கோல் ஆட்சி நடத்தும் இன்றைய துருக்கியின் ஆட்சியாளனான..எர்டோகனால் இன்னமும் கைது செய்யப்படாமல் இருப்பது நம்பமுடியாத நிகழ்வாக துருக்கிய மக்களால் பார்க்கப்படுகிறது.. ..பதினான்காம் நூற்றாண்டிலிருந்து துருக்கிய சமுதாயத்தை கட்டமைத்த ஓட்டோமன் இனம் மிக அருமையான சமதர்ம கொள்கைகளை உள்ளடக்கியது...அதன் கொள்கைகளில் ஒன்றான பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இஸ்லாமிய சமுதாய பெண்கள் பர்தா அணிய வேண்டியதில்லை என்பதும் ஒன்றாகும்..இஸ்லாமிய அடிப்படையிலான ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்கள் தற்போது ஏறக்குறைய கடந்த ஐந்து வருடங்களாக பர்தா அணிவதைக் கட்டாயமாக்கி..சமதர்ம சமுதாயம் பற்றி எழும் குரல்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் போக்கைக் கடைபிடிக்கிறார்கள்..ஒய்சி குலின் அதிபர் எர்டோகனுக்கு இதன் பொருட்டு கடிதங்கள் எழுதியும் கூட அவர் அதைப்பற்றிக் கவலைப்படவில்லையென்றும்..எந்நேரமும் ஆட்சியாளர்களால் தனக்கு எதுவும் நேரலாமென்றும் கூறுகிறார்..அவரின் ஒரு கவிதையை என்னளவில் தமிழில் தருகிறேன்..இது மொழிபெயர்ப்போ மொழியாக்கமோ மொழி மாற்றமோ இல்லை..
மகளே எர்ஸா...
ஒரு சர்வாதிகாரியின்
பதவியேற்பு விழாவில்
யூதர்களின் குருதி
பட்டாபிழேகத்திற்கான
தங்கக் குடங்களில்
நிரப்பப்பட்டதை
உலகம் பார்த்தது..
அன்று தாம்
நாம் புலம் பெயர்ந்தோம்
யூதர்கள் மட்டுமல்ல
இலங்கை வாழ் தமிழர்கள்
ஆப்கானியர்கள்
ஜெர்மானியர்கள்
குருதுகள்..
இன்னபல இன நாடு
அடையாளம்
அணிந்தவர்களிடம்
புலம் பெயர்வதென்றால்
என்ன எனக் கேள்..
மகளே எர்ஸா..
புலம் பெயர்வதன்றால்
மனித வாழ்வை
பாதியறுத்த
கசாப்பு மரத் தட்டில் வைத்து
மாமிசங்களை
துண்டு துண்டாக வெட்டுவதென்று
தயங்காமல் சொல்லிவிட்டு
தலை மறைவாகிடுவார்கள்....
அவர்களிடமிருந்து
எடுக்கப்பட்ட
குருதியின் மிச்சங்களை
ஆட்சியாளர்கள்
தங்களின்
பட்டாபிழேகத்திற்கான
குடங்களில் நிரப்புவதுதான்
புலம் பெயர்தல்..
புரிந்ததா எர்ஸா..
ராகவபிரியன்

Wednesday, July 17, 2019

தொடர்வண்டித் தொழிலாளக்
குடியிருப்பின் சாக்கடை
தேக்கக் குளத்தில்
நிம்மதியாய் குளித்தபடி
தூங்கும் அப்பன்றி..
அதை நோக்கி வீசப்படும்
கற்களை பொருட்படுத்தாமல்
உறுமல் ஒன்றை உதிர்க்கும்..
எந்தக் கல்லும்
வீசப்படாத ஞாயிறன்று
அந்தக் குளத்தில்
பயந்தபடியே
விழித்துக் கிடக்கும்..
ஒரு சிலரின்
சுருக்குக் கயிற்றின்
லாவக வீச்சில்
சிக்கி அப்படிக் கதறும்....
ஈன மரண உறுமலை
உள் வாங்கியபடியே
தண்டவாளத்தில்
தடதடக்கும்
ஒரு தொடர்வண்டி..
மரணத்திற்கு முன்னான
தோள் பல்லக்கில்
கட்டப்பட்ட கயிறுகளில்
அதன் உடல் பூத்த
சேற்றுப் பூக்கள்
சிந்திக் கொண்டே வரும்..
மதியச் சாரய
சாக்கடையில்
அதையும்
அதன் உறுமலையும்
உண்டவர்கள்
உளறிய படியே
உறங்கிக் கொண்டிருப்பார்கள்..
அதே தண்டவாளம்
ஒவ்வொரு ஞாயிறன்றும்
புதிய வண்டியொன்றையும்
புதிய பன்றியொன்றையும்
உறுமியபடியே
இன்றும் கூட
சுமந்து கிடக்கிறது..
காலாதீத மெளனத்தில்...
ராகவபிரியன்

Sunday, July 14, 2019

ஒரு ஐம்பதாண்டுகள் எழுத்துலகில் அல்லது கவியுலகில் தன் இருத்தலை நிறைவு செய்தல் என்பது எவ்வளவு துயரம் மிகுந்தது என்பதை தன்னுடைய சுயசரிதையில் சொல்லிச் சென்றுள்ளார்..நவீன அமெரிக்கக் கவிதையின் பிதாமகரென்று பெயரெடுத்த வில்லியம் கார்லஸ் வில்லியம்..முதுகலை மருத்துவ இயல் பயின்று மருத்துவராய்...தன் தொழிலில் நிபுனத்துவம் பெற்றிருந்தாலும்..கவிதையே தன் மூச்சு என்று முழங்கியவர்..மரபும் நவீனமும் ஒருக்காலும் ஒருமித்த நிலையை அடையமுடியாதென ஆணித்தரமாக எழுதியவர்..அவரின் பிரபலமான ஒரு வாசகம்..எனது கவிதைகளைப் படிக்காமலேயே நிறைய மனிதர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்..என்பதை டி.எஸ் ..எலியட் கிண்டலடித்திருக்கிறார்..1922ல் டி.எஸ்.எலியட்டின் மரபு சார்ந்த கவிதைத்தொகுப்பு,,வீணாகிய நிலங்கள்...வெளிவந்து இலக்கிய உலகை வியப்பில் ஆழ்திய கனமான பொழுதுகளில்..வில்லியம்ஸின் நவீன கவிதைகள் அடங்கிய அருமையான வியத்தகு கவிதைத்தொகுப்பு.. சிகப்புச் சக்கரச் சறுக்கல்கள்..கண்டுகொள்ளப்படாமல் உதாசீனமடைகிறது..இலக்கிய வாசகர்களின் உலகம் சார்ந்த அணுகுமுறைகள் புரிபடுவதில்லை என்று ஆதங்கம் கொள்கிறார் வில்லியம்ஸ்..தன் சுயசரிதையில் அந்த நிகழ்வை..எலியட் தன் கவிதைகள் மூலம் என்னை மீண்டும் மாணவ பருவத்தில் அமிழ்த்துகிறார்..எனது கவிதைகளைப் படித்திருந்தால் அவர் ஒருவேளை இலக்கியத்தில் இளம் கலைப் பெற்றிருக்கக்கூடலாம் என்றெழுதுகிறார்..1963ல் தன் எழுபத்தொம்பதாம் வயதில் மரணிக்கும் சில நாட்களுக்கு முன்புதான் அவருக்கு புலிட்சர் பரிசு கிடைக்கிறது...ஆனால் மிகுதியும் மரபு சார்ந்து எழுதிய எலியட் 1948ல் நோபல் பரிசு பெற்றுவிடுகிறார்..வில்லியம்ஸுக்கு ஐந்து ஆண்டுகள் இளையவரான எலியட்ஸ் தன் வார்த்தைகளில்..வில்லியம்ஸ் நம் காலத்தின் போற்றத்தகுந்த மேதைக் கவி என்று பதிவு செய்திருப்பதுதான் இலக்கிய வரலாறு..
1965ல் எலியட்ஸும் இறந்து போகிறார்..ஒரு ஐம்பதாண்டுகள் மேலை இலக்கியத்தில் உயரிய இடத்தில் இருந்த வில்லியம்ஸின் ஒரு கவிதையை என்னளவில் தமிழில் தருகிறேன்..இது மொழியாக்கமோ மொழிபெயர்ப்போ..மொழி மாற்றமோ ..இல்லை...
இது துயரின் காலம்..
துயரின் பனிப்பொழிவென்பது
நீங்கள் சொல்வது போல்
வெண்மை நிறம் இல்லை..
பனிப்பொழிவால்
மரங்கள்
புதர்கள்
பூக்கள்
நிறம் மாறலாம்..
மரணிக்கவும் நேரலாம்..
ஆனால்
துயரால்
ஒருபொழுதும்
மனம் நிறமிழப்பதில்லை..
வசந்தங்களில்
மகிழ்ந்திருந்த இம்மனம்
துயரில்
தன் பூக்களைத் தான் உதிர்க்கிறது..
துயரின் வேர்களை
மரணிக்கச் செய்யும்
சக்தியிழந்திருக்கிறது..
ஒரு துயரின் காலம்
வெண்மையில்லையெனில்
எந்த நிறமென்ற
விசாரணைகளை நான் வெறுக்கிறேன்..
துயர் நிறமற்றதல்ல..
நிறமுற்றதுமல்ல..
துயர் துயர் நிறைந்தது..
ராகவபிரியன்

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...