Thursday, September 27, 2018

சதா சண்டையிட்டுக் கொண்டிருப்பவன் ஒருபோதும் தனது முதல் கவிதையை எழுதிவிடமுடியாது என்றெழுதிய உம்பர்ட் ஈகோ இரண்டே இரண்டு கவிதைகள் தான் எழுதியிருக்கிறார்..வாழ் நாள் முழுதும் இரண்டு இடங்களில் மாறி மாறி வசித்த ஈகோ ஏறக்குறைய எழுபதாயிரம் புத்தகங்களைச் சேமித்திருக்கிறார்...கத்தோலிக்க வழிபாட்டு முறையையும் கடவுளின் இருப்பையும் கடுமையாகச் சாடிய ஈகோ புனைவுலகின் மீதும் தீராத கோபம் கொண்டிருந்தது வரலாறு..எலியட்டிலிருந்து இன்றைய நவீன கவிஞர்களின் கவிதைகளை சதா குறை கூறிக்கொண்டிருந்த ஈகோ எந்தக் கவிதையையும் கவிதையென ஏற்றுக்கொள்ளவில்லை..நீங்கள் ஏன் கவிதையையும் கடவுளையும் நம்ப மறுக்கிறீர்கள் என்று தொடர்ந்து கேள்வியெழுப்பியவர்களை ..எல்லாக் கவிஞர்களுமே மோசமான கவிதையைத்தான் எழுதுகிறார்கள்..அதைவிட மோசமானவர்கள் அதை வெளியிடுகிறார்கள் என்று கூறி சர்ச்சையில் சிக்கியவரைக் காப்பாற்ற எந்தச் சர்ச்சும் முன்வரவில்லை...குழந்தை இலக்கியத்தில் ஓரளவு வெற்றிபெற்ற ஈகோ தனது ஈகோவை விட்டுக் கொடுக்கமுடியாத்தால்..ஆகச் சிறந்த நாவலான...ரோஜா என்பது பெயர்...என்பதை இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த படைப்பாக கொடையளித்திருந்தும்..எந்த உலகளாவிய பரிசிற்கும் விருதுக்கும் பரிந்துரைக்கப்படவில்லை என்பது விடுவிக்க முடியாத இலக்கியப் புதிர்..எனில்..அது மிகையில்லை...அவரைப்பற்றிய ஒரு கவிதையை இங்கே என்னளவில் தமிழில் தருகிறேன்..இது மொழியாக்கமோ மொழிமாற்றமோ இல்லை...
அப்பொழுது
குதிரைகளை
கலப்பையில் கட்டியுழுதார்கள்..
இப்போதோ அடிமாடுகளைத்தான்..
வறுமையுச்சப் பொழுதுகளில்
குடிசையின் மீதான
சூரியன் தன் செங்கதிர்களை
மறைத்துக்கொள்கிறான்..
நிலத்தையும் புலத்தையும்
இயற்கையையும்
கடவுள் இல்லையென
மறுத்தவன்
எழுத்தையும் அதன் ஆற்றலையும்
யாரிடமிருந்து பெற்றான்..
குழந்தையை நேசித்தெழுதியவன்
கடவுள் இல்லையென்பதைக்
குழந்தைகளுக்குச் சொல்லட்டும்..
பிறகு ஏன்
தன் இல்லக்கோவிலில்
தன் குழந்தைகளை
அவன்
காலணிகளுடன் அனுமதிப்பதில்லை..
குதிரையும்
உழவும்
இயற்கையும்
அடிமாடுகளும்
கடவுள் இல்லையெனில்
படைப்பவனும்
கடவுள் இல்லையென்கிறேன்..
ஆமென்..
ராகவபிரியன்

Friday, September 21, 2018

இன்றைய தமிழ் இலக்கியத்தின் செலுத்துவாரற்ற பயணம் செல்லும் திசையெல்லாம் கிடைக்கும் உபயோகித்து தூக்கியெறியும் உடையொன்றை வாங்கி அணிந்து கொள்கிறது...புதுப்பொலிவுடன் ஈர்க்கும் அது அடுத்த உடைகிடைக்கும் வரை அழுக்காகி கசங்கி இலக்கிய பிம்பத்தின் மரியாதையைக் குறைத்து மதிப்பிடச் செய்துவிடுகிறது...ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த தமிழிலக்கியம் இதுவரை பெற்றது ஒரே ஒரு ஞானபீடம்தான்..[சரி..இரண்டு என்றே வைத்துக்கொள்வோம்]இந்திய மொழியிலக்கியங்களில் பதினைந்தாம் நூற்றாண்டில் தான் முதல் இலக்கியப் பிரதி கிடைத்தாகச் சொல்லிக்கொள்ளும் ஒடிய [odia]..இலக்கியம் இதுவரை நான்கு ஞானபீடங்களைப் பெற்றுவிட்டது..
பாண்டா எனும் ஆதிகுடிமக்களைப் பார்ப்பதற்கே பயந்து நடுங்கும் ஒரியாவில்..அவர்களைப்பற்றி எழுதி உலகின் கவனத்தைக் கவர்ந்தவர் . 2011 ல் ஞானபீடப் பரிசு பெற்ற ஒடிய எழுத்தாளுமை...வைணவ குலத்தைச் சேர்ந்த பிரதீபா ரே...அவர்கள்...நிறைய நாவல்கள் ...சிறுகதைகள் ..கட்டுரைகள் எழுதியிருந்தாலும் அவரின் கவிதைகள் அவ்வளவாகப் பேசப்படவில்லை..
ஆதிகவி சரளாதாஸு[ஆண் கவிஞர்...ராமாயணம் மஹா பாரதம் இரண்டையும் ஒடிய மொழியில் பாடியிருப்பவர்]க்குப் பிறகு அதிகம் பேசப்பட்ட ஒடிய கவிதாயினி நிர்மலா தேவி என்றுதான் ஒடிய இலக்கியத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது...பதின்மூன்று குழந்தைகளைப் பெற்று ஆங்கிலேயர் காலத்திய அரசு நிர்வாக மேலதிகாரியாக பணியாற்றிய நிர்மலா தேவி..தன் கவிதைகளை தன் குழந்தைகளுக்கும் பேரக் குழந்தைகளுக்கும் விளக்கி காட்டி அவர்களின் முயற்சியால் அவைகள் அச்சிலேற்றப்பட்டு அவருக்கு சாகித்ய அகாதமி விருதும் கிடைத்தது...இலக்கிய உலகின் ஒரு நம்பமுடியாத அதிசயமாகத்தான் இருக்கிறது..அந்த இறவாக் கவிதாயினியின் பெயர்த்தியால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட ஒரு கவிதையை என்னளவில் தமிழில் தருகிறேன்...இது மொழியாக்கமோ மொழிமாற்றமோ இல்லை...
எதுவுமற்ற ஒரு உருவம்
என் முன்னே
தினமும் தோன்றுகிறது...
அவ்வுருவம்
அசைகிறது ..பாடுகிறது..சிரிக்கிறது..அழுகிறது...
அதற்கு நிறமில்லை..
அதற்கு உணர்வில்லை
அதற்கு உயிருமில்லை...
எனினும்..
நான் சிரித்தால்
அது கோபப்படுகிறது..
நான் பேசினால்
அது மெளனமாகிவிடுகிறது..
எனக்கு வண்ணம் ஓளிர்ந்தால்
அது தன் நிறமிழந்து விடுகிறது..
நான் நடந்தால்
அது அமர்ந்து கொள்கிறது..
நான் எழுந்தால்
அது ஓடிவிடுகிறது..
கண்டிப்பாக
இந்த இலையுதிர்காலத்திற்கு முன்
நான் அதை
உங்களுக்கு
அடையாளம் காட்டிவிடுகிறேன்...
ராகவபிரியன்

Friday, September 14, 2018

O vinayaka
Thou head was snatched
just for guarding the Nirvana
of your mother
by your own father..
Spiritual powers
were restored to thee
o vinayaka
by reincarnation
with an Elephant's head..
O vinayaka
mere illusions of you
may dispel the fear..
and Thy mere name
may remove the obstacles of life..
Thy ivory gored writings
of Mahabharath
had given the name and fame
to Thee...
as the first ghost writer ever..
The mud made Thou idols
simply remove
the worldly attachments
and when immersed in rivers
canals or tanks
Life's rehearsals too
immersed in Thee..
forthwith o vinayak..
Thou tiny travel animal [Mousihka]
before entering inside an unknown hole
simply deserted Thee O vinayak
and Thou postures
under the peepal tree
is an art of waiting...
or enlightenment..
Thy devotees are
simply going for immersion..
Because of extreme devotion..
But Thy path is obstructed..
Let the devotees
immerse themselves into thee
O vinayak..
Let the obstacles in the path of
immersion or purity be
eliminated ..
O vinayak
after all
our pathways and roads to destination
are
decided by Google maps..

Tuesday, September 11, 2018

The day usually dawn
with hatred..
Ten of my brothers and sisters
had their own wishes..
when an iota of indifference or frustration
fallen on them they usually
tumble on me like mounting of wagons
during an accident of a goods train..
That was the chisel that shaped me.
That was the teacher who taught me..
That was the tailor who dressed me
That was the I still coming out of me..
I was hanging on a thread for a bread
I was walking on a rope for a lesson
I was living on a bush full of thorns
and that was that..
Now people are praising me
focusing the moon light on me..
My brothers and sisters arefighting between them in praise of me..

When i enter into the house
all are standing like the
audience including the judge
who had risen up when accused Mahathma
entered the court room
during freedom struggle..
But i require only love and affection
I require a place on a remote corner
of my house where i could sleep..
I require a dawn without any dust..
and let me brush my teeth with fondness
Before a cup of coffee...
Ragavapriyan Thejeswi

Sunday, September 2, 2018

ஒரு பெளர்ணமியைத் திருடத் திட்டமிட்டேன்..
என் கைகளைக் கொஞ்சம் நீட்டி
வானம் தொட்டேன்..
கிரணங்கள் வழிந்து மறைவிடம் தெரிய
பயம் நடுக்கம் தந்தது...
இரண்டு கைகளாலும் சேர்த்துப்பிடித்து
சட்டைக்குள் வைத்துக்கொண்டேன்
ஓர் நாள் போதும்..
அன்று யாராலும் நிலாச்சோறு சாப்பிட முடியாது...
கிணறுகளை எட்டிப்பார்த்து
வாளியில் நிலாவை அள்ள முடியாது..
அல்லி மலர்கள் மலரும் வேலையை ஒரு நாள் ஒத்திப்போடுவதைக் காணலாம்..
கருக்கலில் காவிரிக்கரையில்
மலம் கழிக்க வருபவர்கள்
புதர்கள் தேடியலைய வேண்டிய தில்லை.
நிமித்தக் காரன் தலைச்சன் பிள்ளைமண்டையோட்டை
பயமின்றி தோண்டியெடுக்கலாம்..
சுவர் தாண்டி சின்ன வீட்டின் சுவரேறிக் குதிக்கையில்
முண்டாசுக்காண துண்டு தேவையில்லை..
ஒரே ஒரு நாள் மட்டும்
அந்தப் பெளர்ணமி என்னோடு
இருந்துவிட்டுப் போகட்டுமே..
அட என்ன இது...
என் சட்டைப் பைக்குள்
யாரோ கையை விடுகிறார்கள்....
நீட்டிய கையை எப்படிச் சுருக்குவது...?
ராகவபிரியன்

Saturday, September 1, 2018

தொம்பங்கூத்தாடியின்
சின்ன மகள்
கம்பியிலாடும் குழந்தை வித்தகி...
எதிர் ரொட்டிக்கடையின்
அன்ன தாதா
அவளின் பசிக்கு
கைத்தட்டல் மட்டுமே
காசில்லாமல் தருவார்...
அவளின்
சம நிலைக் கம்பில் கவனம்
கம்பியில் கால்களை இறுக்க..
பசி வயிறை இறுக்கிப் பிடிக்கும்..
அப்பாவின் சில்லரைத் தட்டும்
அம்மாவின் மேளத் தட்டும்
அவளின் வயிற்றுக் கம்பியில்
பசியின் நடனத்தை
தாள நயத்துடன்
ஆடச் செய்யும்..
நடன முத்திரையின்
மின்னல் வேகம்
கூடிக் கூட..
ரொட்டிக் கடையின்
வாட்டிய ரொட்டியை
ஈட்டி முனையில்
நர்த்தனக் கொள்ளையாய்
எடுத்துக்கொள்வாள்..
ஓடியேறிக் கம்பியில்
நடக்கும் வித்தகிப் பசிக்கு
வித்தையே உணவு..
திருடி திருடியென
அன்ன தாதா
அறை கூவல்விடுக்க...
குழந்தை உதட்டோர
ரொட்டித்துகள்கள்
திருட்டின் சாட்சியா..?
பசியின் சாட்சியா...?
தரையில் நின்றே
யாரும் சொல்லலாம்..
ராகவபிரியன்

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...