Saturday, January 20, 2018

பயண புத்தர்

அது தண்டவாளங்களின் பிரிவு
சேர்வதென்பது ஓர்முனையின் முடிவில்..
கொட்டிக்கிடக்கும் கற்களில்
நரகல் தெறித்திருந்தாலும்
அசூயையுடன் விலக முடியாத விதி..
மேலே விரையும் வண்டிகள் விதவிதமானவை
இறைக்கும் குப்பைகளும் தான்
மீந்த தாக நீர் திறந்த போத்தல்களில்
டெங்குக் கொசுக்களாய் மொய்க்கும் நாவுமீதிகள்..
என்ன செய்வது..
பயணத்திற்கான ஆசையை புத்தர்களால் துறக்கமுடியவில்லை..
போதிவரைதான் எனினும் தண்டவாளப் பிரிவை
கடப்பதென்பது
புலனடக்கப் பயிற்சி..
தயவு செய்து பயணங்களில்..மின்ரத பயணங்களில்
அதியழுத்தக் கவிதைகளை
எழுதாதீர்கள்...
மீந்து வீசியெறியும் வார்த்தைகள் விழும் இடத்தைத்தான்
மேலே குறியிடப்பட்டிருக்கிறது...
புத்தர்கள் எல்லோரும் கீழ்ப்படுக்கையையே கேட்கிறார்கள்...
தொடர்வண்டி நிலையமெங்கும் போதிகள்..போகிகள்...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...