Sunday, January 21, 2018

Poet..

May be you are alone
single minded on a theme
at the disposition of time
May be like a kite
searching for a cloud
on a clear sky
without a tail...
you may be double
coupled with a plenty of ideas
multiplying by confusion..
May be like a boat
chasing a mighty warship
without any ideals..
without any fishes..
May be you are a hero
may be alone or surrounded
in a theme or a boat
with ideas or ideals
with or without food or fishes
on a sky or water..
you cannot write a poem
unless you are a poet...
Ragavapriyan Thejeswi

Saturday, January 20, 2018

பயண புத்தர்

அது தண்டவாளங்களின் பிரிவு
சேர்வதென்பது ஓர்முனையின் முடிவில்..
கொட்டிக்கிடக்கும் கற்களில்
நரகல் தெறித்திருந்தாலும்
அசூயையுடன் விலக முடியாத விதி..
மேலே விரையும் வண்டிகள் விதவிதமானவை
இறைக்கும் குப்பைகளும் தான்
மீந்த தாக நீர் திறந்த போத்தல்களில்
டெங்குக் கொசுக்களாய் மொய்க்கும் நாவுமீதிகள்..
என்ன செய்வது..
பயணத்திற்கான ஆசையை புத்தர்களால் துறக்கமுடியவில்லை..
போதிவரைதான் எனினும் தண்டவாளப் பிரிவை
கடப்பதென்பது
புலனடக்கப் பயிற்சி..
தயவு செய்து பயணங்களில்..மின்ரத பயணங்களில்
அதியழுத்தக் கவிதைகளை
எழுதாதீர்கள்...
மீந்து வீசியெறியும் வார்த்தைகள் விழும் இடத்தைத்தான்
மேலே குறியிடப்பட்டிருக்கிறது...
புத்தர்கள் எல்லோரும் கீழ்ப்படுக்கையையே கேட்கிறார்கள்...
தொடர்வண்டி நிலையமெங்கும் போதிகள்..போகிகள்...
ராகவபிரியன்

Tuesday, January 16, 2018

A protest against poet VAIRAMUTHU

This is in protest against poet Vairamuthu who had insulted the sentiments of millions of Theists in general and Tamil spiritual followers in particular by repeatedly rubbing salt thro his writings and speeches against the believers of God...who are already nursing a wound in the hands of Dravidian atheists..
Literary Friends ...those who are following me across the world..asking me repeated questions regarding this controversy which is now burning with flames even noticeable an inch above alps..
For the benefit of my followers i want to explain about the life and disappearance of ANDAL the adopted daughter of the Great PERIALWAR////..She had a vast majority of poetic collections in her name and even today she is not having any match in her style of weaving the Tamil verses..the unique one which is considered a mystery baffling all attempts at explanation..and even moved ARANGA who got her married to HIM by way of making her disappear in front of her father and other gatherings...When Perialwar started questioning ARANGA about the fate of his daughter..ARANGAN and ANDAL appeared before all by showing the divine unification of ANDAL with HIM..in the form of Married couples in wed lock..form..
This history is believed from 7th century to this day...and Tamil people ..especially girls waiting for marriage following the rituals as stated and followed by ANDAL ..and having got their marriage settled as per their wishes..every year and at every nook and corner of the Tamil world...
This belief and culture of Tamil people is now questioned by vairamuthu the poet who is turning every stone on his way to Gnanapeth Award..the highest literary Award..He had just rediculed Andal's birth and even gone to the extent of stating that Andal was a designated prostitute..
On behalf of millions of Tamil Theists and spiritual literary writers and poets i register my protest from this platform in the hope that the literary world around the globe will support me..and once vairamuthu expressing his regret then this protest will automatically cease to exist....
Thanking you all my friends...anban..ragavapriyan..alias ARANGAPRIYAN...

Sunday, January 14, 2018

அண்ணா என்று ஆண்டாள் அழைக்க வந்த ராமானுசர்

ஜெயமோகனும் இன்னபிற இலக்கிய ஆளுமைகளும் வைரமுத்துவிற்கு எதிரான குரலை வலுப்படுத்தியபடி இருக்கும் சூழலில் தினமணியில் வெளியான கட்டுரை மிகவும் தொன்மையான பாரம்பர்யங்களைக் கடைபிடிக்கும் தமிழரின் பக்தி வரலாற்றை கொச்சைபடுத்தியதால் அதிர்ந்து போனேன்...ஞர்னபீடம் தமிழுக்கு யார்மூலமாக வந்தாலும் தமிழ்மொழிக்குப் பெருமையென்பதால் அவரின் தகுதியைப்பற்றிய சர்ச்சையில் உள் நுழையத் தயங்கினேன்.. மற்ற மொழிகளில் கடந்த அறுபது ஆண்டுகளில் எட்டுமுறை ஞர்னபீடம் பெற்ற இந்திய மொழி இருக்கிறது...நமது மொழி புறந்தள்ளப்பட்ட அரசியல் நிலைப்பாட்டைச் சார்ந்திருப்பதால் ஆகச்சிறந்த இலக்கியங்களின் வரிசையில் விலகி நிற்க வேண்டியிருக்கிறது..
வர்ஷார்த்த மஷ்டெள ப்ரயதேத மாஸாந்
நிசார்த்த மர்த்தம் திவஸம் யதேத
வார்த்த க்யஹேதோர் வயஸா நவேந
பரத்ர ஜேதோரிஹ ஜந்மநா சச
இந்த ஸ்லோகம் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் மனதில் சந்தேகத்தைக் கிளப்பக் காரணமானது..பாண்டிய மன்னர்களின் சந்தேகத்தால் மிகச் சிறந்த கவிதைகள் தமிழுக்குக் கிடைத்திருக்கின்றன...
அந்தப் பாடலின் பொருள்...நான்கு மாத மழைக்காலத்திற்காக எட்டுமாதங்கள் உழைக்கவேண்டும்..இரவின் நிம்மதியான தூக்கத்திற்கு பகலில் உழைத்தாக வேண்டும்..முதுமையின் சார்பு நிலையா வாழ்விற்கு இளமையிலும் மறுமையின் ஓளிக்காக இந்தப்பிறவியிலும் உழைத்தாக வேண்டும் என்று ஒரு வழிப்போக்கன் வல்லபதேவனிடம் தெரிவித்தான்...
அவரின் சந்தேகத்தைத் தீர்த்து பொற்கிழி பரிசு பெற்றவர் பெரியாழ்வார்..படிப்பறிவற்ற அவர் அரங்கனின் கட்டளையால் பரதத்துவ நிர்ணயம் செய்து பாண்டியமன்னனால் பாராட்டப்பெற்றவர்...அரங்கன் அருளால் அழியாத் தமிழ்ப் பாடல்கள் தந்தவர்...அவரின் வளர்ப்புமகள் ஆண்டாள்...
ஆண்டாளின் விருப்பப்படிதான் அரங்கனுக்கு அவளைத் திருமணம் செய்து வைத்தார் பெரியாழ்வார்...இது இன்றளவும் வழிவழியாக ஆதாரங்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் வரலாறு...
இடையே புகுந்த பெரியாரிஸ்ட் திராவிட இலக்கிய கர்த்தாக்கள்..கம்பரசம் என்னும் மாபெரும் இலக்கியம் எழுதிய அண்ணாதுரையிலிருந்து...வான்கோழி படைத்த கலைஞர் வரையிலும் இப்போது வைரமுத்து வரையிலும்கூட...தமிழர் பண்பாட்டுடன் ஒன்ற
றக் கலந்த பக்தி இலக்கியத்தைக் கொச்சைப்படுத்தி வரலாற்றைச் சிதைக்க முற்படுகிறார்கள்..அவர்களின் முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறப்போவதில்லை...
அரங்கனிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டி சில வேண்டுதல்களை வைக்கிறாள் ஆண்டாள்..
நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய வாய் நேர்ந்து பராவி வைத்தேன்..
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்.
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங்கொலோ...
ஆண்டாள் பிரியதர்ஷினி...
இந்த வேண்டுதலை நிறைவேற்ற மதத்தில் புரட்சி செய்த மகான் ராமானுசர் சில நூற்றாண்டுகள் கழித்து வரவேண்டியிருந்ததும் வரலாறு...கள்ளழகரைச் சேவித்துத் திரும்புகையில் ..ஆண்டாள்..அண்ணா...என் வேண்டுதல் நிறைவேற்றப்படாமலே இருக்கிறதே என்று நினைவூட்ட அந்த மகான்...ஆண்டாளின் அண்ணன்..அதை நிறைவேற்றித் தந்ததும் இன்றும் கூட திருமணம் ஆக வேண்டிய பெண்கள் கள்ளழகருக்கு நூறு தடா அக்கார அடிசில் தந்து திருமணம் நடந்தேறியதற்கான நன்றிகளை இனிக்க இனிக்கச் சமர்ப்பிக்கிறார்கள்...
வரலாறு மட்டுமல்ல..மக்களின் நம்பிக்கையும் மிக மிக முக்கியம் வைரமுத்து அவர்களே.....வரலாற்றை மட்டுமல்ல எங்கள் நம்பிக்கைகளையும் உங்களால் சிதைத்துவிட முடியாது.... கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறியாதீர்கள்...இதை மிக அழகாக மொகம்மது மசூது என்ற கவிஞன் சொல்கிறார்...
Be ready for the injuries
while throwing stones
from inside your
glass house...
Mohamed Masud
சாமான்ய பொதுஜனன்

Saturday, January 13, 2018

ராகவபிரியன் தேஜஸ்வி எழுத்தாளர்: உந்துபூர்வ எழுத்து

ராகவபிரியன் தேஜஸ்வி எழுத்தாளர்: உந்துபூர்வ எழுத்து: ஆழ்மன உணர்வுகளின் நேர்மையான வெளிப்படைத்தண்மையுடைய எழுத்துக்கள் படிக்கும் போதே அந்த உணர்வுக்குள் நம்மைச் செலுத்திக்கொண்டுபோகும் சக்தியுடையது...

உந்துபூர்வ எழுத்து

ஆழ்மன உணர்வுகளின் நேர்மையான வெளிப்படைத்தண்மையுடைய எழுத்துக்கள் படிக்கும் போதே அந்த உணர்வுக்குள் நம்மைச் செலுத்திக்கொண்டுபோகும் சக்தியுடையது...ஆனால் மன உணர்வுகள் நம்மைச் சுற்றியிருக்கும் உலகின் பாதிப்புகளை உள்ளடக்கியதெனின் நேர்மையென்பது எதுவென்ற கேள்வி எழுகிறது.. இங்கே உளப்பூர்வமான எழுத்திற்கும் உந்துபூர்வமான எழுத்திற்கும் இருக்கும் பேதங்களை எளிய இலக்கிய எழுத்தார்வலர்களால் புரிந்துகொள்ளமுடியாத இயலாமையை உந்துபூர்வ எழுத்துக்கள் பயன்படுத்திக்கொள்கின்றன..உண்மை என்னவெனில் இந்த உந்துபூர்வ எழுத்தாளர்கள்தான் உலகின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்கள் என்ற மாயை தொடர்ந்து புகைமூட்டமென பரவவிடுகிறார்கள்...படிக்கும் வாசகன் கண்களைக் கசக்கிக் கொள்வது உணர்வின் எல்லைதொடும் எழுத்துச் சக்தியில்லை...புகைமூட்டத்தின் எரிச்சல் என்பதுதான் ...அதை உந்துபூர்வ எழுத்தாளர் அறிவார்..உணர்வுபூர்வ எழுத்தாளர்கள் ஒரு ஓரமாய் இந்த வேடிக்கைகளைப் பார்த்துக்கொண்டுதானிருக்கிறார்கள்.. நேர்மையாக..ஆகப்புனித நேர்மையாக...ஆனால் ஒரு உணர்வுபூர்வ வாசகனை எளிதில் ஏமாற்றிவிட முடியாதென்பதை இலககிய உலகம் நன்கு அறியும்..
சாமான்ய பொதுஜனன்

Monday, January 1, 2018

சாத்தியமாகும் பின் நவீனம்

ஒரு கவிதை மரபா..புதியதா...நவீனமா..பின் நவீனமா...எனச் சொல்லக்கூடிய தகுதி கவிதைக்காகவே பிறந்து வாழ்ந்து கவிதையிலேயே மரித்துப்போகும் ஒரு வாசகனுக்குத்தான் உண்டு என்பது ஆதிமுதற் கல்லின் மேல் செதுக்கிய முதல் கவிதை... அதை வாசித்து ரசித்த வரலாற்றில் பெயர் விட்டுப்போன அந்த வாசகனின் ஆன்மா கூறுகிறது...
எத்தனையோ நூற்றாண்டுகளாய் மரபு வலம் வந்த தமிழிலக்கியத்தில்...ஜோதிடம்..மருத்துவம்..முதற்கொண்டு..அதுவும் பண்டித தமிழ் மரபில் இருந்த கவிதையை பாரதி கொஞ்சம் புரிதமிழ்ல் தன்னிகரற்ற மரபு பாடல்களை பாடிக்காட்ட மரபு படிப்பறிவில்லா வாசகனுக்கும் சென்றடைந்ததால்..ஆங்கிலேயன் பயந்தோடியது வரலாறு...
இப்போதும் கூட மரபுப் பாடல் எழுதமுடியும்..
கடவுள் ஏன் கல்லானான்
படத்தில் ஏன் புல்லில்லை...
பாரதி எனும் மகாகவி புதிய கவிதை இருக்கும் கவிதையை எழுதிக்காட்ட முயன்றான்..எதுகை மோனைக்குள் அடைபட்டுக்கிடந்த பொருளற்ற பாடல்களுக்குள் செயலற்றுக் கிடந்த கவிதையை புதுமையாக்க முயன்றான்..
சிட்டுக்குருவிகள் சிறகடிக்கத் தொடங்கின..பிரமிள் வரை ஒரு இறகு தீராத பக்கங்களை எழுதித் தீர்த்தது..
மு.மேத்தாவும் அப்துல் ரகுமானும் ..புதுய உத்திகளை கவிதைக்குக் கொடுத்தனர்..
மேத்தா..புல்லின் மேல் விழும் பூவாய் வாசகனை பாதித்தார்...
புதிய புதிய உத்திகள் புது உத்வேகம் கொடுக்க நவீன யுகக் கவிதைக் குழந்தை மெல்ல நடைவண்டியை நகர்த்தத் தொடங்கியது...
கண்ணின் விழிக்குமிழில் ஒரு ரயில் வண்டி தடதடத்து ஓடுவதை தேவதச்சன் வாசகனுக்கு சிலவரிகளில் நிகழ்த்திக்காட்டினார்...
இப்போது நிறைய நவீன கவிதைகள் நிறைந்துகிடக்கின்றன...இதழ்களிலும் ஊடகங்களிலும் சமூக வலைத் தளங்களிலும்...
ஆனால் நிஜமான பின் நவீன யுகம் புறப்பட்டுவிட்டதா...என்ற கேள்விக்கான விடையை இன்றைய கவிஞர்களும் வாசகர்களும் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்..பிரம்மராஜன் நாம் இன்னும் நவீன யுகத்தைத் தாண்டவில்லை என்கிறார்..ஆனால் ஆங்கில இலக்கியத்தில் இப்போது பின் நவீன கவிதைகள்தான் படைக்கப்படுகின்றன என்ற பரவலான கருத்தை ஆங்கில கவிவாசகர்கள் ஓரளவு ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்...
இத்தனையையும் மீறி பின் நவீன கவிதைக்கான முயற்சி தமிழில் எப்போதோ தொடங்கிவிட்டதாகவே கருத இடமிருக்கிறது..அதற்கான நிஜமான முயற்சியில் மெளனமாக யவனிகா ஸ்ரீராம் முதல் வெற்றியை ஈட்டியிருப்பதாகவே என்னளவில் பார்க்கிறேன்...
பல ஏக்கர் நிலங்கள் அலுமிய டப்பாக்களில் அடைந்துகிடக்கையில் பக்கது மேசையிலிருந்து ஒரு காதல் விண்ணப்பம் நிரப்பமுடியுமா...என்பது போன்ற முயற்சிகள்.. பின் நவீனத்திற்கான முன்னத்திஏர் என இன்றைய சொல்லாடல் மூலம் சொல்லமுடியும்...
இவ்வளவையும் மீறி ஒரு பின் நவீன முயற்சியை கவிதையில் நிகழ்த்துவதென்பது சுலபமல்ல...அப்படியே நிகழ்த்திக் காட்டினாலும் வாசகர்கள் ஒப்புக்கொள்வார்களா என்ற கேள்வியினால் வரும் தயக்கம் தான் எனது முந்தைய பதிவு.. இன்னும் நிறைய வாசகர்கள் கருத்துக்கள் தெரிவித்தால் இந்த வாசகனும் ஒரு பின் நவீன கவிதையை பதிவிட முடியும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்ளும்...
ஒரு சாமான்ய பொதுஜனன்

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...