Sunday, November 26, 2017

ஒரு படைப்பை அதன் சென்றடையும் திறனை அதன் வீச்சை மற்றும் இன்னபிற உட்கூறுகளை அறியாமல்தான் படைப்பாளி உருவாக்குகிறான்..அந்த படைப்பின் வடிவம் முதலில் கருவறையில் பிண்டமாக உருவாகுகிறது...மெல்ல வளர்கிறது...தன் அம்மாவுடன் பேசுகிறது..அதற்கு கால் முளைக்கிறது..கைமுளைக்கிறது..அது வெளிவரும்போது அதன் பாலின உறுப்பை வைத்து அதற்கொரு அடையாளம் தந்துவிடுகிறார்கள் சகர்கள்..சகாக்கள்..அதை கவிதையென்றும்..கதையென்றும்..நாடகமென்றும்..இயல் என்றும்..ஏதேதோ பெயர் சூட்டுகிறார்கள்...அது மெல்ல நடைபயில்கிறது..சிலருக்குப் பிடிக்கிறது..சிலர் வெறுக்கிறார்கள்..சிலர் கொஞ்சுகிறார்கள்..சிலர் திட்டுகிறார்கள்..ஆனால் அது நிர்ணயிக்கப்பட்ட காலம்வரை வாழுமென்பதை அறியாமல் சிதைக்க முயலும் பொழுதுதான் அது ..அந்தப்படைப்பு அண்ட சராசரங்களை அடையும் சூட்சுமம் கற்றுக் கொள்கிறது..தன் உருவம் உடை நடையுடை பாவனைகளை மாற்றி சிறகுகளை பொருத்திக் கொள்கிறது..சிலர் அதை தங்கள் கிளைகளில் அமரச்சொல்கிறார்கள்..சிலர் விரட்டுகிறார்கள்..சிலர் அதை அண்ணாந்து பார்க்கிறார்கள்..சிலர் அதன் வேகத்தைக் கண்டு பயம் கொள்கிறார்கள்..ஆனால் அது..அப்படைப்பு..கதையோ கவிதையோ எதுவோ ஒன்றாக உலகின் மூலைமுடுக்கெல்லாம் சென்றுவருகிறது...எல்லா இடங்களையும் ஆக்கிரமிக்கும் அப்படைப்பு அடுத்தடுத்த தலைமுறைகளைக் காணும் ஆவலுடன் காத்திருக்கத் தொடங்குகிறது..எத்தனை தலைமுறைகளைப் பார்க்கும் உயிர்ப்பை எப்படி படைப்பாளி அதை உருவாக்கும் முன் அறிந்திரானோ அதைப்போலவே அதன் உயிர்ப்பும் புதிர்..அப்படியொரு படைப்பை உயிர்ப்பிக்கும் சூல் கொண்டு உலாவரும் ஒரு படைப்பாளியை உலகம் கருனையுடன் பார்க்கும் நாளுக்காகத்தான் நான் காத்திருக்கிறேன்...அதனால் தான் படைப்பாளியை தாயென்றழைக்கலாம்...அல்லவா.. ராகவபிரியன் no plus ones no comments


No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...