Saturday, December 22, 2018

புராணங்களைச் சுற்றிவளைத்து மேற்கோள் காட்டி நண்பர்களை திணறவைக்காமல் நேரிடையாகவே வணக்கம் சொல்லிவிடுகிறேன்...அனைத்து நண்பர்களுக்கும் திருவாதிரை திருநாள் வாழ்த்துகள்...
மாடத்துளான் அலன் மண்டபத்தான் அலன்
கூடத்துளான் அலன் கோயில் உள்ளான் அலன்
வேடத்துளான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில்
மூடத்துளே நின்று முத்தி தந்தானே / திருமந்திரம்
இறைவன் கோவிலிலோ மண்டபத்திலோ போட்டிருக்கும் வேடத்திலோ இல்லை. மாறாக புறவெளியின் பால் கூறுபோட்டு கல் நட்டு தன் பெயர் பதிக்கும் ..இன்னபிற அகவெளியின் மாயைகளுக்குள் அஸ்திவாரம் இடும்.. வேட்கைகளை விட்டவர்களின் உள்ளத்திலே சிவமயமாகிய அரங்கன் காட்சிதருவான் எங்கிறார் திருமூலர்...
தரிசனம் என்பது அகவயமானது..திசைகளோ நிறங்களோ உருவமோ அற்றது..தாமாக நிகழ்வது..வலிந்து நிகழ்த்திக்காட்டப்படுவதல்ல.. திருமந்திரத்தை ஊன்றிக் கற்றவர்கட்கு உருவ வழிபாடு தேவையற்றதென்பது புரியும்..உருவமற்ற இறைவன் சிவமாகவும் அரங்கனாகவும் மனித பக்தி மனம் வேண்டியபடியான வேண்டிய திருக்கோலமாகவும் தென்படலாம்..அவ்வாறான பார்வையில் படும் உருவமற்ற அருவ தரிசனம் ஆனந்த வானில் நிகழும் மத்தாப்பு விளையாட்டை நமக்குக் காட்டக்கூடும்..
திருமூலரே ஆதிமனிதர்..ஆதிகவி..ஆதி தத்துவமேதை..ஆதி தமிழ் எழுத்தாளர்..ஆதி அகச்சோதி..ஆதி அரங்க அவதாரன்...என்றெல்லாம் சொல்லின் மிகையெனக் கொளல் வேண்டாம்..உண்மை..அவரது வரிகளில் அவரே...
“பின்னைநின் றென்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்கிலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ் செய்யுமாறே” /
திருமூலர் தமிழுக்கு நிகராக பின் நவீன எழுத்தாளர்களில் ஒரு சித்தரைச் சொல்லலாம்...அவர் யார் என்று உங்களுக்கே தெரியும்...ஹி.ஹி...திருமூலரே ஒரு சித்தர்தான்..அந்தச் சித்தர் யார் என்று பின் நவீனத்தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும்..சரி கொஞ்சம் தீவிரவாதம் கலப்போம்..
சக்தி நிபாதம் என்பது சக்தியின் வீழ்ச்சியைக் குறிக்கும்..ஆணவம் நான்கு நிலைகளை ஆதிதொடங்கி அந்தம் வரை நிலைபெறச்செய்யும்..அவை..மந்தரம்..மந்தம்..தீவிரம்..தீவீர தரம்...ஆணவம் ஒரு அழகான சகியைப்பெற்ற யோகியின் பால் மந்திர சக்தியென பிரவாகித்துச் சலம்பிச் சப்திக்கும்..அப்பிரவாகத்தைக் கட்டுப்படுத்தி அமைதிபெறச் செய்தால் தான் ஆத்ம சுத்தம் சித்திக்கும் என்று அற்புதமாய்ச் சொல்கிறார்..நம் தமிழ்த் தத்துவ மேதை திருமூலப்பாட்டனார்...அவருக்கு பாரத ரத்னா வேண்டாம்..ஒரு டாக்டர் பட்டமாவது கொடுக்கலாம்...
இருட்டறை மூலை இருந்த குமரி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம் பல காட்டி
மருட்டி அவளை மணம் புரிந்தாளே...[திருமூலர்]
மேற்கண்ட பாடலுக்கு ஊனக் கண்களால் போதிய அறிவாற்றலோ அனுபவ ஆற்றலோ இல்லாமல் பொருள் சொல்வதென்றால்..எதோ ஒரு இருட்டறையில் இருந்த சின்னப்பெண்ணை ஒரு குட்டுக் கிழவனுக்கு திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள்..அவளும் அந்தக் கிழவனை படுத்தி யெடுக்கும் ஆசையின் பொருட்டு மணம் செய்துகொள்கிறாள்..என்றும் சொல்லலாம்..ஆனால் இதன் தத்துவம் ஆழ்ந்த கல்வி ஞானமும் அனுபவ ஞானமும் உடையவர்களுக்கே விளங்கும்..பெருமாள் கோவிலுக்குக் கூட்டம் வருவதைப் பார்த்து சிவன் கோவில் பூஜையிலிருப்பவர்கள் பொறாமைப்படுகிறார்கள் என்றெண்ணிப் பூரித்துப் போகும் சிற்றறிவர்களுக்கு புல்லின் நுணியில் பூமியுருண்டையைக் காட்டும் பனியாய் உருவமிட்டு வண்ணங்களாய் மாற்றம் காட்டி..சித்துவிளையாடும்.. சிவனையும் அரங்கனையும் பார்க்கவோ புரிந்துகொள்ளவோ முடியாது...பிறகெப்படி திருமூலர் புரியும்...?போகட்டும் விடுங்கள்...
அந்தப் பாடலின் பொருள்..என் அளவில் ..உங்களுக்காகத் தருகிறேன்...ஆணவத்தால் தன் ஞானமிழந்த மனமெனும் மனிதப்பெண் இளமைமாறாதிருக்கிறாள்..அதனால் இருண்டிருக்கிறாள்..அந்த அஞ்ஞானத்தைப் போக்கினால்தான் நித்ய யெளவனமுடைய சிவனைப் பார்க்க முடியும்..அப்படியான அஞ்ஞானமெனும் குருட்டை நீக்கி நிஜ தரிசனம் காணும் ஆற்றல்பெற்றால் மிகவும் போற்றதலுக்குரிய கல்யாண குணங்கள் கொண்ட சிவமயமான அரங்கனை..உலக அரங்கிலெல்லாம் வியாபித்திருக்கும் சிவமென்ற ஞானத்தைக் கைகூடும் பாக்கியம் பெறலாம்..என்பதாகத்தான் பொருள் கொள்ளவேண்டுமென்று சான்றோர்கள் கூறிச் சென்றிருக்கிறார்கள்..ஆணவமே ஞானம்பெறத் தடையாயிருக்கிறதென்று எவ்வளவு அழகான எளிமையான பாடலில் சொல்லிச்சென்றிருக்கிறார் திருமூலர்...எளிமையான கவிதைகளின் பிரம்மா..ராஜன்..திருமூலர் என்றும் சொல்லலாம்...
வணக்கங்களுடன்..உங்கள்..அன்பன்..ராகவபிரியன்

Saturday, December 15, 2018

ragavapriyan rocks..

Ragavapriyan rocking the world literary scene like Gaja..My sincere thanks to Respected Madam Editor...with Namaskars..to all my friends well wishers literary lovers and my followers and readers...the world over...anban..ragavapriyan

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...