Thursday, February 1, 2018

நீல நிலா

காவிரியின் குளிர் இரவில்
எனது நிலாவை
விழுங்க வருகிறான் ராகு..
பதட்டத்துடன்
உடல் நடுங்குகிறது..
காவிரி தர்ப்பணத்திற்கு
எதற்குப் பஞ்சபாத்திரம்...
அர்க்கியம்
நீரில் தடங்களிடாது
கலந்துவிடும்..
பதட்டம் இமைகளைச் சுருக்குகிறது..
மஞ்சல் முழு நிலா
முக்கால் காவிரி
வெள்ளை மணலிலும்
மிதக்கிறது..
வேதம் சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள்
எதுவும் ராகுவைத் தடுக்க முடியவில்லை..
நிலா ஊதாவாகும்
வானவியல் அதிசயம்...
பதட்டம்..
முற்றும் நீலா நிலாவாய்
காவிரியின் ஓரஒட்டத்தை
பச்சையாக்குகிறது..
உடல் நடுங்க ஈரமாகி
பூணூலை
இடதும் வலதுமென
மாற்றி இடுகிறேன்..
இப்போது
நீரிலும் என் கண்ணீர்த் தடங்கள்..
எள்ளின் துகல்களை
விழுங்கப்பார்த்த மீனின்
கண்களிலும்
நீல நிலா...
என் கால் அழுக்கின் சுவையில்
திருப்தியுற்ற
மீனொன்று
குட்டிக் கரணமடித்துத் திரும்ப..
விழுங்க முடியாத ராகு
மெல்ல நிலாவை
உமிழத் தொடங்குகிறான்..
எனக்குப் பசிக்கிறது...
விரைவில்
ஆத்துக்குத் திரும்புகிறேன்..
ஆப்பம் ஏனோ
நீல நிலாவாய்க் கொதிக்கிறது...
ராகவபிரியன்...

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...