Thursday, February 14, 2019

இலக்கியத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் நிகழ்வு வரம் எனல் ஒருவகையில் ஒப்பமுடியுமெனினும் ஒரு புத்தகம் வெளியிடல் என்பது தற்காலச் சூழலில் ஒரு உலக யுத்தத்திற்கான ஒத்திகையாகிவிடுவது சாபமெனலாம்...பிடிபடாத நீண்ட வாசிப்பின் மிச்சவானில் மீந்திருக்கும் மேகத்தின் கருப்புப் பக்கங்களில் எதிர்தெரிவது அகதா கிறிஸ்தியின் முதல் இலக்கிய முயற்சி..1910 ல் தனது இருபது வயதில் ஒரு நாவல் எழுதி தனக்கான ஒரு புனைப்பெயரையும்.. மோனொ சில்லபா.. என்று சூட்டிக்கொண்டு ஒவ்வொரு பதிப்பகமாக ஏறி இறங்குகிறார்...சுமார் நான்கு ஆண்டுகள் ஆறு நாவல்கள் நிறைய சிறுகதைகள்..வெவ்வேறு புனைப்பெயர்கள்...ஆனால் அவரது படைப்புகளை வெளியிட எந்தப் பதிப்பகமும் அப்போது முன்வரவில்லை...காகிதக் கத்தைகளில் வெளிக்கொணர முடியாத எதோ ஒரு புதிர் அவரையும் அவரது படைப்புகளையும் மூடியிருந்தது...முதலாம் உலகப்போர் துவங்குகிறது...அவரின் படைப்பாக்கங்கள் தீவிர மாற்றங்களை உட்கொள்கிறது...அவிழ முடியாத புதிர்கள் கருக்கொள்கின்றன...
தனது முதல் நாவலான பாலைவனத்தின் பனித்துளி சீந்துவாரில்லாமல் காய்ந்துவிட்டதின் காயங்களைச் சுமந்து ..இன்னமும் புதிரான...அடுத்தப் பத்தாண்டுகள் தன் எழுத்தைப் புடம்போட்டு மின்னவைத்தும்...அவிழாத புதிர்குவியல்களின்.. விளைவாய் 1920 ல் அவரின் முதல் நாவலான ...வித்தியாசங்களின் புரியவியலா காதலீர்ப்பு.. அப்போதைய பிரபல பதிப்பகம் ஒன்றால் வெளியிட ஏற்றுக்கொள்ளப்பட்டது...அதுவும் நாவலின் முடிவை பதிப்பகம் சொல்வதுபோல் மாற்றித்தரவேண்டுமென்ற கட்டளையுடன்...
அன்றுதான் அகதா கிறிஸ்டி முதல்முறையாகப் பிறந்ததாக உலகம் இப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறது...ஷேக்ஸ்பியர் படைப்புகளும் பைபிலும் விற்பனையில் மில்லியன் பிரதிகளைத் தொட்டுக்கொண்டிருக்கும் இக்கால நிஜத்திலும் மூன்றாவதாக மில்லியன் பிரதிகளை அகதா கிறிஸ்டியின் படைப்புகள் இன்னமும் தொட்டுச் சாதனை செய்துகொண்டிருப்பதைக் கண்ணுறுகையில்...வரலாற்றுக்கான கதவு காக்கவைக்கப்பட்ட பின்பே திறக்கப்படுமென்பது தகவு...அந்தப் புதிர் நிறை தகவு தந்த...
ஒரு சின்ன நம்பிக்கை என் இதயத்தில் இன்னமும் உயிரோடு இருக்கிறது...அகதா தன் பத்தாவது வயதில் எழுதிய கவிதையை என்னளவில் உங்களுக்குத் தருகிறேன்...இது மொழியாக்கமோ மொழிமாற்றமோ இல்லை...
ஆநிரைகள்
புல்மேயும் மலைச்சரிவுகளில்
என் மனம் சரிந்துவிழுகிறது..
சரிவுகளிலும் சமன் வெளிகளிலும்
பூக்கள் மட்டும்
எப்போதும் நிமிர்ந்தே மலர்வதன் புதிர்..
என் இதயச் சரிவில்
மழைமேகமெனச் சரிகையில்..
பூக்களை
முத்தமிடும் பட்டாம் பூச்சிகள்
முத்தப் புதிரை
என்னுள் சரியவிட்டு
முத்தமிட்டபடி பறந்து செல்வது
சரியா...?
ராகவபிரியன்
புத்தக வெளியீட்டு விழவிற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கும்...உங்கள்...அன்பன்...ராகவபிரியன்

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...